life sad quotes in tamil-கண்ணீருக்குப் பின்னால் ஒரு சோகத்தை சுமக்கிறேன்...! வாழ்க்கையே சுமையானது..!
life sad quotes in tamil-சோகம் கலந்த வாசகங்கள்.(கோப்பு படம்)
life sad quotes in tamil-சோகம் என்பது ஒருவகை நோயைப்போன்றது. ஆமாம். அது உயிரையே கொல்லும் ஆட்கொல்லி நோய். சோகத்தால் வரும் கவலை உடலை வருத்துவதைவிட மனதை வருத்திக்கொல்லும். மனசு கெட்டால் உடலும் பலவீனமாகும். இப்படி சோகத்தின் வடுக்கள் சொல்லித்தீராது. அந்த சோகத்தை சொல்லும் வாசகங்களைப் படீங்க.
என் அதீத ஆசையெல்லாம்,
என் மனம் கஷ்டப்படும் போது.
என் வார்த்தையைக் கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே.
ஒரு துளி அன்பை தந்து விட்டு,
பல துளி கண்ணீரை
கறந்து விடுகிறது.
போலியான சில உறவுகள்...!
எட்டி உதைக்கிறது காலம், எட்டி
பார்க்கிறது துயரம். திடீரென வலிக்கிறது.
வலியை மறைத்து ஒரு நொடி சிரித்தால்,
அடுத்த நொடி வந்து விடுகிறது சோதனை.
என்னடா வாழ்க்கை இது...!
life sad quotes in tamil
வலி கண்ணீரில் மட்டுமே
இருப்பதில்லை. சில நேரம்
சிரிப்பிலும் மறைந்திருக்கும்.
ஆசையில் தொடங்கிய வாழ்க்கை.
ஆசை தகர்ந்து, இது பேராசையோ!
என எண்ண வைத்து
நிராசையில் முடிகிறது வாழ்க்கை.!
life sad quotes in tamil
வெளியே காண்பிக்க முடியாத
காயங்கள் ஏராளம் என்னுள்.
அழுது தீர்ப்பதா இல்லை,
அனுஅனுவாக அனுபவித்து சாவதா.
என் காயங்களை கவி வடித்தால்
கவியும் காயப்படும்.
என் வலிகளை வரி வடித்தால்
வரியும் வலி கொள்ளும்.
வெளியே சிரிப்பது
தெரிந்தவர்களுக்கு.
உள்ளே சிதைபட்டு
சிறைபட்டு கிடப்பது
தெரியவில்லை ஏனோ...!
எழுத்துக்களை கோர்வையாக்கி
காயங்களை கவிதைகளில் கரைத்தாலும்.
வரிகளில் சொல்லமுடியாத வலிகள்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒளிந்துள்ளது.
life sad quotes in tamil
என் வலிகளை வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் இங்கு தினமும்.
இந்த கிறுக்கனின் கிறுக்கல்
ஓர்நாள் ரசிக்கப்படாலாம்!
என்ற நம்பிக்கையில்..!
என் பாதைகள் எல்லாம்,
கண்ணீர் நிரம்பியவை.
என் கவிதைகள் எல்லாம்,
சோகம் ததும்பியவை.
நான் இனி வாழ வேண்டியது,
கல்லறை செல்லும் வரை.
வழிகளைத் தேடித் தான் செல்கிறோம்..
ஆனால் போகும் இடமெல்லாம்
காத்திருப்பது என்னவோ
வலிகள் மட்டும் தான்.
எளிதில் கிடைப்பதில்லை..
எல்லா சூழ்நிலைகளிளும் நம்மை
புரிந்துகொண்டு
நம்முடன் நமக்காக
இருக்கும் உறவுகள்...
தவறை சரியாக செய்தவன்
தலை நிமிர்ந்து நிற்கிறான்..
நல்லதை தவறாக செய்தவன்
தலை குனிந்து நிற்கிறான்..
life sad quotes in tamil
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போல தான்...
தூரத்தில் இருந்து பார்த்தால்
ஒளி மட்டுமே தெரியும்..
அருகில் சென்று பாருங்கள்
உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu