வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வோம்..! வாழ்க்கை என்பது ஒருமுறைதானுங்க..!
X
Enjoy Your Life Quotes In Tamil
By - K.Madhavan, Chief Editor |10 Oct 2022 1:08 PM IST
Enjoy Your Life Quotes In Tamil-வாழ்க்கை என்பது நமக்கானது. அதை நாம்தான் வாழ்ந்து பார்க்கவேண்டும்.நமது வாழ்க்கையை பிறர் வாழ முடியாது. எப்படி வாழலாம் என்பதை முடிவுசெய்வதே நாம்தான்.
Enjoy Your Life Quotes In Tamil-வாழ்க்கை பற்றிய மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. நமது வாசகர்கள் இதைப் படித்து வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை அறியலாம். எப்படி வாழவேண்டும் என்றும் புரிந்துகொள்ளலாம்.
- உறவுகள் தூக்கி எறிவதால் இரவுகள் உனக்கு விடியாமலா போய்விடும்..? அவர்கள் முன் உன் வளர்ச்சியால் அவர்கள் பெருமைப்படும் அளவில் வாழ்ந்து காட்டு..!
- தேவை இல்லாத உறவுகளை வெட்டிவிடுவதில் தயக்கம் காட்டக்கூடாது. முற்றுப்புள்ளி இல்லையென்றால் வார்த்தைகள் கூட அழகு பெறாது. அதனால், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்...!
- நம் வாழ்க்கை நம் கையில் என்பதை எந்த ஆசிரியரும் வந்து நமக்கு பாடங்கள் நடத்த தேவையில்லை..நம் வாழ்க்கை நம் கையில் என்பதை புரிந்துகொள்ளாதவரை வாழ்க்கையில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் காண முடியாது..!
- வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட ஒரே ஒரு முடிவு போதுமானது..அந்த முடிவு நமக்கான வளச்சிக்கானதாக இருக்க வேண்டும்..வீழ்ச்சிக்கானதாக இல்லை..! வாழ்வது பல வருடங்கள். ஆனால் வாழ்க்கை மாற சில நொடிகளே போதுமானது..!
- நம்மை நேசிக்க யாருமில்லாத போது, நமக்கான நேசர்கள் நம்மைத் தேடி வர வைப்பதே நம் வாழ்க்கைக்கான வெற்றி மகுடம்..! வாழ்க்கை நம்மை யோசிக்கவும் வைக்கவேண்டும்..!
- வாழ்கை என்பது இரண்டு பகுதிகள் கொண்ட ஒரு புத்தகம்..! ஆமாம்..ஒன்று கடந்த அக்காலத்து நினைவுகள்..இன்னொன்று எதிர்காலத்து கனவுகள்..!
- சகிப்புத்தன்மை கூட அளவுக்கு மீறினால் நாம் அடிமைத்தனத்துக்கு சாசனம் எழுதுவதாக பொருளாகும். சுயமரியாதையை விட்டுவிட்டு வாழ்வதல்ல வாழ்க்கை..!
- கரையைத் தொட்டுச்செல்லும் அலைகள் கூட கொந்தளித்து எழுந்தால்..இருந்த சுவடுகளைக் கூட காணாமல் போகச் செய்துவிடும்..மானத்தோடு வாழ்வதே மேல்..!
- பிறந்து விட்ட எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமையுண்டு..இந்த ஒரு பிறவியைத் தவிர்த்து இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணம் எழுத்தால் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழப்பழகிக்கொள்வோம்..!
- உயிர் வாழ்வது மட்டுமே வாழ்க்கையல்ல..காக்கையும் குருவியும் கூட வாழவே செய்கின்றன..ஆனால் அவை எப்படி வாழ்கின்றன என்பதை பார்க்கவேண்டும்..குருவி குருவியாக மட்டுமே வாழும்..! காக்கை காக்கையாக மட்டுமே வாழும்..அனால் மனிதன் மட்டுமே மனிதனாக வாழ மறுக்கிறான்..! எப்படி வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்...!
- அடுத்தவர் உணர்வுகளை மதிப்பவன் மனிதன்..எல்லா உயிரினங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவன் புனிதன்..நாம் புனிதனாக வாழவேண்டாம்..குறைந்தபட்ஷம் மனிதனாகவாவது வாழ்வோமே..மனித உணர்வுகளை மதித்து..!
- தண்ணீரில் நீச்சல் அடித்துக்கற்றுக்கொள்வது கூட வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்நீச்சல் போட கற்றுக் தரும் வாழ்க்கைப்பாடமாக இருக்கும்..!
- தத்துவங்களைக் கற்றுக்கொண்டு தவறான வாழ்க்கை வாழ்வதைவிட, தத்துவமே படிக்காமல் மனிதனை மனிதனாக மதித்து வாழும் மனிதரே மேன்மைக்குரியவர்..!
- வாழ்வதற்கு வழியில்லையென்றாலும் கூட அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மௌனப்புன்னகை வீசும் மனிதர்கள் மத்தியில், எல்லாம் இருந்தும் இல்லையென்று கூச்சல் போடும் வீணர்களும் வாழத்தான் செய்கிறார்கள்..!
- வாழ்க்கையைத் தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை புரியும்..! உறவுகளை இழந்தவனுக்கே உறவுகளின் உன்னதம் தெரியும்..! அன்பை இழந்தவனுக்குத்தான் காதலின் மகத்துவம் புரியும்..! இறந்தவனுக்கு மட்டுமே வாழ்க்கையின் வலி தெரியும்..!
- அடுத்தவருக்காக வாழ விரும்பி நமது வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாது..! எது உன்னிடம் இருக்கிறதோ அதைக்கொண்டு வாழ்ந்து காட்டு..! வாழ்க்கை இனிமையாக இருக்கும்..! பிறர் வாழ்க்கை மற்றவர்களுக்காக நடிப்பாக மட்டுமே இருக்கும்..உண்மை வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்..!
- பிறரை துன்புறுத்திக் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைக்காது..! பிறர் தொலைத்த பணம் கூட உன் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்காது..! காற்றில் கரையும் சூடம்போல பணம் கரைந்து காணாமல் போகும்..! நாம் நாமாக வாழ்வோம்..!
- அன்பு கூட அளவுக்கு அதிகமானால்..தீமையைத்தான் தரும்..! நம் குழந்தைகளுக்கு அன்பை அளவோடு காட்டவேண்டும்..அன்பு கூடினால் பிள்ளைகள் கட்டுப்பாடில்லாதவர்களாகவே வளர்வார்கள்..! அன்பை அளந்துகொடுங்கள்..வாழ்க்கை நன்றாக இருக்கும்..!
- நமக்குள் இருக்கும் 'நான்' என்பவன் தான், தன்னம்பிக்கை எனும் பெயர் பெறுகிறான். அந்த 'நான்' முடிவு செய்வதே நமது வாழ்க்கை..! அதுவே நம் வளர்ச்சிக்கானதா..? வீழ்ச்சிக்கானதா..? என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்..!
- மரத்தின் இலைகள் உதிர்வது கூட தன்னை புதுப்பித்துக்கொள்ள இயற்கை அளித்த ஒரு வாய்ப்பு. நமக்கான வாய்ப்பு நமக்கு கிடைத்த வாழ்க்கை..! அதை ரசித்து வாழ்ந்துபார்..வாழ்க்கையின் சுவை தெரியும்..எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்து..நூறாண்டு வாழ்ந்த இன்பம் பெறுவாய்..!
- பணிவு மரியாதையின் அடையாளம் என்பது உண்மையே..ஆனால் அது யாருக்கான மரியாதை என்பதைப்பொறுத்தே அந்த மரியாதையும் மரியாதை பெறுகிறது..! ஆணவக்காரனுக்கு செய்யும் மரியாதை அடிமைத்தனத்துக்கு வழி வகுக்கும்..! கற்றறிந்த நல்லோருக்கான மரியாதையே போற்றுதலுக்குரியது..!
- உனக்கான நல்ல இயல்பினை பிறருக்காக மாற்றிக்கொள்ளக்கூடாது..அது உன் தாயே சொன்னாலும் கூட..! சூழலுக்கேற்ப குணத்தை மாற்றிக்கொள்வது பச்சோந்திக்கு வேண்டுமானால் பாதுகாப்பு..! நல்லவர்களுக்கு அது பாதுகாப்பற்றது...!
- அடிக்கடி தவறு செய்துவிட்டு நமக்கான பாடம் என்று சொல்வது முட்டாள்தனத்துக்கு முகவுரை எழுதுவது போன்றது..! ஒருமுறை செய்த தவறு மீண்டும் வராமல் தடுக்கத்தெரிந்தவனே புத்திசாலிகளின் பள்ளிக்கூடம்..!
- வாழ்வதற்கு கொஞ்சம் பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல..! எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதிக்கலாம் என்று நினைப்பவன், சுயமரியாதையை தொலைத்தவன்..! இப்படித்தான் பணம் சம்பாதிக்கணும் என்று நினைப்பவன் மானஸ்த்தன்..!
- தகுதி என்பது நமது எண்ணங்களால் உருவாவது..! எண்ணங்கள் செழுமையுறும்போது..வாழ்க்கை வசந்தமாகிறது..! எண்ணங்களில் தீய எண்ணங்கள் எழும்போது வாழ்க்கை பாலையாகிறது..!
- வாழ்க்கையின் வறுமைகூட மனிதருக்கு பாடங்கள் கற்றுத்தரும் புத்தகம்..! வீழும்போது எழும் பாடம் குழந்தை பருவத்தில் நாம் கற்றுக்கொண்ட வித்தைகள்தானே..!
- வரலாற்றில் வெற்றி பெற்றவனுக்கும் இடம் உண்டு. அதேபோல தோல்வி கண்டவனுக்கும் இடம் உண்டு. ஆனால் என்றுமே வேடிக்கை மனிதர்களுக்கு வரலாற்றில் இடம் கண்ட சரித்திரம் இல்லை.
- வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் எல்லாம் எல்லோருக்கும் நிரந்தரம் இல்லை. அதை நிரந்தரமாக இல்லாமல் செய்வதே புத்திசாலிகள் செய்யும் ஆகச் சிறந்த செயல்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu