Kanishka name meaning in tamil-'கனிஷ்கா' என்றால் 'இனிமை' ; பெண்குழந்தைக்கு பெயர் வைப்போமா..?

Kanishka name meaning in tamil-கனிஷ்கா என்றால் இனிமை ; பெண்குழந்தைக்கு பெயர் வைப்போமா..?
X

Kanishka name meaning in tamil-கனிஷ்கா பெயர் பொருள் ( படம்-ஓவியர் மாருதி வரைந்த ஓவியம்)

கனிஷ்கா என்ற பெயர் வைப்பதால் என்னென்ன சிறப்புகள் கிடைக்கின்றன என்பதை தெரிஞ்சிக்கோங்க.

Kanishka name meaning in tamil

கனிஷ்கா என்பதன் பொருள் தங்கம், அரசன் மகள் என்பதாகும். அதாவது கனிஷ்கர் என்ற அரசனின் மகள் என்பதாகும். மௌரியருக்குப் பின்னர் இந்தியாவில் வலிமைமிக்க குசானப் பேரரசை உருவாக்கியவர்களில் தலைசிறந்தவர் கனிஷ்கர் ஆவார். கனிஷ்கா என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பி வைக்கப்படும் ஒரு சிறந்த பெயராக விளங்குகிறது.


Kanishka name meaning in tamil

இந்த அழகான பெயரை உங்கள் பெண் குழந்தைக்கு சூட்டலாம். ஏனெனில் இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உங்கள் குழந்தைக்கு நீங்கள் கனிஷ்கா என்று வைத்தால் அந்த அர்த்தத்தை முளுமையான பொருளை அறிவது அவசியம்.

சிறந்த நட்பு குணம்

கனிஷ்கா என்ற பெயர் கொண்டவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். ஆமாம் அவர்கள் பிறரோடு பழகுவதில் இனிமையானவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களோடு நன்றாக பழகுவார்கள். வாங்க பழகலாம் என்று அழைக்கும் அளவுக்கு நட்புள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பிறகென்ன படிக்கும் காலத்தில் கனிஷ்காவுடன் எப்போதும் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கும். நன்றாக பழகுபவர்களோடு கூட்டம் சேரத்தானே செய்யும்.


தனிமையை விரும்பாதவர்கள்

கனிஷ்கா என்ற பெயர் கொண்டவர்கள் தனியாக இருக்க விரும்ப மாட்டார்கள். பாத்தீங்களா, முன்னாடி சொன்னது சரியாகிவிட்டது. எப்போதும் அவர்களுடன் நண்பர்கள் சூழ்ந்து இருப்பார்கள். அதனால் தனிமை அவர்களுக்கு பிடிக்காத ஒன்று.

Kanishka name meaning in tamil

இதில் இரண்டு கருத்துக்களை உணரவேண்டும். தனிமையை விரும்பாதவர்கள் என்றால் அது அவர்களின் இயல்பாக இருக்கலாம். மற்றொன்று அவர்கள் பிறரை சார்ந்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம்.


உணர்ச்சிமிக்கவர்கள்

கூட்டு எண் 2 உடைய கனிஷ்கா என்ற பெயர் கொண்டவர்கள். அவர்களை உணர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். அன்பைக் காட்டினால் அவர்களைப்போல அன்பு செலுத்த முடியாத அளவில் அன்பு செலுத்துவார்கள். அது மனிதர்கள் மீது மட்டுமல்ல. எல்லா ஜீவராசிகளிடமும். அதேபோல கோபம் வந்தால் முழு கோபமும் சீறிப்பாயும். இதுதான் அவர்களின் குணம். அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, கோபம் என எதுவாக இருப்பினும் சரி சமமாக வெளிப்படும்.

Kanishka name meaning in tamil


உணர்திறன் உடையவர்கள்

உணர்திறன் உடையவர்கள். சூழ்நிலையை புரிந்துகொள்ளுதல், அனுசரித்து போகுதல், அறிவை பயன்படுத்துதல், பெரியோரை மதித்தல் என பண்பின் அடையாளமாக இருப்பார்கள்.


கணவன் மீது பாசம் உள்ளவர்கள்

கணவன் மீது அளவற்ற பாசம், அன்பு, நேசம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனது கணவனோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கவேண்டும் என்பதில் கூர்மையாக இருப்பதால், கணவனைத் தேர்வு செய்வதிலும் நுட்பமாக இருப்பார்கள்.


அனைவரும் விரும்பும் பெண்ணாக இருப்பார்

Kanishka name meaning in tamil

கனிஷ்கா என்ற பெயர் மற்ற எல்லா எண் கொண்டவர்களுடனும் ஒத்துப்போகும் எண்ணாக உள்ளது. இயற்கையாகவே கனிஷ்கா என்ற பெயர் கொண்டவர்கள் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள். மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களுக்கும் உதவும் எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.

பண்பின் அடையாளம்

மேலும் கனிஷ்கா என்ற பெயர் எப்படி அழகானதாக இருக்கிறதோ, அதேபோலவே அவரக்ளின் தோற்றமும் மிக அழகாக, பிறரைக் கவரக்கூடியதாக இருக்கும். அந்த அழகினைப்போலவே அவர்கள் குணமும் மிகவும் பொறுமை உள்ளவர்களாகவும், நடத்தையில் கண்ணியம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

வளர்ந்த பின்னர் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைவார்கள்.


Kanishka name meaning in tamil

நியூமராலஜி படி கனிஷ்கா என்பது எப்படி எழுதப்படவேண்டும். அவர்களது கூட்டு எண் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

K 2

A 1

N 5

I 9

S 1

H 8

K 2

A 1

மொத்த கூட்டுத்தொகை - 29

29ன் கூட்டு எண் - 11

11 கூட்டு எண் -2

ஆகவே கனிஷ்கா என்ற பெயருக்கான கூட்டு எண் -2.

இப்படி பல சிறப்புகளை உடைய கனிஷ்கா என்ற பெயரை உங்கள் மகளுக்கு சூட்டுங்கள். தேவதையாக பெற்றெடுத்த உங்கள் குழந்தை ஒரு தேவதை போலவே வளர எங்கள் வாழ்த்துகள்.

தமிழில் கூறும்போது கனி என்றால் பழம், இனிமை என்று பொருள் கொள்ளலாம். கனி என்பதோடு அழகுக்காக அல்லது பெயர் நவீனமாக இருப்பதற்காக 'ஷ்கா' சேர்த்தால் கனிஷ்கா என்று வந்துவிடுகிறது. அப்படி எனில் நாம் இனிமை மிகுந்த பெண் என்றும் பொருள் கொள்ளலாம்.

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி