Kaalai vanakkam in tamil-கண்விழிக்கும் நேரத்தில் காலை வணக்கம் சொல்வோமா?

Kaalai vanakkam in tamil-கண்விழிக்கும் நேரத்தில் காலை வணக்கம் சொல்வோமா?
X

Kaalai vanakkam in tamil-காலை வணக்கம் மேற்கோள்கள் (கோப்பு படம்)

காலைப்பொழுது அழகானது. அன்றைய நாளின் இளமைப்பொழுது. அதை இனிதாகத் தொடங்க இனிய வணக்கம் சொல்வது நம்பிக்கைத் துளிர் விடும்.

Kaalai vanakkam in tamil

ஒரு பொழுதின் விடியல் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரவேண்டும். அந்த நம்பிக்கையும் உற்சாகமும் ஆயிரம் மலைகளை உடைக்கும் துணிவைத் தந்துவிடும். காரணம் மனம் என்னும் மாய உலகு. மனம் தன்னைச் சுற்றி நிகழ்வதை உன்னிப்பாக கவனிக்கும். சோர்ந்திருந்தால் தானும் சோர்வடையும். அழுதால் அதுவும் அழும். சிரித்தால் அதுவும் சிரிக்கும்.

காலை தூக்கம் களைந்து எழும் நேரத்தில் இனிமையான பாடல் ஒன்றைக் கேட்டோமானால், அன்று முழுவதும் அந்த பாடல் மனதுக்குள் பாடிக்கொண்டே இருக்கும். அதை அனுபவித்தவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். அதைப்போலவே மகிழ்ச்சியாக இருந்தால் அன்றைய நாளும் நன்மைகள் தரும் நாளாக அமையும்.

Kaalai vanakkam in tamil


நம்பிக்கை என்பது சாதாரண வார்த்தைகளில் இருந்துகூட கிடைக்கலாம். அந்த வார்ததைகளைக் கூறி காலை வணக்கம் சொல்வோமா?

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூடக் கிடையாது . இனிய காலை வணக்கம்.

மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் சிறந்த நண்பராகவும், அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால் உங்கள் எதிரியாகவும் இருக்கும். இனிய காலை வணக்கம்

உங்கள் மகிழ்ச்சியை யார் ஒருவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ அவர்களிடமிருந்து ஓர் அடி தள்ளியே இருங்கள். இனிய காலை வணக்கம்

அளவில்லாத சோதனைகளை ஏற்றுக் கொண்டால் தான், ஆச்சர்யங்கள் நிறைந்த வெற்றி வந்து சேரும். இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

இருள் கிழித்து ஒளியூட்டிய உதயனின் வருகைக்கு உளமார்ந்த நன்றி கூறி, உறக்கம் நீக்கி உற்சாகமாய் இன்றைய உன் வாழ்க்கை பயணத்தை துவங்கு. இனிய காலை வணக்கம்

இலக்கு நோக்கி நகரும் இளமைக்கு இன்ப நாளாய் அமைய இறைவனிடம் பிரார்த்தித்து,

இன்முகத்துடன் இந்நாளை ஆரம்பிப்போம். இனிய காலை வணக்கம்

துன்பம் மறைந்து இன்பம் மலர, நம்பிக்கை ஊட்டும் இந்த காலைப் பொழுது இனிதாய் மலரட்டும். இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

உலகம் அழகானது, நம் பிறப்பும் அதைவிட அழகானது. சுற்றி உள்ள இயற்கையை ரசித்தால்.

வாழ்க்கை அழகாகும் சுற்றி உள்ள உயிர்களை நேசித்தால் இன்னமும் இன்பம் செறிவாகும். இனிய காலை வணக்கம்.

ஒருநாள் வாழ்க்கை என்று பூக்கள் வாடுவதில்லை. மலர்ச்சியுடன் பூக்கின்றன. இந்த நாள் பூக்கள் போல் புன்னகையுடன் மலரட்டும். இனிய காலை வணக்கம்

ஒவ்வொரு புன்னகையும் உங்கள் இளமையை நீட்டுகிறது. உங்கள் ஆயுளை கூட்டுகிறது.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாயிற்கதவு, சிரிப்பு. புன்னகையுடன் காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

ஆசையை சுமந்தால் கவலையை சுமக்க நேரிடும். அன்பை சுமந்து செல்லுங்கள். வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி மேகம் சூழ்ந்திருக்கும். இன்ப மழை பெய்து கொண்டே இருக்கும். இனிய காலை வணக்கம்

வாழ்வதற்கும் பொருள் வேண்டும். அதேபோல வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். இனிய காலை வணக்கம்

இடைவெளிவிட்டு நாம் இருந்தாலும், நம் இதயங்கள் இணைந்தே பயணிக்கின்றன. இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

கோபத்தில் கஞ்சனாக இரு. அன்பில் வள்ளலாக இரு. வாழ்க்கை உன்னை வாழவைக்கும். இனிய காலை வணக்கம்

வீரம் உன்னை மட்டும் காக்கும். தர்மம் உன் வம்சத்தையே காக்கும். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானி. இனிய காலை வணக்கம்

தெரிந்து கொண்டேன் என்பதை விட, தெளிந்து விட்டேன் என்பதே அனுபவம். இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறாதே. - அப்துல் கலாம் இனிய காலை வணக்கம்

அன்பை விட சிறந்த அழகு எதுவும் இல்லை. அன்பை விட பெரிய கடவுள் யாரும் இல்லை. இனிய காலை வணக்கம்

உதயன் வந்து விட்டான். நம் கனவுகளை நினைவுகள் ஆக்க. இறைவன் புதிய நாளை தந்து விட்டான்.

இறைவனுக்கு நன்றி சொல்லி கனவுகளை நோக்கி பயணிப்போம். கனவுகள் நனவாகும், இறைவன் அருளால். இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

ஒவ்வொரு நாளையும், மகிழ்வுடன் ஆரம்பித்து அதே மகிழ்வுடன் கடந்து விட்டால், அதுவே ஆகப்பெறும் சாதனை தான்.

இன்றைய நாளை சிறப்பாக வாழுங்கள். ஏனெனில், நாளை என்பது விதியின் கையில். சிறப்பான காலை வணக்கம்

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பீர். நேர்மறை எண்ணங்களை வளர்ப்பீர். இந்நாள் நன்னாள். இனிய காலை வணக்கம்.


Kaalai vanakkam in tamil

கிடைக்கும் போது பயன்படுத்தி விடு. இருக்கும் போது அனுபவித்துவிடு. நினைத்தவுடன் செய்து முடித்து விடு. வாழ்க்கை ஒருமுறை தான். இனிய காலை வணக்கம்

ஏதோ ஒன்றை ரசிக்கத் தொடங்கு. காயங்கள் காய்ந்து போகும். ரணங்கள் காணாமல் போகும். நற்காலை வணக்கம்

கதிரவனின் கடைக் கண் பார்வையில் மறைந்திருக்கிறது, உனக்கென ஒரு நாள். அந்த நாளை புன்னகையுடன் தொடங்கு. மகிழ்ச்சி பூக்களாக நிறையட்டும் இந்த தினம். காலை வணக்கம்.

வாழ்க்கை ஒரு ரோஜா செடி போன்றது. முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் முள்ளைக் கண்டு பயந்து விடாதே. மலரைக் கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்.


Kaalai vanakkam in tamil

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு. அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே. இனிய காலை வணக்கம்.

எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லோரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. இனிய காலை வணக்கம்.

உனக்கு நீ நண்பனாக இருந்தால் போதும் மற்றவர்கள் உன்னை நண்பனாக்கிக் கொள்வார்கள். இனிய காலை வணக்கம்.

உங்கள் வாழ்க்கையை யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? மிக மிக எளிது. கண்ணாடியை எடுத்துப் பாருங்கள். இனிய காலை வணக்கம்.


Kaalai vanakkam in tamil

விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம். இனிய காலை வணக்கம்

பிறரை நேசிப்பதை விட உன்னை நேசிப்பவனை அதிகம் நேசி. இனிய காலை வணக்கம்

பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம். எனவே பயத்தை விட்டொழித்து தைரியத்தோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள். இனிய காலை வணக்கம்.

நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும். நமக்காக யாரும் அதை செய்ய மாட்டார்கள். இனிய காலை வணக்கம்.


Kaalai vanakkam in tamil

புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள். புன்னகை பல பிரச்னைகளை தீர்க்கும். மௌனம் பல பிரச்னைகளை வர விடமால் தடுக்கும். இனிய காலை வணக்கம்

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒளிந்துகொண்டால், நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது? எதிர்கொள்வதே வாழ்க்கை. இனிய காலை வணக்கம்

நம் வாழ்வில் கஷ்டங்கள் வந்து போகும். அதனையும் கடந்து வாழ பழகு. இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

வாழ்வின் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற உதவும் ஒரே ஆயுதம் நம்பிக்கைை மட்டுமே. எனவே இந்நாளை புதிய நம்பிக்கைகளோடு தைரியமாக தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். இனிய காலை வணக்கம்.

காலங்கள் சிலரை மறக்கச் செய்துவிடும் ஆனால் ஒருவரின் மீது வைக்கும் உண்மையான அன்பு அந்த காலத்தையே மறக்க செய்துவிடும். இனிய காலை வணக்கம்.

ஏமாற்றத்தை பறித்துக்கொண்ட போதும் ஏனோ எதிர்பார்ப்பை மட்டும் குறைத்துக்கொள்ள முடிவதில்லை. இனிய காலை வணக்கம்.

அழகிய காட்சியை தேடாதீர்கள் காணும் காட்சியை அழகாக்குங்கள் வாழ்க்கை அழகாகும். அழகிய இனிய காலை வணக்கம்


Kaalai vanakkam in tamil

ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்

மற்றவரிடம் குறைகளைத் தேடுவதை விட நிறைகளைத் தேடுங்கள். மற்றவரிடம் உங்கள் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்

முடியாது, முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு 'முடியும்' என்ற நம்பிக்கையோடு இந்த இனிய நாளை தொடங்குங்கள். இனிய காலை வணக்கம்.

வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் எல்லோரையும் ஒரே போல் நடத்துவதில்லை. வாழ்க்கையைத் தீர்மானிப்பதே நீங்கள்தான். இனிய காலை வணக்கம்.


Kaalai vanakkam in tamil

சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.. ஆனால் செயல்கள் தான் தங்கத் துளிகள். இனிய காலை வணக்கம்.

நீர் ஊற்றும் வரை செடிகள் வாடுவதில்லை. உன் சிந்தனை ஊற்று இருக்கும் வரை உன் வலிமை தோற்பதில்லை. இனிய காலை வணக்கம்

ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டால், அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம். இனிய காலை வணக்கம்.

Tags

Next Story