Life quotes in tamil-அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்தா ஏமாளியாகணும்..!
![Life quotes in tamil-அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்தா ஏமாளியாகணும்..! Life quotes in tamil-அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்தா ஏமாளியாகணும்..!](https://www.nativenews.in/h-upload/2023/09/12/1778182-confident4.webp)
Life quotes in tamil-வாழ்க்கை மேற்கோள்கள் (கோப்பு படம்)
Life quotes in tamil
வாழ்க்கை என்பது இன்ப துன்பங்கள் என இரண்டும் கலந்ததே. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. பொதுவாக வாழ்க்கையில் பிறரால் அல்லது நம்பியோரால் தான் ஏமாற்றங்கள் நிகழும். நல்லவர் என்று நம்பி இருப்போம். ஆனால் அவர்களே நம்மை ஏமாற்றி இருப்பார்கள். நம்பியவர் ஏமாற்றும் போதுதான் அதன் வலியும் அதிகமாகிறது.
அதனால் வாழ்க்கையில் நாம்தான் யாரை நண்பர் ஆக்குவது, யாரை தூரத்தில் வைப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். அதற்கு முதலில் நாம் வாழ்க்கையை புரிந்துகொள்வது அவசியம். அநியாயத்துக்கு நல்லவர்களாக இருப்பது ஏமாளித்தனமாகும்.
Life quotes in tamil
அதனால், வாழ்க்கையின் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பிடிங்க. வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள்.
இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்.அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்.
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து. சில காயங்களுக்கு பிரிவு மருந்து. எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி
உண்மையாக இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம் ஏமாற்ற படுகிறார்கள். எண்ணெயில் அவர்கள் நல்லவர்கள்.
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல. அது ஒரு பூங்காவனம். ரசித்து வாழ்வோம். வாழ்க்கை இனிக்கும்.
Life quotes in tamil
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மொத்த பிடிவாதத்தையும் உடைக்கும் வலிமை பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு
வாழ்க்கை என்றுமே அழகானது தான், உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்.
அன்பைத் தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம். கெட்டவர்களும் நமக்கு கற்றுத்தரும் நூலாக இருக்கிறார்கள். நல்ல நூலை தேர்வு செய்து படிப்பது நமது கையில்தான் உள்ளது.
Life quotes in tamil
அழ நினைத்தால் ஆசைதீர அழுதுவிடு கண்ணீரின் முடிவில் சுமைகளும் கரையுமென்றால்
இழந்து விட்ட இடத்தை முயற்சியால் மீண்டும் பிடித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாது. சிந்தித்து செயல்படுங்கள்
வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும், உங்களுக்கான நேரத்தை ரசிக்க மறக்காதீர்கள். அதுதான் உங்களையும் உங்கள் மனதையும் மேம்படுத்தும்.
கடந்து போன நாட்களில் உன் துன்பத்திற்கான காரணங்களை பட்டியலிடு. இனி கடக்கபோகும் நாட்களில் அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்
Life quotes in tamil
வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால், தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள். ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால், தடுக்கிவிட பலரும் இருப்பார்கள். உன் நம்பிக்கையே உன்னைத் தூக்கி நிறுத்தும்.
நேற்றைய நினைவுகளை நினைத்து வருந்தி, நாளைய கனவுகளை இழந்துவிடாதீர். மனதில் உறுதி இருந்தால்.. மாமலையும் சிறு கடுகாம்.
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கைகொடுக்கும். அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்
வாழ்க்கை என்பது உனக்கான இடத்தை தேடுவது அல்ல. உன் வாழ்க்கைக்கான வழியை உருவாக்குவது.
Life quotes in tamil
கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லை. மாறாக, கல் தான் காணாமல் போகும். அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால், கடலாக இருங்கள், வலி காணாமல் போகும்
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம் என்ற குழப்பம். இல்லாதவர்களுக்கு ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை. இதுதான் வாழ்க்கை.
தேவை இல்லாமல் பேசுவதை விட மெளனமாக இருப்பதே சிறந்தது. நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவருக்கு நாம் பேசும் எந்த வார்த்தைகளும் புரியாது.
Life quotes in tamil
நம் பயம் எதிரிக்கு தைரியம். நம் அமைதி அவனுக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை
விதியை நம்பிக்கொண்டு இருப்பவன் என்றும் விழிக்க மாட்டான். தன் நம்பிக்கையோடு இருப்பவன் என்றும் தோற்க மாட்டான்.
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும் உள்ளங்கள் சுருங்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில் ஓர் அழகிய காதல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.
Life quotes in tamil
வாழ்க்கையில் வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு ஒரு வரி கூட கிடையாது. எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்
தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு. மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட, நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu