கடி ஜோக்ஸ் படிக்கணுமா..? அப்ப இதை படிக்காதீங்க..! வயிறு வலி எடுக்கும்..!

Jokes in Tamil For Students
Jokes in Tamil For Students
பெரும்பாலானவர்கள் அவசர யுகத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த மன அழுத்தம் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மனம் கவரும் நிகழ்த்ச்சிகள் அல்லது மனம் விரும்பும் செயல்களில் ஈடுபடவேண்டும். மனதை மகிழ்ச்சியா வைத்திருப்பதில் நகைச்சுவைக்கு தனி இடம் உண்டு..

இதோ நீங்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருக்க நகைச்சுவைகளை அள்ளித் தெளித்துள்ளோம். அள்ளிப் பருகுங்கள்.
கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?
மழை
டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள். அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.
kadi jokes in tamil for students
எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி

ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
ஈரமாகும்
ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
மாணவர்: 4
ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.
மாணவர்: 52
ஆசிரியர்: என்ன?! எப்படி?
மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26
ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.
தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.
லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.

ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாகுழல்
ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்டால் எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
மாசம் தான் வித்தியாசம்
குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி

டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.
நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?
செலவாகும்
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டைப் பூச்சி
கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?
மஸ்ரூம் (காளான்)
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
தொப்பை…
நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்…டாக்டர்…?
டாக்டர்: 5 லட்ச ரூபாய் ஆகும்ங்க…!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?
kadi jokes in tamil for students
ஆசிரியர்: எந்த ஆங்கில வார்த்தை நீளமானது?
மாணவன்: Smile – தான்.
ஆசிரியர்: இரண்டு Sகளுக்கு இடையே Mile இருக்கே..!

என்னதான் திருப்பி பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில்அடிச்சா அதால அடிக்க முடியாது.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்.
ஆனா ஓடுற பஸ்ஸுக்கு முன்னாடி
நிக்கமுடியாது.
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,சத்தம் போட்டா கொலுசு வருமா..?
IJKL க்கு எனிமி யாரு?
MN தான், (எமன்)

OP ரேசனுக்குப்போனாலும்
Qல தான் நிக்கணும்
வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன ?
முட்டையிலிருந்து தான்
உலகில் அதிகமாக பங்களாக்கள் உள்ள நாடு எது ?
பங்களாதேஷ்
ஒருவனுக்கு செல்போன் என்றால் மிக அதிக விருப்பம் அவளுடைய அப்பாவிடம் எனக்கு ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டான் அதற்கு அப்பா அவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார் ஆனால் அவன் செல்லை வாங்கி அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தான் ஏன் என்று தெரியுமா ?
அது பார்சல்

ஒருவர் தன்னுடைய மனைவி வரும் பொழுது மட்டும் கண்ணாடி போட்டுக் கொண்டுள்ளார் ஏன் தெரியுமா ?
டாக்டர் தலைவலி வரும்போது மட்டும் போட சொன்னாராம்
ஒருவன் அவன் வளர்க்கும் நாய் குட்டிக்கு பாலை காதில் ஊற்றினான். ஏனென்று கேட்டதற்கு, 'நாய்க்குட்டி வாயில்லா ஜீவன் என்று என் தாய் சொன்னாள். அதனால்தான் காதில் ஊற்றினேன்' என்றான்
ஒரு பையன் கல்யாண தரகரிடம் எனக்கு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பொண்ணுதான் வேணும் என்று கூறினான், அது ஏன் ?
அப்போதுதான் அந்த பொண்ணு குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்றான்.
வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
மைசூர் பாக்
டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு ஒருவன் சாக்பீஸ் எடுத்துக்கொண்டு சென்றான் அது ஏன்
எட்டு போட்டு காட்டுவதற்காக
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்
மனுசனுக்கு கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ண முடியாது செல்போனுக்கு பேலன்ஸ் இல்லையென்றால் கால் பண்ண முடியாது
பல் டாக்டருக்கு தான் அதிகம் சொத்து இருக்கிறது அது ஏன் ?
என அவர் தான் எல்லாருடைய சொத்தையும் புடுங்கிறாரே
எந்த எழுத்தை எழுத முடியாது ?
தலையெழுத்தை

கடற்கரையில் வீடு கட்டினால் என்ன ஆகும் ?
காசு செலவாகும்
பத்து யானையில் ஒன்பது யானை பேருந்தில் ஏறி விட்டன ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற வில்லை ஏன் ?
அது ஆண் யானை ,வந்ததோ லேடிஸ் பஸ்
வாடிக்கையாளர்: சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?
வங்கி ஊழியர்: இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம் திருப்பித் தர்றதா சொல்லலையே../
கடைக்காரர்: சார், இந்த பேண்ட் 10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.
வாடிக்கையாளர்: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
கடைக்காரர்: 10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.
வாடிக்கையாளர்: இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?
கடைக்காரர்: பத்து ரூபா.
வாடிக்கையாளர்: லூசுன்னா எவ்ளோ?
கடைக்காரர்: எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.
தரகர்: பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது?
அப்பா: ஆடி வந்தா 18 முடியுது.
தரகர்: அப்போ ஆடாம வந்தா?
பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்கணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரேன்.

ஒருவர்: எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா?
தபால்காரர்: உங்க பேர் என்ன?
ஒருவர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே!
வக்கீல்: எதுக்காக எடிட்டர் தலையில் தாக்குனீங்க?
குற்றவாளி: தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை அங்கத்தை நாங்க தாக்குனோம்.
ஓட்டல்காரர் : 2005 ஆம் வருடத்திலேயே சுத்தமான ஓட்டல்னு பாராட்டுப் பெற்ற ஓட்டலாக்கும் இது.
வந்தவர் : அதுக்கப்புறம் சுத்தம் செய்யவே இல்லையோ.
ஓட்டல்காரர் : ???
கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது இரண்டு வரம் கேள்?
பக்தன் : நான் தூங்கும்போது சாக வேண்டும்.
கடவுள் : ஆகட்டும். மற்றொரு வரம்?
பக்தன் : எனக்கு தூக்கமே வரக்கூடாது.
கடவுள் : ??
ஒருவர் : உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீங்க?
மற்றவர் : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான் அதான்?
ஒருவர் : ??

அப்பா : மகளே, முன்னாடி நீ என்னை அப்பானு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற?
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலஞ்சிடும் டாடி அதான்.
அப்பா : ???
மகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன் : ஏம்பா அப்படின்னா அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
தந்தை : ???
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu