love and healthy intimacy-காதலிக்கணுமா..? முதலில் உங்களை நீங்கள் காதல் செய்யுங்கள்..! வாழ்க்கை நல்லா இருக்கும்..!

love and healthy intimacy-காதலிக்கணுமா..? முதலில் உங்களை நீங்கள் காதல் செய்யுங்கள்..! வாழ்க்கை நல்லா இருக்கும்..!
X

love and healthy intimacy-காதல் வாழ்க்கை (கோப்பு படம்)

love and healthy intimacy-காதல் என்பதில் காதலி அல்லது காதலன் என்பது மட்டுமே உறவல்ல.கணவனும் மனைவியும் கூட காதலர்களே. எப்படி இருந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்பதை விளக்கும் கட்டுரை.

காதலிக்க ஆசையா? முதலில் உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்

love and healthy intimacy- எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று கூறிக்கொண்டு காதல்தான் அதற்கு மருந்து என்று நினைப்பது உங்களை நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தமாகும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போனதற்கு ஏதாவது ஒரு உறவுதான் காரணமாக இருந்திருக்கும். என்றால் மீண்டும் ஒரு உறவைத் தேடிப் போவது மீண்டும் அந்த சுழலுக்குள் சிக்கிக்கொள்வதற்கு சமம் அல்லவா? உணர்வு ரீதியாக முதிர்ச்சியடையாத ஒருவருடன் காதல் உறவைத் தக்கவைத்துக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று உங்களை பிறர் எண்ணமாட்டார்களா..?


ஆரோக்யமான உறவின் ஐந்து அத்தியாவசியப் பண்புகள்

இது உங்களுக்கு சமூகத்துடனான ஒரு வலுவான தகவல் தொடர்புத் திறனை அதிகப்படுத்தும். மேலும், மோசமான பாதிப்புகளை உருவாக்கும் நடத்தை உடையவர்களை தவிர்க்கும் திறனை உங்களுக்கு உருவாக்கவும் உதவும்.

1. சமூகம், ஊடகங்கள், இலக்கியம் மற்றும் சமூக ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் காதல் கற்பனைக்குரியது. அங்கு காதலைப்பற்றி பரப்பப்படும் கருத்துகள் தவறானவை. காதல் உங்கள் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் என்று நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக்கூடாது. உங்கள் காதலுக்கு நீங்கள் ஒரு சரியான ஒருவரை சந்திக்கவேண்டும். அப்படி உங்களுக்கான சரியானவரை தேர்வு செய்தால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

love and healthy intimacy

2. ஏற்கனவே காதலில் உடைந்து போனவர்களுக்கு சிறிய ஆதரவு கூட பெரிய ரட்சிப்பாகத் தெரியும். ஆனால், அந்த ரட்சிப்பு அவர்களின் உண்மையான காதல் பார்வைக்கு சரியான தேர்வாக இருக்குமா என்பது விவாதத்துக்கு உரியது.

ஏனெனில் காதலில் தோற்றுப்போனவர்கள் வாழ்க்கையே தொலைந்துபோனதாக உணர்ந்து நிம்மதியற்று வாழ்வார்கள்.அத்தகையோருக்கு கிடைக்கும் ஆறுதலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அது எப்படியானவரிடம் இருந்து கிடைக்கிறது என்பதை சிந்திக்கும் மனப்பான்மையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். மீண்டும் ஒரு தோல்வி அடையும்போது மட்டுமே அதை உணர்வார்கள்.

3. காதல் மற்றும் உறவு முறைகள் குறித்த தெளிவான பார்வை அறிதல் அவசியம்.


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருந்து, அந்த மகிழ்ச்சி இன்மையை காதல் காப்பாற்றும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது கீழே தரப்பட்டுள்ளது :

1. உங்கள் தேவைகளை நீங்கள் காதலிப்பவர் பூர்த்தி செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

2. உங்களின் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளால் நீங்கள் காதலிப்பவரை சுமந்துகொண்டு இருக்கிறீர்கள்.

3. நீங்கள் காதலிப்பவரின் நடத்தையால் நீங்கள் அதிருப்தியாகவும் அடிக்கடி விரக்தியாகவும் உணர்கிறீர்கள்.

4. நீங்கள் காதலிப்பவர் உங்களை ஒருபோதும் மகிழ்வித்துவிட முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் அவர்களை மாற்ற முயற்சிக்கிறீர்கள். (அதற்கு "உங்களுக்கு ஒரு கட்டுப்படுத்தும் ஆளுமை உள்ளதா?" என்று பார்க்கவும்)

5. நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். மேலும், நீங்கள் காதலிப்பவர் உங்களை சிறப்பாக மகிழ்ச்சியில் திருப்திப்படுத்துவார் என்று கற்பனை செய்கிறீர்கள்.

இப்படி இந்த 5 டிப்ஸ்களில் உங்களை நீங்கள் மதிப்பீடு செய்யுங்கள். மகிழ்ச்சியின்மையை போக்குவதற்கு காதலை வடிகாலாக தேடுவது வெவ்வேறு நபர்களுடன் ஒரே மாதிரியான உறவுச் சிக்கல்களை உருவாக்குமே தவிர மகிழ்ச்சி என்கிற தீர்வு உங்களுக்கு கிடைக்காது. அடிக்கடி உறவுகளை மாற்றுகிறீர்கள். ஆனால், விளைவுகள் என்னவோ ஒன்றுதான். நீங்கள் தனிமையாகவும் ஏமாற்றமாகவும் இருப்பதே நீடிக்கிறது.

காதலில் ஏற்படும் சவால்கள்

ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன்( அதாவது ஒரு ஆணும் பெண்ணும்) உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருப்பது உலகில் மிகவும் சவாலான காரியங்களில் ஒன்றாகும். இந்த கருத்தை தவறு என்று நீங்கள் நினைத்தால் தற்போதைய விவகாரத்து சதவிகிதங்களைப் பாருங்கள்.

love and healthy intimacy


இருவருக்கான நெருக்கத்தை ஆரோக்யமானதாக உருவாக்க ஐந்து அத்தியாவசிய பண்புகள் வெளிப்படவேண்டும். அப்படி இருப்பின் காதல் செழித்து வளமாக அதிக வாய்ப்புள்ளது:

1. உணர்வு முதிர்ச்சி.

2. வலுவான தொடர்புத் திறன்.

3. சங்கடமான உணர்வுகளைச் செயலாக்கும் திறன்.

4. மோசமான நடத்தைக்குள் சிக்குறாமல் சகிப்புத்தன்மையை உருவாக்கிக்கொள்ளும் திறன்.

5. வலுவான சுய உணர்வு அல்லது சுயகட்டுப்பாடு

இந்த குணங்கள் அனைத்தும் பொதுவானவை என்று ஏன் நாம் கொள்ளவேண்டும்? உறவு என்பது நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு அங்கம். அது இல்லாமல் தனித்து நாம் வாழமுடியாது. உங்களுக்கான உறவை நீங்கள் மதித்து நடந்தால் உங்கள் மீதான மதிப்பும் உயரும். அதேபோல சுயமாக செயல்பட அனுபதிப்பதும் உறவினை மேம்படுத்தும். இந்தப் பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்வதும் ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவுக்குத் தயாராவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

சுய அன்புடன் தொடங்குதல்

உறவுகள் உங்கள் உள் வாழ்க்கையின்(inner life) பிரதிபலிப்பு என்பது உளவியல் நிபுணர்களின் நீண்டகால நம்பிக்கையாகும். உதாரணமாக, உங்களுக்கு சுயமரியாதை குறைவாக இருந்தால், உங்கள் உறவும் அதைத்தான் பிரதிபலிக்கும். நீங்கள் உறவுகளுடனான மோதல்களைத் தவிர்க்கலாம். மேலும் உங்கள் தேவைகளுக்கு இடமளிக்கலாம் அல்லது வேண்டாம் என்று விட்டுவிடலாம்.

love and healthy intimacy


ஆரோக்கியமான நெருக்கத்திற்கான ஐந்து குணாதிசயங்கள் ஏன் மிகவும் முக்கியமானவை?

உணர்வு ரீதியாக முதிர்ச்சியடையாத ஒருவருடன் உறவைத் தக்கவைப்பது அசாதாரணமான மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

உங்களின் முதிர்ச்சியில் உள்ள இடைவெளிகளை மூடுவது, உங்கள் தகவல் தொடர்புத் திறன்களை மெருகூட்டிக் கொள்வது மற்றும் உங்கள் சுய உணர்வை வலுப்படுத்திக்கொள்வது உங்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான அதிவேக பாதையாக அமையும்.

வலுவான உறவுகளை உருவாக்குதல்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிருப்தி அடைந்தால் அல்லது மகிழ்ச்சி இழந்தால், இது இல்லாவிட்டால் அது என்று மன மாறுதல் அடையக்கூடாது. உங்களுக்கானது எது என்பதே உறுதியான உறவை உருவாக்கும். அதற்கு முதலில் உங்களை நீங்கள் காதலிக்க வேண்டும். ஆமாம், உங்களை நீங்கள் நேசியுங்கள். உங்களுக்கான காதல் உங்களைத் தேடி வரும். அதுதான் எப்போதும் பலன் தரும் முதலீடு.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!