Kanavan manaivi quotes in tamil-இரட்டை மாட்டுவண்டி, கணவன்-மனைவி..!
Kanavan manaivi quotes in tamil-கணவன்-மனைவி மேற்கோள்கள் (கோப்பு படம்)
Kanavan manaivi quotes in tamil
கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை. ‘நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என்று சொல்வதுண்டு. ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குழந்தைகளும் பின்பற்றுவார்கள். இந்த சமூகமும் அந்த குடும்பத்தின் மீதான மரியாதையைக்கூட அவர்களது குடும்ப வாழ்க்கையை வைத்தே அந்த குடும்பத்தை எடை போடுகிறது.
Kanavan manaivi quotes in tamil
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்னைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை அல்லது கருத்து வேறுபாடு. இதுதான் குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம். இத்தகைய போக்குதான் இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவத்தை தோன்றச் செய்து பிரச்னையை பெரிதாக்கி பிரிவு வரை கொண்டுசெல்கிறது.
அதற்கு ஒரே தீர்வு 'விட்டுக்கொடுத்தல்'. அதனால்தான் 'விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போனதில்லை' என்பார்கள். இந்த விட்டுக்கொடுக்கும் பண்பு கணவன் மனை இருவருக்கும் இருக்கவேண்டும். அது இருந்துவிட்டால் குடும்பம் ஒரு கோவிலாகும்.
Kanavan manaivi quotes in tamil
இதோ உங்களுக்காக கணவன்-மனைவி மேற்கோள்கள். படித்து பயன்பெற்று நீங்களும் விட்டுக்கொடுத்தலை கற்றுக்கொள்ளுங்கள்.
உன் மார்பகங்களுக்கு நடுவே என் முகம் புதைத்து என் அன்பின் புதையலைத் தேடுகிறேன்.
தேவதையை போல எனக்குள்ளே அவள் வந்தாள். நெடுந்தூர பயணத்தை தொடங்கி வைத்தாள்.எல்லைவரை இருவரின் பயணமும் இனிதே தொடர்கிறது.
என் தாயின் அன்பு நான் வளரும் வரை மட்டுமே. என் மனைவியின் அன்போ நெடுந்தூர பயணம். அவளை தோளில் சுமக்கவும், அவள் என்னை மார்பில் சாய்க்கவும் ஒருவருக்கொருவர் உதவியாய்.
Kanavan manaivi quotes in tamil
துன்பங்களைத் தாங்கும் மருந்தாக மட்டுமல்ல இன்பங்களை வாரிக் கொடுக்கும் இணையாகவும் கிடைத்த உறவு என் மனைவி மட்டுமே.
வெளியில் முறைப்பதும் உள்ளுக்குள் அணைப்பதும் கணவனின் உண்மையான அன்பால் மட்டுமே. அவன் ஒரு பலாப்பழம்.
வயதுகள் நூறு கடந்தன. தலை முடி நரைத்தும் போயின. ஆயினும் கணவன்- மனைவி பந்தத்தில் வளர்ந்த அன்பு மட்டும் மாறவில்லை. அன்புக்கு வயது என்பது தெரியாது.
Kanavan manaivi quotes in tamil
நம்மிடம் எதையும் எதிர்பார்த்து இருப்பதில்லை மனைவியின் உறவு. அவள் அன்பை அள்ளிக் கொடுத்தால் போதும், தன் வாழ்நாள் வரையிலும் தூணாக நின்று காப்பாள்.அவளே மனைவி எனும் மாயக்காரி.
நோய் என்று படுத்தால் என் வலியாக என்னைத் தாங்குகிறாள். துன்பம் என்று வந்தால் அதைத் தாங்கும் இதயமாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள் மனைவி மட்டுமே.
தந்தையின் அன்பு போல கணவனின் அன்பும் உண்மையானது. மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற துடிப்பவன் அவன் மட்டுமே.
Kanavan manaivi quotes in tamil
கருவினைச் சுமக்கும் தாய் போல அவள் நெஞ்சில் எனை சுமந்தாள். ஆயுள் வரைக்கும் என்னைச் சுமக்க பல என்னைக்கரம் பிடித்து வந்தாள், அவளே என் ஆருயிர் மனைவி.
கேட்காமல் கொடுப்பது தந்தையின் குணம். எதையும் யோசிக்காமல் செய்வதே கணவனின் மனம். இந்த இரண்டு உறவுகளுக்கும் வேறுபாடுகள் இல்லை. கணவன் என்பவன் மனைவிக்கு இன்னொரு தகப்பன்.
உன் நிழல் கூட உன்னை விட்டு பிரியலாம். உன் உடல் கூட மண்ணைவிட்டு மறையலாம். ஆனால் உன் மனைவியின் எண்ணங்கள் மட்டும் உன்னை விட்டுப் பிரியாது.
Kanavan manaivi quotes in tamil
எத்தனையோ பாரங்களை சுமந்தவள். அத்தனையும் சுகங்களாக மாற்றி, தன்னையே தொலைத்து நிற்பவள் மனைவி மட்டுமே.
அவள் உதிரத்தில் முளைக்காத பூவாக நான் இருக்கலாம். ஆனால் என் உதிரத்தில் பூக்கும் புது உறவைத்தந்தவள், அவளே. என்னைச் சுமந்து என் கருவையும் சுமந்தவள். அவள் எனக்கு இன்னொரு தாய்.
வடதுருவம், தென்துருவமாக நின்று என்னைத் தாங்கி பிடிப்பவன். என் நிழல் போல எப்பொழுதும் கூடவே நிற்பவன். என் மனக்கோவிலின் கருவறைக்கடவுள். அவனே என்னைக்காக்கும் என் கணவன்.
Kanavan manaivi quotes in tamil
கோபப்பட்டு பேசியபோதும் அடுத்தநொடியில் குழந்தை போல கொஞ்சுவாள். கோவிலுக்குச் சென்றாலும் என் நலனையே வேண்டிக்கொள்வாள்.
என் தாய்க்கும் என் மனைவிக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. இரண்டு இதயங்களும் எனக்காக வந்த தெய்வங்கள். ஒன்று வாலிபத்துக்கு முன்(வா.மு), இன்னொன்று வாலிபத்துக்குப்பின்(வா.பி). வாழ்க்கையிலும் வரலாறு உண்டு.
எத்தனைக் கனவுகள் எனக்குள்ளே முளைத்தாலும், அதற்கு தடை போடாமல் என்னை ஊக்குவித்து நம்பிக்கை கொடுக்கும் எனது தும்பிக்கையே, என் கணவன்.
Kanavan manaivi quotes in tamil
தினம் ஒரு படியினை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வைத்தாள். நாளொன்றுக்கு பொழுதொன்றுமாக அதில் என்னை நடக்க வைத்து சிகரத்தை எட்ட வைத்தவள் என் மனைவி.
புன்னகை பூ போல சிரித்து என்னை அரவணைப்பாள். அவள் ஆசைகளை எல்லாம் அடி நெஞ்சில் ஒளித்து வைப்பாள். அதுவும் எனக்காக மட்டுமே.
நான் உண்ட பின்பு அவள் உண்டு தினம் மகிழ்ந்திடுவாள். அவள் நேசம் நான்தான் என்று எனக்குள்ளே ஒழிந்து இருப்பாள், என் உயிராக.
Kanavan manaivi quotes in tamil
இரு உயிராய் நாங்கள் பிரிந்து இருந்தாலும், என்னாளும் எனை விட்டு அவள் பிரிந்து இருக்க மாட்டாள். என்னை கண்ட பின்புதான் பெருமூச்சு விட்டு உறங்கச் செல்வாள், என் அன்பு மனைவி.
எனக்காகப் பிறந்தவன் என்றும் நீ. உனக்காக பிறந்தவள் என்றும் நான்.ஏழேழு ஜென்மம் தொடரும் இந்த உறவு.
உண்மையான அன்போடு ஒரு இதயம், நம்மோடு நமக்காக நடமாடினால் வாழ்க்கையே சொர்க்கம்தான்.
Kanavan manaivi quotes in tamil
நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை. நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது. அதனால் வாழ்ந்து காட்டுவோம் வா.
ஒன்றை மட்டும் புரிந்து கொள். இங்கு நான் என்பதும், நீ என்பதும் வேறு வேறு இல்லை.
இன்னொரு பிறவி பிறக்கப் போவதும் இல்லை. இப்பிறவியில் கிடைத்த உன்னை விட்டுப் பிரியப் போவதுமில்லை
Kanavan manaivi quotes in tamil
என் காதலின் கருவறையாக வந்துவிட்ட பின்னே நீ, என் கல்லறையும் ஆவாய், கண்ணே என் கண்மணியே.
அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்; ஆனால் நமது அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன. அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
நீ என்னுடன் இருக்கும் ஓர் நொடி போதும், நான் இந்த உலகத்தை மறக்க. அக்கணமே உயிர்விடவும் துணிவேன், நான்.
Kanavan manaivi quotes in tamil
எதிர்பாராமல் பெய்யும் மழை போல என் வாழ்வில் வந்த வானவில் நீ. உன் பார்வையாலே என் வாழ்க்கை வசந்தம் ஆனது. இருண்டு கிடந்த என் வாழ்க்கையின் பக்கங்களை ஒளிர வைத்தாய்.
கடலின் அலைகள் எப்படி ஓய்வதில்லையோ, அது போல தான் நான் உன் மீது கொண்ட காதலும் ஒரு நாளும் ஓயாது.
நிறை குறை காணாது ஒருவர்மீது ஒருவர் வைக்கும் அன்பு, முழுமையானது, முழுமதியானது.
Kanavan manaivi quotes in tamil
காதல், கேட்க இனியதுதான். ஆனால், காதல் செய்வது கடியது. பழக எளியது. காதல் பெரியது. பண்பினால் உயர்ந்தது. விட்டுக்கொடுப்பதில் ஒருவருக்கொருவர் மான் நீர்குடித்த கதையாகும்.
உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் அறவே. நீ இல்லையெனில் பூணுவேன் துறவே. உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதே. நிதமும் என் உடலில் வீச வேண்டும், உன் மணமே. என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே. இல்லாவிடில், நான் ஒரு அற்பமே. நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான் ஒரு கணமே. ஆகவே, இணைந்து வாழ்வோம் இக்கணமே.
Kanavan manaivi quotes in tamil
கம்பன் எழுதிய காவியங்களில் எழுதப்படாத காவியம், நம் காதல். இது இலக்கியங்களுக்கு அப்பாற்பட்ட காதல். புதுயுகத்து பூரண காதல்.
உன்னோடு நான் இருக்கையில், உலகின் பரப்பளவு கூட எனக்கு சில சதுர அடிகள்தான். ஏனெனில் உன் அன்பு புவியைத்தாண்டியது.
மழை பொழியும் அந்த மகிழ்வான நேரத்தில் ஓர் குடைக்குள் நாம் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இறுக்கமாய், நெருக்கமாய் இருவரும் காதல் படகில் பயணிப்போம், மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி. இன்னும் நாம் செல்ல வேண்டும் நீண்ட தூரம், ஓர் அழகிய காதல் பயணம்.
Kanavan manaivi quotes in tamil
நீயும் நானும் வானும் நிலவும் போல சேர்ந்தே இருப்போம் வா.
அழகிய நிலவொளியில் நாம் இருவர் மட்டும் தனியாக. இரு விழிகள் எழுதும் கவிதைகள் நூறு. வேறு எண்ணவேண்டும் இங்கு கூறு. நான் உயிர் வாழத் தேவையில்லை இனி சோறு.
உந்தன் கன்னக்குழியில் புதைந்து, நான் முத்தமாக மாற ஆசை.
Kanavan manaivi quotes in tamil
என் கண்கள் தினமும் பலரைப் பார்க்கலாம். ஆனால், என் மனம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென நினைப்பது, உன்னை மட்டுமே. கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தேடுகிறேன் உன்னை.
அழகைக் காட்டி மயக்கும் இந்த மாய உலகில், நீ மட்டும் உன் அன்பைக் காட்டி என்னை மயக்கினாய். அந்த மயக்கத்திலிருந்து கடவுளால் கூட என்னை வெளிக் கொண்டுவர முடியவில்லை. எனென்றால், உன் அன்பு அந்த கடவுளையே சிறை பிடிக்கும்.
அன்பே, உன் கால் தடம் பட்ட இடத்தில் மண்டியிட்டு முத்தமிட்டேனடி. நீ கால் பதித்துச் சென்ற மணலின் ஓவியத்தை சிலையின் சிற்பமாக்க.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu