ஊனமான மகனை மகிழ்வோடு ஏற்கும் தாய், முயற்சி இல்லாதவனை வெறுத்து ஒதுக்குவாள்..!
X
By - K.Madhavan, Chief Editor |23 Sept 2022 4:47 PM IST
Life Tamil Quotes for Self Confidence-வீழ்ந்துகிடக்கும் வரை உனக்கே, உன்னை பிடிக்காது. எழுந்து நடக்கும்போதுதான் புத்துணர்ச்சி எழும். உனக்கே உன்னைப் பிடிக்கும்.
Life Tamil Quotes for Self Confidence
நம்பிக்கை என்பது மனதால் வருவது. வேறு யாரும் ஊட்டமுடியாது. முயற்சி இருப்பவனுக்கே நம்பிக்கை எனும் விதை முளைக்கும். வீழ்ந்தாலும் விதையாகத்தான் விழுவான். விருட்ஷமாக எழுவான்.இயற்கை நமக்கானதே. கொஞ்சிச் சிரிக்கும் குழந்தையைப் பார், பரந்து விரிந்த வானத்தைப் பார்..அந்த செஞ்சுடர் சூரியனைப்பார்..பறக்கும் பறவைகளைப்பார்..அகண்டு விரிந்த கடலைப்பார்..ஒவ்வொன்றையும் ரசித்துப்பார்..தன்னம்பிக்கை தானே வளரும்.
- முயற்சி செய்ய தயங்காதே.. முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும். எல்லோரும் பயணிக்கிறார்கள்
- என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..
- நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவரிடத்தில் மட்டுமே வரும்.
- வெற்றி இறுதியுமில்லை. தோல்வி முடிவுமில்லை. தொடர்வதன் துணிவே பெரிது..
- விழுதல் என்பது வேதனை. விழுந்த இடத்தில மீண்டும் எழுதல் என்பது சாதனை.
- வியர்வையும் கண்ணீரும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவைகள் தான் உங்கள் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.
- கரையும் மெழுகில் இருளை கடக்க முடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.
- நம்பிக்கையுடன் ஓடி கொண்டே இரு நதி போல. வெற்றி காத்திருக்கும் உனக்காக ஒரு இடத்தில கடல் போல..
- மலையை பார்த்து மலைத்து விடாதே,மலை மீது ஏறினால் அதுவும் உன் கால் அடியில் இருக்கும்..
- நான் மெதுவாக நடப்பவன் தான். ஒரு போதும் பின் வாங்குவதில்லை.
- எப்போதும் அச்சத்தில் இருப்பதய் விட ஒருமுறை ஆபத்தை சந்திப்பதே மேல்.
- முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் முழுமையான வெற்றி நிச்சயம்.
- விதைகள் கீழ் நோக்கி எறிந்தால் தான் மேல் நோக்கி விரிச்சமாக வளரும். அதுபோல விழும் போது விதையாக விழு. எழும் போது விருட்சமாய் ஏழு.
- நம் மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
- பறவைகள் தன் சிறகுகளையே நம்புகின்றன. அமர்ந்திருக்கும் கிளையை அல்ல. நீ உன்னை மட்டும் நம்பு
வெற்றி நிச்சயம்.
- கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு கப்பலை கவிழ்க்க முடியாது. கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம். வாழ்க்கையின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது
- நீங்கள் அனுமதித்தால் தவிர..வாழ்க்கை உங்கள் கையில்..
- நம் நிலை கண்டு கை கொட்டிச் சிரித்தவர்களை கை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிக்கான வாழ்க்கையின் அடையாளம்..
- வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பாடங்களில் ஒன்று பொறுமையாக இருப்பது எப்படி என்பது.
- வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பவர்கள், நீ வெற்றி பெற்ற பிறகு விடா முயற்சி என்பார்கள்.
- ராஜாவாக இருக்க வேண்டுமென்றால், ராணியை ஒருபோதும் தேடாதே..ராஜாங்கத்தை தேடு..
- மதித்தால் மலராக இரு.. மிதித்தால் முள்ளாக இரு..
- தூக்கி விட்டவரை நன்றியோடு நினை.. தூக்கிப் போட்டவரை கனவில் கூட நினைக்காதே..
- இன்று உனக்கான வலி நாளைய வலிமை.. உனக்கான பாடங்கள்..!
- ஓட நினைப்பவனுக்கு பல வழிகள். ஆனால் அவனை துரத்துபவனுக்கு ஒரே வழி தான் உண்டு. அவன் உன் பின்னால் தான் ஓடி வரவேண்டும். அதனால், துரத்துபவனாக இருக்காதே. ஓடுபவனாக இரு..
- ஏமாற்றியவர்களுக்கு ஒரு பாடம் சொல்லிச் செல்லுங்கள். இன்று எனக்கு, நாளை உனக்கு... என்று விலகுங்கள்.
- கஷ்டங்களும் நிரந்தரமில்லை, கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை. நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்கள் மட்டும் நிரந்தரமாகிவிடுமா என்ன..?
- கனவைக் கண்டதோடு நிறுத்தி விடாமல், கனவு நனவாகும் வரை ஓடுங்கள்..முனைப்புடன்..
- ஒவ்வொரு விடியலும் உங்களுக்கான அடுத்த வாய்ப்பு..அதை பயன்படுத்துவதே சாதனைக்கான அடையாளம்..!
- ஒரு நொடியில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம்.. ஆனால் ஒரு நொடி சிந்தித்தால் அதே வாழ்க்கையை வென்று விடலாம்.
- முடிவெடுத்தால் முடியாதது ஒன்றுமில்லை. துணிந்துவிட்டால் வெற்றி ஒரு தூரமும் இல்லை.
- விழுவது தவறல்ல. ஆனால், வீழ்ந்து அப்படியே கிடப்பதுதான் தவறு.வாழ்க்கையே முடங்கிப்போகும்..!
- விடாமுயற்சியை கடலிடமும், கடமை தவறாமையை கதிரவனிடமும், உத்வேகத்தை காட்டாறிடமும், சுறுசுறுப்பை தேனீக்களிடமும், உழைப்பை எறும்புகளிடமும் கற்றுக்கொண்டு உன் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்..
- ஆயிரம் உறவுகள் நம் வாழ்க்கையில் இருந்தாலும், அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் எதிர் கொள்ள வேண்டும். அவரவர் மனம் அவரவர் பாதை. அவரவர் பயணம் அவரவர் வாழ்க்கை..
- நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய சமுத்திரம் இருக்குன்னு கவலைப்படாதே.. அந்த சமுத்திரத்துக்கு முன்னால் நான் தைரியமா நிக்கிறேன்னு சந்தோஷப்படு…
- வலியில் துவண்டு, கவலையை எதிர்கொண்டு, அவமானங்களைதாங்கி, துரோகத்தைக்கடந்து வாழ்கின்ற நாட்களில் துளிர்த்தெழும் புன்னகைதான் உயிர்களின் ஆகச்சிறந்த நம்பிக்கை..
- நேரம் சரியில்லை என்பது திறமை இல்லாதவன் பேசும் வெட்டிப்பேச்சு. எனக்கு உழைப்பதற்கு நேரம் போதவில்லை என்பவனே வெற்றி பெறுகிறான்..
- நம்மை மதிக்காதவர்களை எண்ணி காலத்தை வீணாக்கக் கூடாது.நம்மை மதிப்பவர்கள் யார் என்பதை அறிந்தால் தன்னம்பிக்கை தானே வளரும்.
- தன்னம்பிக்கை இருக்கும் வரை தலைக்கனம் நம்மை நெருங்காது. தலைக்கனம் இருக்கும் வரை தன்னம்பிக்கையும் நம்மிடம் நிலைக்காது..
- இழந்தது எதுவாயினும் அதைவிட சிறந்தது நமக்காக காத்திருக்கிறது என்று தேற்றிக்கொள்பவனை வெற்றி தேடி வரும்
- யார் சொன்னது உனக்கு உதவ யாரும் இல்லை என்று? நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால் காலம் முழுவதும் உனக்குள் குடியிருப்பேன் என்று உனக்குள்ளே இருக்கிறதே, தன்னம்பிக்கை...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu