Kadi jokes-கடி..கடி..கடி ஜோக்ஸ் படிக்கிறீங்களா? சிரி..சிரி..சிரின்னு சிரிங்க..!
Kadi jokes-கடி ஜோக்குகள் (கோப்பு படம்)
Kadi jokes
ஒருவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க ஒரு வழி இருக்கிறது என்றால், அது நகைச்சுவையால் மட்டுமே முடியும். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரம். வேறு எந்த ஜீவராசிகளுக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த சிரிப்பு.
வேடிக்கையான மனிதர்களை பெரும்பாலும் எல்லோரும் விரும்புவார்கள். எண்ணெயில் அவர் நம்மை சிரிக்க வைப்பவர். நகைச்சுவை துணுக்குகள், நகைச்சுவையான சண்டைக்காட்சிகள், கிண்டல் என ஒரு மனிதரை சிரிக்கவைப்பதற்கு பல வழிகள் உள்ளன.
சிலர் பேச்சால் சிரிக்க வைப்பார்கள். சிலர் பேசாமலேயே சிரிக்க வைப்பார்கள். இன்னும் சிலர் அங்க அசைவுகளாலேயே சிரிக்க வைப்பார்கள். நகைச்சுவை என்பது அனைவரும் விரும்பும் ஒரு விருந்தாகும். குழந்தைகள் கூட சிரிப்பு என்றால் மகிழ்ச்சியோடு சிரிக்கும்.
Kadi jokes
இதோ உங்களை சிரிக்க வைப்பதற்கு கடி ஜோக்குகளை தெளிச்சு வச்சிருக்கோம். நீங்களும் அள்ளிப் பருகுங்கள்.
பொண்டாட்டி அடிக்க வந்தா என்ன செய்வடா..?
போண்டா டீ கொடுப்பேன். அமைதியாகிடுவா
செங்கல்லில் பட்டு செய்யற ஊர் எது தெரியுமா?
செங்கல்பட்டு தான்.
ஒருத்தர் அவரோட passport -ஐ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.
தண்ணில இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க தெரியுமா?
ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது இல்ல,அதான்.
லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஐ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.
ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாங்குழல் (புல்-லாங்-குழல்)
ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருந்தார்களாம் ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லிப் பூ போல இருந்திச்சாம்.
The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
எலிய என்ன பண்ண யானை ஆக்கலாம்?
எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
Kadi jokes
குடிக்க முடியாத டீ எது?
கரண்டீ
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கணும்.
வேலைக்கு போற விலங்கு எது?
பனி(பணி) கரடி.
நாம ஏன் படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்ல..
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள். அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.
எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
Kadi jokes
ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
ஈரமாகும்
ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
மாணவர்: 4
ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.
மாணவர்: 52
ஆசிரியர்: என்ன?! எப்படி?
மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26.
மகள் : அம்மா, இன்று நான் செய்யாத காரியத்திற்காக டீச்சர் என்னை அடித்தார்.
அம்மா: அது உங்க டீச்சரை ரொம்ப கேவலப்படுத்துது. நீ என்ன செய்யவில்லை?
மகள் : வீட்டுப்பாடம்.
நண்பர் 1: உங்கள் மனைவி தனியாக இருக்கும்போது தனக்குத்தானே பேசுவது உண்மையா?
நண்பர் 2: எனக்குத் தெரியாது. அவள் தனியாக இருந்த போது நான் அவளுடன் இல்லை.
ஒரு சுவரைக் கட்ட ஆறு பேர் எட்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால், அதைக் கட்ட மூன்று பேர் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள்?
நேரம் தேவையில்லை, ஏனென்றால் சுவரை ஏற்கனவே கட்டிமுடிச்சாச்சு.
( Exam ஆரம்பிக்கும் முன்…)
மாணவன் : டீச்சர் ஒர் Doubt…
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
Kadi jokes
முட்டையே போடாத பறவை என்ன பறவை?
ஆண் பறவை
நாலு “T” ஒரு “G” இருக்க ஆங்கில வார்த்தை என்ன?
Originality (ஒரிஜி-னாலிட்டி )
பக்கத்து வீட்டு பையன் ஊதுபத்தி ஸ்டாண்டை விழுங்கிட்டான், ஆனாலும் ஒன்னும் ஆகல ஏன்?
ஏன்னா அவன் விழுங்கினது வாழை பழம்.
எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
சங்கிலி
தண்ணீருக்கும், கண்ணீருக்கும் என்ன வித்தியாசம்?
“த” “க” தான் வித்தியாசம்
பல் வலிக்கு முக்கியமான காரணம் எது?
பல் தான்
Kadi jokes
பசு ஏன் பால் தருது?
ஏன்னா அதனால டீ, காபி தர முடியாதுல்ல?
கல்யாண வீட்ல ஏன் வாழை மரம் கட்றாங்க?
கட்டலன்னா கீழ விழுந்திடும்ல அதனாலதான்
கோலம் போடுவதற்கு முன்னாடி எதுக்கு தண்ணி தெளிக்கணும்?
கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்ல
2050-ல உலகம் எப்படி இருக்கும்?
உருண்டையா தான் இருக்கும்
இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு?
கமா “,” தான் இருக்கு
ஒருத்தர் கைல கிடைச்ச பொருள் எல்லாத்தயும் தூக்கி வீசிகிட்டே இருப்பாங்களாம் ஏன்?
ஏன்னா, அவங்களுக்கு “வீசிங்” பிரச்னை இருக்காம்
ஒரு கோழி காலைல கூவுனா என்ன அர்த்தம்?
அந்த கோழி எழுந்துருச்சுனு அர்த்தம்.
எலி சாப்பிட்டு மிச்சம் வெச்ச சாதம் என்ன சாதம்?
எலிமிச்சசாதம் (எலுமிச்சை சாதம்)
ரெண்டு பேர் ஒரு ஹோட்டலுக்கு போய் நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க
அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு food poison ஆகிடிச்சி ஏன்?
ஏன்னா அது நாலு நாள் இட்லி
Kadi jokes
கணவன்: பொண்டாட்டியை விட பொண்டாட்டியோட சேலை தான் நமக்கு ரொம்ப மரியாதை தருது… எப்படி?
பீரோவ திறந்தா உடனே கால்ல விழுது
கசப்பே இல்லாத மொழி எது?
தேன்மொழி
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu