Kanavan manaivi quotes in tamil- ஒற்றை உயிர் சுமந்த இரட்டை உடல், கணவன்-மனைவி..!
Kanavan manaivi quotes in tamil-கணவன்-மனைவி மேற்கோள்கள்.(கோப்பு படம்)
Kanavan manaivi quotes in tamil
வாழ்க்கையில் பிறப்பு என்பது தாயின் வழியே என்றாலும், தாய் என்பவள் நாம் வளரும் காலம்வரை நம்மை அன்போடு பார்த்துக்கொள்வார். வளர்ந்தே பின்னே இறைவன் இன்னொரு தாயை வரமாகத் தருகிறான். அவளே, மனைவி. மனைவி என்பவள் கணவனைத் தங்குவது மட்டுமல்ல. கணவனும் மனைவிக்கு மகத்துவம் செய்யவேண்டும். அன்பால் நனைக்கவேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.
இருவரும் ஈருடல் என்றாலும் ஓருயிர் என்றெண்ணி வாழ்வது சுகமே. விட்டுக்கொடுத்தல் மகிழ்ச்சியை இரட்டிப்பாகும். விதண்டாவாதம் பிரிவினைக்கு வழிவகுக்கும். இதை உணர்ந்து அன்பின் வழியே பயணம் செய்வோம். கணவனை மனைவியும்;மனைவியை கணவனும் நேசித்து வாழ்தலே வாழ்க்கையின் ரகசியம்.
Kanavan manaivi quotes in tamil
கணவன்-மனைவி வாழ்க்கை குறித்த மேற்கோள்களை படித்து, உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
மனைவி, இளமையில் சுகம் தந்தவள், சோகத்தில் நம்பிக்கை தருபவள், தலைமுறைக்கு பிள்ளையை சுமந்தவள், முதுமையில் மூன்றாம் காலாக கணவனுக்கு துணை நிற்பவள்.
கோபப்படுவது மனைவியாக இருக்கும் போது, உன்னிடம் நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்பேன். தோற்பது எனக்குச் சுகமே.
சொந்தங்கள் எல்லாம் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைத் துணை எனும் சொந்தம் சரியாக அமைந்து விட்டால் போதும். அத்தனை உறவுகளையும் உலகையும் வென்று விடலாம்.
Kanavan manaivi quotes in tamil
ஒரு பெண்ணின் மனக் காயத்திற்கு காரணம் அவள் கணவனாக இருந்தால், அந்த காயத்திற்கு சிறந்த மருந்தாக திகழ அந்த கணவனால் மட்டுமே முடியும்.
சமாதானம் செய்வதற்கென்றே உன்னுடன் நான் திட்டமிட்டு சண்டைபோடுகிறேன். உன் ஊடலின் சிணுங்கல்களை ரசிப்பதற்காகவே.
ஒவ்வொரு ஆணின் குறும்பை ரசிக்க ஒரு பெண்ணும், ஒவ்வொரு பெண்ணின் குழந்தைத் தனத்தை ரசிக்க ஒரு ஆணும் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் வாழ்க்கை வரம் தான், போங்க.
Kanavan manaivi quotes in tamil
உறவு சொல்லும் கவிதை. மனைவியை காதலியை போல பார்த்து நேசியுங்கள். தங்கையைப் போல பாதுகாத்துக் கொள்ளுங்கள். தாயைப் போல மரியாதை செலுத்துங்கள். தந்தையைப்போல தேவையானதை செய்துகொடுங்கள். அவள் உங்களுக்காகவே வாழும் ஜீவன்.
கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்து என் முகத்தின் அருகே திட்டும் அவன், ஓர் விந்தை. அதனால், திட்டுவதெல்லாம் கவிதை மழையாக கொட்டுகிறது.
ஒழுங்கற்ற கோடுகளாக சிதறிய ஓவியத்தின் வண்ணங்களாய் தவறிக்கிடந்தேன், நான். அழகிய ஓவியமாக இன்று, செதுக்கப்பட்டுவிட்டேன், என் அன்பு மனைவியின் வருகைக்கு பின்னர்.
Kanavan manaivi quotes in tamil
துக்கம், சோகம், கவலை, அழுகை போன்ற வாக்கியங்களை என் வாழ்க்கை அகராதியில் இருந்து நீக்கிவிட்டாள், என் மனைவி. எனது முதல் குழந்தை அவள். அவளை நான் என் மூச்சு உள்ள வரை சுமக்க வேண்டும் என் மார்பினில்.
மலரே, நிலவே என்றெல்லாம் உன்னை மென்மையாக திட்டுவதற்கு பயன்படுத்தி சலிப்படைந்துவிட்டேன். உன்னை நோகாமல் திட்டுவதற்கு வேறு வார்த்தைகள் தேடுகிறேன், என் ராட்சசியே.
ஒரு மனைவிக்கு தன் தாயைப்போல தன்னை பார்த்துக் கொள்ளும் ஒரு கணவன் கிடைத்து விட்டால், அவள் தான் உலகத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. வாழ்க்கை அவளுக்கு கிடைத்த வரம்.
Kanavan manaivi quotes in tamil
கோபப்படும் கணவனிடம்தான் அன்பும் அளவற்று கொட்டிக்கிடக்கும். அள்ளிப்பருக அன்பு மனைவி நீங்களே தயாராக இருக்கவேண்டும். கோபம் இருக்கும் இடத்தில்தானே குணமும் இருக்கும்.
உரிமையை தந்து விட்டு அன்பை வெளிப்படுத்த மாட்டான் கணவன். அது அவனது முதிர்ச்சி. ஆனால் சின்னச் சின்ன விஷயங்களிலும் அன்பை எதிர்பார்ப்பவள் மனைவி, அது அவள் தவறல்ல. அவள் கணவனின் முதல் குழந்தை.
ஒரு பெண்ணிற்கு இந்த உலகில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள் கணவனின் அன்பு மட்டுமே.
Kanavan manaivi quotes in tamil
சின்னச்சின்ன ஊடல்கள் வாழ்க்கையை சிங்காரத்தோட்டமாக்கும்.வாங்கு பூக்கும் அன்பின் பூக்களால் வாழ்க்கை வண்ண வண்ண வானவில்லாகும். நம் காதல் வாழ்க்கை பயணம் முழுவதும் தொடரும்.
ஒரு மனைவிக்கு சிறந்த பாராட்டு, அவள் செய்யும் உணவு பதார்த்தங்களை 'சுவையாக இருக்கிறது' என்று சொல்லும் ஒற்றைச் சொல்லே. கின்னஸ் சாதனை செய்த மகிழ்ச்சி பெறுவாள்.
லட்சத்தில் செலவு செய்து ஆயிரம் பொன் நகை செய்து கொடுத்தாலும், மனைவியின் மகிழ்ச்சிக்கு,கணவன் கையில் வாங்கிக்கொடுக்கும் ஒரு மூலம் பூவுக்கு இணையாகாது.
Kanavan manaivi quotes in tamil
வறுமையில் கணவனுக்கு நம்பிக்கை கொடுக்கும் பெண்ணும், முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள். சுகங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வது காதல் அல்ல. சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது,
துணையாய் நிற்பது தான் காதல். தோள் கொடுக்கும் தோழியாகவும், மார்பில் சாய்த்துக்கொள்ளும் நண்பனாகவும் கணவனும் மனைவியும் வாழ்வதில் சுகம்.
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது. காரணம் இதயத்திற்கு நடிக்கத் தெரியாது. துடிக்க மட்டுமே தெரியும்.
Kanavan manaivi quotes in tamil
தேவதையை போல எனக்குள்ளே குடிபுகுந்தாள். நெடுந்தூர பயணத்தை தொடங்கி வைத்தாள். இனிதே தொடர்கிறது இன்பப்பயணம். தாயின் அன்பு வளரும் காலம் வரை. மனைவியின் அன்பு நெடுந்தூர பயணம். மனதில் தொய்வு என்பதே இல்லை.
துன்பங்களைத் தாங்கும் மருந்தாகவும் இன்பங்களை வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் கிடைத்த உறவு மனைவி மட்டுமே. மாசற்ற அன்பின் இருப்பிடம்.
வெளியில் முறைப்பதும் உள்ளுக்குள் அணைப்பதும் கணவனின் உண்மையான அன்பால் மட்டுமே.
வயதுகள் நூறு கடந்தாலும் தலை முடி நரைத்தாலும் கணவன் மனைவி பந்தத்தில் முளைத்த அன்புக்கு மட்டும் வயதுகள் என்பதே கிடையாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu