Love Feeling Kavithai Tamil Lyrics-காதலின் கற்பனை சாகரத்தில் நீந்திப்பிடித்த கவிதை மீன்கள்..!

Love Feeling Kavithai Tamil Lyrics-காதலின் கற்பனை சாகரத்தில் நீந்திப்பிடித்த கவிதை மீன்கள்..!
X
காதலுக்கு எப்போதும் கற்பனை பஞ்சம் வந்ததில்லை. கவிஞன் ஆகணுமா? முதலில் காதலிக்கக் கற்றுக்கொள். கவிதையின் அருவி தானாக கொட்டும்.

Love Feeling Kavithai Tamil Lyrics

காதலுக்கு மட்டும் கவிதைகள் கூட்டுவதற்கும் கவிதைகள் கொட்டுவதற்கும் பஞ்சம் இருக்காது. காதலுக்கு மட்டுமே கற்பனையின் சாகரம் ஆழ்ந்தும் விரிந்தும் எல்லையற்று கிடக்கும். காதலர்கள் அந்த கற்பனை சாகரத்தில் நீந்தி சொற்களை கோர்த்து கவிதை வடிக்கிறார்கள்.

இதோ உங்களுக்காக காதலின் உருகும் வரிகள்

என் வரிகளில் உள்ள

வார்த்தைகளுக்கும்

உணர்வுண்டென

உணர்ந்தேன்

நீ துடித்தபோது

சற்றுநேரம்

அனுமதி கொடு

நம் இதயங்கள்

சேர்ந்து கட்டிய

காதல் மாளிகையை

விடவா

இது அழகென்று

பார்த்து விடுகிறேன்

Love Feeling Kavithai Tamil Lyrics

சத்தமின்றி

ஒரு முத்தம்

தினமும் உனக்கு

நீயறியாமல் கொடுத்து

மகிழ்கிறேன்

மௌனமாய் மனதுக்குள்


உனது வருகையே

நிர்ணயிக்கும்

எனக்கான

மணித்துளிகள்

உறைவதையும்

உருகுவதையும்

ஊடலின்

விரிசலை

காதலில்

நெய்கிறாய்

இருளெனை

சூழ்ந்து கொண்டாலும்

உன் நினைவொளியில்

வாழ்வேன்

நானும் அழகிய

உலகில் உன்னோடு

மிகவும் பிடித்த

பொருளொன்று

தொலைந்து

மீண்டும்

கைகளில்

கிடைத்தது போல்

மனம் மகிழ்வில்

உனை காணாமலிருந்து

கண்கள் கண்டதும்

Love Feeling Kavithai Tamil Lyrics

விழிகள் உறங்கிட

மறுக்கும்

போதெல்லாம்

உறங்க வைக்கிறான்

முத்த சத்தத்தில்

தாலாட்டி

கண்ணீர் எனக்கு பிடிக்கும்

அது என் கவலை தீரும் வரை

உறவுகள் எனக்கு பிடிக்கும்

அது உரிமையாக இருக்கும் வரை

உன்னை எனக்கு பிடிக்கும்

என் உயிர் உள்ள வரை.

உன் மார்போடு சாய்ந்து

முத்தம் பதித்து

என் நெஞ்சோடு உன் முகம் பதித்து

கொள்ள தவம்கிடக்கிறேன்.

உன் முகம் காணாத எனது ஏக்கம்

நீ அறிவாயோ

உன் விழிகளை காணும் வரை

என் கண்ணில் ஏது உறக்கம்!

நேசம் தாண்டியும்

உன்னிடம் எதோ ஒன்று இருக்கிறது.

தீண்டல்கள் இன்றி,பார்வைகள் இன்றி

மௌனத்தை மொழியாக்கி

உன் அன்பை எனதாக்கி

இறுதிவரை உன் அருகில்

நான் வாழ வேண்டுமடா.


இணையில்லா இணையதள வசதி இருந்தும்

இடைவிடாமல் பேச கட்டணமில்லா அழைப்பு இருந்தும்

நாள் முழுவதும் செலவிட முகநூல் இருந்தும்

நீ மட்டும் இல்லை என்னுடன்.

Love Feeling Kavithai Tamil Lyrics

என் மறு பாதியே

வெண்ணிலவை அருகில் பார்க்க வேண்டும்

என்று நீண்டநாள் ஆசை.

இன்று என் நீண்ட நாள் ஆசை

நிறைவேறியது

உன் முகம் என் கையில் இருக்கும் போது.

நான்கு திசைகள் இருப்பது தெரியும்

நான்கு திசைகளிலும்

நீ இருப்பது போல் தெரிகிறதே

அது ஏன் என்று தான் தெரியவில்லை

இது காதலா ?

இல்லை இதுவும் காதலா?

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்

கோபத்தில் உள்ள அன்பையும்

யார் ஒருவரால் உணர முடிகிறதோ

அவர்களே நமக்கு கிடைத்த

உன்னதமான உறவு.

சொல்ல நினைத்த

ஆசைகள் சொல்லாமல் போனதேன்?

சொல்லவந்த நேரத்தில்

பொல்லாத உன் நாணம் ஏன்? மங்கையே

இன்று உன் கண்கள்

மயக்கம் கொண்டதேன்?

Love Feeling Kavithai Tamil Lyrics

பாசமா பேசுற

எல்லோர் மனசலையும் பாசம் இருக்காது

ஆனால் உரிமையோடு சண்டை போட்டு

கோபப்படறவங்ககிட்ட உண்மையான பாசம் இருக்கும்.

உன் இதயத்தை கேட்டுப்பார்

ஒவ்வொரு துடிப்பிற்கும் அர்த்தம் சொல்லும்

என் இதயத்தை கேட்டுப்பார்

துடிப்பின் அர்த்தமே நீ மட்டும்தான் என்று சொல்லும்.

என் இதய புத்தகத்தில்

உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன்

அதனை

நான் மட்டுமே படிக்கவும் நெனைக்கிறேன்

உனக்கு தெரியாமலே!


உன்னை

அணைக்க வேண்டும் என்பதற்காக

உன்னை நெருங்கவில்லை

உன் அருகில்

இருக்க வேண்டும் என்பதற்காக

உன்னை நெருங்கிகிறேன்.

நமக்கு பிடித்த உறவை சேரவும்

முடியாமல்

யாருக்கும் விட்டு கொடுக்கவும்

முடியாமல்

தவிக்கிற நொடி தான்

இந்த உலகத்துலயே கொடுமையானது.

Love Feeling Kavithai Tamil Lyrics

பலமுறை விக்கல் எடுத்தும்

ஒருமுறை கூட தண்ணீர் குடிக்கவில்லை

ஏனென்றால்

நினைப்பது நீயாக இருந்தால்

நீடிக்கட்டும் சில நிமிடம் என்று.

இனி பார்க்க முடியாதுபேச முடியாது

என்று சொல்லும்

தருணத்தில்தான்

ஆண்களின் காதல் ஆரம்பிக்கிறது!

பெண்களின் காதல் முடிவடைகிறது!

யாருக்காகவோ காத்திருக்கிறது

வாழ்க்கை இல்லை

யாரு நம்மளால சந்தோசமா

இருக்காங்களோ

அவங்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை.

தன்னை

ரசிக்க வைத்த நிமிடங்களை விட

தன்னை பற்றியே

நினைவுகளை தர முடிந்தால்

அவளே உன் அன்புக்கு உரித்தானவள்.


கூட்டமாய் இருக்கும் போதும்

தனிமையை விரும்புகிறேன் ஏனெனில்

தனிமையில் மட்டுமே

உன் நினைவுகள் என்னுடன் இருக்கிறது.

தென்றலுக்கு தெரியவில்லை

அது தீண்டுவது

ஒரு தேவதைஎன்று

அதனால் தான் அது கவிதை எழுதவில்லை

என்னைபோல!

Love Feeling Kavithai Tamil Lyrics

என் மீது

வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை

உன்னை விட

அதனாலே கெஞ்சு நிற்கிறேன் உன்னை

என்னை காதலி என்று.

பெண் நேசிக்கவும் காரணம் தேடமாட்டாள்

வெறுக்கவும் காரணம் தேட மாட்டாள்

அதற்கான சந்தர்ப்பத்தை

ஆண் உருவாக்காதவரை.

என்ன ஒரு விந்தை?

இந்த காதலில் மட்டும்?

கண்கள் தானே அவளை பார்த்தது!

பின்பு எதற்கு

இந்த மனது இப்புடி அலைமோதுகிறது.

நினைத்து கூட பார்க்கவில்லை

நீ கிடைப்பாய் என்று

கிடைத்தவுடன் புரிந்து கொண்டேன்

நானும் அதிர்ஷ்டசாலி என்று.

Love Feeling Kavithai Tamil Lyrics

என் வாழ்வில்

எத்தனை துன்பங்கள் வந்தாலும்

தாங்கி கொள்வேன்

ஆறுதல் கூறுவதற்கு

நீ என் பக்கத்தில் இருப்பாயானால்.

யாரோடு வள முடியுமோ

அவரோடு வாழ்வதல்ல வாழ்க்கை

யாரின்றி வாழ முடியாதோ

அவரோடு வாழ்வதுதான் வாழ்க்கை

ஒரு நாளில்

உன்னை ஆயிரம் பேர் நினைக்கலாம்

ஆனால் ஒரு நாளில்

உன்னை ஆயிரம் முறை நினைப்பது

நான் மட்டும் தான்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!