long distance relationship quotes in tamil-நீ இங்கு சுகமே..நான் அங்கு நலமா..? தூரதேசத்து காதல்..!
long distance relationship quotes in tamil-பிரிவில் மட்டுமே காதலின் வலிமை அதிகமாகின்றது. கண்களால் நேரில் காண்பதைவிட மனதுக்குள் உருகித்தவிப்பதே உண்மைக்காதலுக்கான இலக்கணம்.
HIGHLIGHTS

long distance relationship quotes in tamil-காதல், அது இருந்தாலும் மோசம். இல்லையென்றாலும் மோசம். இருந்தால் தூங்கவிடாது. இல்லையென்றாலும் தூங்கவிடாது. காதல் செய்பவர்கள் பிரிந்து இருந்தால் தூங்கவிடாது. காதல் இல்லாதோருக்கு காதலைத்தேடி தூக்கம் வராது. அப்படின்னா ரெண்டுமே மோசமான சூழல்தான். இருக்கு ஆனா இல்ல..என்பது போல இருந்தாலும் குத்தம் இல்லேன்னாலும் குத்தம்..என்ன செய்யலாம்..? நாம் வடிவேல் சார்கிட்டதான் இதுக்கு ஐடியா கேக்கணும்..
- நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லையே.. கண்கள் இரண்டும் உன்னையே தேடுகின்றன..
- நிலவைப் போல தொலைதூரத்தில் இருக்கும் காதலனுக்காக மனச் சோர்வுடன் காத்திருக்கும் காதலி..
- அணைத்து வருடிக் கொண்டிருக்கும் காதலைக் காட்டிலும், நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே புனிதமானது..!
- நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும், உன் மனதில் நானும் என் மனதில் நீயும் உள்ளுக்குள் இருக்கிறோம்..
long distance relationship quotes in tamil
- நம் நினைவுகளுடன் விடிகிறது ஒவ்வொரு பொழுதும்... நம் புகைப்படங்களுடன் நகர்கிறது ஒவ்வொரு ஊரடங்கும்..
- உன்னுடன் குட்டிக் குட்டி சண்டையிட்டு மகிந்த அழகிய நாட்களை தொலைத்து விட்டேனடி கண்மணி.. நீ என்னை விட்டுத் தொலைதூரம் சென்றபின் அந்த, நாட்கள் கிடைக்காதா என்று என் மனம் ஏங்கித் தவிக்கிறது .. அந்த நாட்களை எண்ணிக் காத்திருக்கிறேனடி என் கண்மணியே..
- உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்.. காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண..
- ஓ..காலமே..தூரத்து இடைவெளியை கொஞ்சம் சுருக்கி விடேன்.. சுருங்கிய இதயமிரண்டும், சுகமாகத் துடிக்கட்டும்..
long distance relationship quotes in tamil
- அது ஒரு இதமான காலை நேரம். ஏனோ என் நெஞ்சில் சிறு பாரம். என்னையும் அறியாமல் கண்களில் ஈரம். காரணம் நமக்குள் இருக்கும் தூரம்..எப்போது இது தீரும்..?
- இடைவெளி குறைவதற்காக வாழ்வது காதல் அல்ல.. இடைவெளி நீண்டாலும், இடைவேளை விடாது நினைவுகளை பரிமாறிக் கொள்வதே உண்மைக் காதல்..
- நீயற்ற இரவுகள்..தீ சுட்ட இரவுகளாக சற்று தாமதமாகவே விடிகின்றன.. உன் வருகைக்கான தேதி பார்த்து காத்திருக்கிறது ஊமையாய் என் நெஞ்சம்..
long distance relationship quotes in tamil
- நீயில்லா ஒவ்வொரு பொழுதிலும், நாம் ஒன்றாக இருந்த மகிழ்ச்சித் தருணங்களை மீள்நினைவு கொள்கிறேன்..அங்கு நம் நினைவுகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை..!
- உனைச் சேரவே இப்பிறவி எடுத்தேன். உன்முகம் காணுகையில், என்முகம் மறந்தேன். உன் கைகோர்த்து நாம் வலம் வரும் காலம் என்றோ? உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.. பல கனவுகளுடன்...
long distance relationship quotes in tamil
- நாட்கள் கடந்தன என்னவளை சந்திக்காத நாட்கள் தொடர்ந்தன.. சில நாள் போன் தொடர்பிலும், பல நாள் பிரிவின் துயரிலும், எங்கள் தொலைதூர காதல் தொடரத்தான் செய்தது. இன்று நான் பெற்ற அந்த பொற் தருணம், அனுபவித்த துன்பங்கள் எல்லாம் மறைந்துபோனது.. ஆம் என்னவளை நேரில் கண்டு அவளைக் கட்டி அணைத்த தருணம், இருவர் கண்களிலும் ஈரம்..
- இடைவெளி கூடும்போதுதான், உன் மீதான அதீத காதலை அதிகமாக உணர்கிறேன்..பிரிவின் வேதனையிலும் நீ இல்லாத நேரங்களில் உன் நினைவுகள்..என் கண்களுக்குள் திரைப்படங்களாக ஓடுகின்றன..நாம் சந்தித்துக்கொண்ட..காட்சிகள்..
- அருகாமையில் உள்ள காதல் எல்லாம் சேர்வதுமில்லை, தொலைவில் உள்ள காதல் எல்லாம் பிரிவதுமில்லை..அது மனதால் வாழ்கிறது..
long distance relationship quotes in tamil
- தொலைவு என்பது, இரு உடல்களுக்கு இடையில் மட்டுமே.. இரு உள்ளங்களுக்கு இடையில் இருப்பது இல்லை..உள்ளத்தால் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக..
- நீ ஒவ்வொரு முறையும் பிரிந்து செல்லும் போது தான் தெரிகிறது, தூரங்கள் நம் உறவை பிரிக்கவில்லை, இன்னும் ஆழமாக்குகிறது என்று..பிரிவும் ஒரு காதல் பாடம்தான்..!
- நீ தொலைதூரம் சென்றாலும், தொலைபேசி தொடர்பில்லாமல் இருந்தாலும், தொடர்ந்து தொல்லை செய்துகொண்டுதான் இருக்கிறாய்... உன் நினைவுகளால்..எனக்குள்..!
long distance relationship quotes in tamil
- எத்தனை உறவுகள் என்னைச் சுற்றி இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தானடி..
- தூரங்கள் ஒன்றும் நம்மை பிரித்துவிடமுடியாது..என்னவளை..துயிலில் சந்திப்போம் வா என் கனவில்...உல்லாச ஊர்வலம் போவோம்..விடிய விடிய..!
- உன் குரல் எனக்கு குற்றால நீர்வீழ்ச்சியடி..உன் இனிமைக்குரல் சாரலாக என் செவிகளுக்குள் எட்டியதும் உள்ளம் குளிரில் நடுங்குகிறதடி..
- உன் அருகாமை மட்டுமல்ல உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது, நீ தூரத்தில் இருந்தாலும் உன் குறும்பு இன்னும் போகவில்லை..
long distance relationship quotes in tamil
- உரசிடும் காதலோ, விரல்கள் கோர்த்திடும் காதலோ எங்களுக்குள் தேவையில்லை.. தூரமாயினும்…
- உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்கத் தோன்றும் அன்பு போதும்..
- உன் உள்ளத்தின் மனை முற்றத்தில் நிலவாக நீ..வருகிறாய்..ஆனால்..ஒருநாள் கூட தேய்பிறை வருவதில்லை . தினம் தினம் பௌர்ணமியே..
- நீ என்னிடம் பேசவில்லை எனில், சில நேரம் அழுகை வரும்..சில நேரம் கோபம் வரும்..ஆனால் உன் நினைவுகள் மட்டும் எனோ எண்ணில் இருந்து விடைபெற மறுக்கின்றன. ..
long distance relationship quotes in tamil
- பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் வலிமை அதிகம்..
- நீ என்னை வீட்டு தூரமாக இருப்பதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனும்போது நீ என்னோடு பேசாமல் இருந்தால். என் உள்ளம் தாங்குமா..
- நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்..உறவினர் சூழ..ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே..!