"கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" கருப்பு கவுனி அரிசியில் சொல்லக்குறையா சத்துகள்..!

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு  கருப்பு கவுனி அரிசியில் சொல்லக்குறையா சத்துகள்..!
X
கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான மருத்துவப் பயன்கள் உள்ளன. அவைகளை இந்த கட்டுரையின் வாயிலாக பார்ப்போம் வாங்க.

kavuni arisi benefits in tamil, kavuni rice benefits

இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்திய பகுதிளில் பெரும்பாலான மக்களின் பிரதான உணவு அரிசிதான். இதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அரிசியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு அரிசிக்கும் தனித்தனி சிறப்பு தகுதிகள் உள்ளன. அவை சுவையிலும் சத்து நிலைகளிலும் வேறுபடுகின்றன.

அந்த வகையில் இப்போது நாம் பார்ப்பது பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள் என்ன எந்த மாதிரியான உணவுகளை தயாரிக்கலாம் போன்றவைகளை காண்போம்.


கருப்பு கவுனி அரிசி ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய மற்றும் சீன நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இந்த அரிசி வகை பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய சீன சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருக்கின்ற அரச குடும்பத்தினர் மட்டுமே இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட உரிமை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், சாமானியர்கள் இந்த வகை அரிசியை உணவாக செய்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும் வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு நேர்மாறாக இந்திய நாட்டில் இந்த கருப்பு கவனி அரிசி பலதரப்பட்ட சமூக மக்களாலும் விரும்பி உண்ணப்பட்டது என்பதையும் நாம் அறியவேண்டும். (சமத்துவத்தை நிலைநிறுத்திவிட்டோமோ..!!)

kavuni arisi benefits in tamil, kavuni rice benefits

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தி:

மற்ற அரிசிகளைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளது. கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும், மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறப்பாக இருக்கும் எனவும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இயற்கை நச்சு நீக்கி

கருப்பு கவுனி அரிசி இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவ ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்த அரிசியில் அதிகம் நிறைந்துள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் ஊட்டப் பொருள், இரத்தத்தில் இருக்கின்ற பிரீ ராடிகல் எனப்படும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்ற நச்சுக்களை நீக்கும் குணமுடையது. மேலும் கல்லீரலில் அதிகளவில் சேர்ந்திருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் ஆரோக்யத்தை உறுதி செய்கிறது.

நார்ச்சத்து செறிந்தது

நாம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து கட்டாயம் இருக்க வேண்டும். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கருப்பு கவுனி அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவுக்கு நார்ச்சத்து கிடைத்து மற்ற செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.


kavuni arisi benefits in tamil, kavuni rice benefits

மேலும் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற செரிமான உறுப்புகள் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசி உணவுகளை சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு அவ்வப்போது கருப்பு கவுனி அரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தடவுக்கப்படும். ஏனெனில் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருக்கிறது.மேலும் இந்த அரிசியில் இருக்கின்ற நார்ச்சத்து, இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் கலக்கச் செய்து இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீரான அளவில் இருக்கச் செய்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடை குறைக்க

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும் இந்த அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிக அளவில் உள்ளதால், இதை கொஞ்சம் சாப்பிட்டாலே அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தரும். இதன்மூலமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதுடன் உடல் எடை கூடுவதையும் தடுக்கிறது.


இதய நோய்க்கு

கருப்பு கவுனி அரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்யமாக இயங்குவதற்கு உதவும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கருப்புகவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் பைட்டோ எனும் வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாகக் குறைக்கிறது.

இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் கொழுப்புச்சத்தை பொதுவாக கெட்ட கொழுப்பு என்பார்கள். இந்த வகை கொழுப்புதான் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இன்ன பிற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.

kavuni arisi benefits in tamil, kavuni rice benefits

புரதச்சத்து நிறைந்தது

மற்ற வகை அரிசிகளைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி உணவு வகைகளை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறை உட்கொண்டால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் தசைகளை இறுகச்செய்கிறது. இதனால் உடல் வலிமை கூடுகிறது.


புற்றுநோய் தடுக்க கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் இந்த அரசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனைப் படி இந்த கருப்பு கவுனி அரிசி உணவுகளை சாப்பிடலாம்.

ஆஸ்துமாவுக்கு கவுனி அரிசி

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நுரையீரல்களில் அதிகளவு மியூக்கஸ் எனப்படும் சளி சுரப்பு ஏற்படும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கருப்பு கவுனி அரிசி உணவுகளை ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் எனப்படும் மூலக்கூறு ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதன் மூலமாக அவர்கள் சீராக சுவாசிக்கவும் ஆஸ்துமா பாதிப்பில் சிறிய அளவு நிவாரணம் அளிப்பதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கருப்பு கவுனி அரிசியில் என்ன உணவுகளைச் செய்யலாம்

கருப்பு கவுனி அரிசியில் நாம் தினமும் சாப்பிடும் உணவுகளான இட்லி, தோசை போன்றவையும், இனிப்பு பொங்கல், பாயாசம், மிளகு பொங்கல், பணியாரம் போன்ற உணவு பதார்த்தங்களை செய்யலாம்.

மதியவேளைகளில் நாம் உண்ணக்கூடிய சாதத்தையும் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யலாம். ஆனால் இந்த கருப்பு கவுனி அரிசியை சாதம் வடிப்பதற்கு முன் குறைந்த பட்சம் 2 மணி நேரங்கள் ஊறவைக்கவேண்டும்.

கருப்பு கவுனி அரிசி தீமைகள்

kavuni arisi benefits in tamil, kavuni rice benefits

பொதுவாக எல்லா உணவுப்பொருட்களில் ஏதாவது சிறிய அளவிலான தீமை இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோலவே, கருப்பு கவுனி அரிசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் இதில் உள்ள கன உலோக மூலக்கூறுகள் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags

Next Story