குதிரைச் சக்தி வரணுமா..? கொள்ளு சாப்பிடுங்க..!

Kollu Benefits
X

Kollu Benefits

Kollu Benefits-கொள்ளு பொதுவாக எலும்பு பலம் பெற உட்கொள்ளும் ஒரு சிறந்த உணவாகும். அதனால்தான் ஓடுகின்ற குதிரைக்கு கொள்ளு உணவானது.

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைச்சவனுக்கு எள்ளு என்று தமிழகத்தில் ஒரு சொலவடை உள்ளது. அதாவது தேவையில்லாத சதை போட்டு இருப்பவர்களுக்கு கொள்ளு பயிரை உணவாகக் கொடுத்தால் கொழுப்பு குறைந்து போகும். அதேபோல உடம்பே போடாமல் இளைத்து இருப்பவர்களுக்கு எள்ளு உணவாக கொடுத்தால் நன்றாக உடம்பு போடும். அதை விளக்குவதற்குத்தான் இந்த சொலவடை.

Kollu Benefits

கொள்ளு ஒரு பயிறு வகை தானியம் ஆகும். இதற்கு கொள்ளு, காணம், முதிரை என்ற வேறு பல பெயர்களும் உள்ளன. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மையான நிறத்தில் காணப்படும். இதை ஆங்கிலத்தில் 'ஹார்ஸ் கிராம்' (Horse Gram) என்று அழைக்கிறார்கள். காரணம் கொள்ளு குதிரைக்கு தீவனமாகக் கொடுக்கப்பட்டது.

கொள்ளு எலும்புக்கும், நரம்புக்கும் வலுவைத் தரக் கூடியது என்பதால் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் உணவாகக் கொடுத்தனர். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடும் சக்தியை கொள்ளு வழங்குகிறது. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

சமைத்த 100 கிராம் கொள்ளில் உள்ள ஊட்டச்சத்து விபரம் :-

கலோரிகள்: 321 கிலோகலோரி

கார்போஹைட்ரேட்டுகள்: 57.2 கிராம்

புரதம்: 22.8 கிராம்

கொழுப்பு: 0.5 கிராம்

ஃபைபர்: 22.5 கிராம்

கால்சியம்: 287 மி.கி

இரும்பு: 7.6 மி.கி

மக்னீசியம்: 311 மி.கி

பாஸ்பரஸ்: 311 மி.கி

பொட்டாசியம்: 1113 மி.கி

துத்தநாகம்: 2.8 மி.கி

வைட்டமின் சி: 0.6 மி.கி

தியாமின் (வைட்டமின் பி1): 0.5 மி.கி

ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2): 0.2 மி.கி

நியாசின் (வைட்டமின் பி3): 1.2 மி.கி

கொள்ளு அதன் உயர் புரதம் மற்றும் நார்ச்சத்துக்காக அறியப்படுகிறது. இது சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் இருப்பதால், எலும்பு ஆரோக்யம், ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆரோக்யமான இருதய அமைப்பை பராமரித்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆரோக்யத்திற்கும் கொள்ளு பயனுள்ளதாக இருக்கிறது.

கொள்ளின் மருத்துவப்பயன்கள் என்னென்ன என்று பார்ப்போம்

உடல் எடை குறையும்

‘இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்ப உடல் எடையை குறைக்க தேவையான சத்துக்கள் கொள்ளில் உள்ளது. கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறையும். கொள்ளு கஞ்சியை வாரம் ஒருமுறை வைத்து உட்கொள்ளலாம். இது குடலை சுத்தம் செய்யும்.

முளைகட்டிய கொள்ளு

சீறுநீரக கல் வராமல் தடுக்கும்

கொள்ளை நாம் தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால் நம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் தன்மை கொண்டது. கடுமையான உடல் உழைப்பிற்கு பின் கொள்ளு உணவாக எடுத்துக்கொண்டால் உழைப்பால் ஏற்பட்ட உடல் அயர்ச்சி குறைந்து போகும். அதற்கு கொள்ளு ரசம் சிறந்தது.

ஊளைச் சதையை குறைக்கும்

சிலர் உணவு பழக்கவழக்கத்தால் ஊளைச்சதை பிடித்து தாறுமாறான உடல் எடையில் இருப்பார்கள். கொள்ளுப் பயிறை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளு பயிறுக்கு உள்ளது. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பயிறை ஊற வைத்தும் சாப்பிடலாம், சாதாரணமாக வேகவைத்தும், வறுத்தும் சாப்பிடலாம். இன்னும் கூடுதலாக வேகவைத்த தண்ணீரில் மிளகு, சிறிது சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து சூப்பாக குடித்தால் உடலுக்கு நன்மை தரும்.

கொள்ளு கஞ்சி

மாதவிலக்கு சீராகும்

கொள்ளு பயிறை தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைத்து அந்த கொள்ளு தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் குணமாகும், சளி நீங்கும். உடல் உறுப்புகள் பலப்படும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றை கொள்ளு நீர் குணப்படுத்தும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயைக் கட்டுப்படுத்தும், மாதவிலக்கை சீராக்கும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் சேர்த்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். குடலை சுத்தம் செய்யும்.

கொள்ளு ரசம்

சளியை விரட்டும்

குழந்தைகளுக்கு மழைக் காலங்களில் சளி பிடித்து சிரமப்படுவார்கள். அவ்வாறு குழந்தைகள் சிரமப்படும்போது கொள்ளு சூப் செய்து கொடுத்தால் சளி பிரச்னை உடனடியாக குணமாகும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொள்ளு சூப் கொடுக்கலாம்.

கொள்ளு சூப்

மந்த வயிறை சீராக்கும்

கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தலாம். சிலருக்கு வாயு பிரச்னையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அப்படி வயிறு மந்தமாக உள்ளவர்கள் கொள்ளுக் கஞ்சி அரிசியுடன் சேர்த்து வைத்து சாப்பிடலாம். அல்லது கொள்ளு பயிறை லேசாக வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிடலாம். இப்படி கொள்ளு உட்கொள்வதால் நல்ல பசி எடுக்கும். வயிறு மந்தம் நீங்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
Weight Loss Tips In Tamil