சோளம் ஆரோக்யத்தின் வரம்..! அது தெரியாமல் போனால் சாபம்..! அவ்வளவும் நன்மைகள்..!

Sorghum Millet in Tamil
Sorghum Millet in Tamil-சோளத்தில் பல வகையான சோளம் உள்ளன. அவற்றில் சில கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தி வருகிறோம். பழங்காலத்திலேயே வீட்டு விலங்குகளுக்கு சோளம் உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சோளத்தில் பல வகைகள் உள்ளன. நாம் பைகோலர் வகை சோளத்தை உட்கொள்கிறோம்.வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. கோதுமையுடன் ஒப்பிடும்போது இதில் அதிகளவு புரதம் உள்ளது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய தாதுக்களும் அதிகளவில் உள்ளன. மேலும், இதில் ஏராளமான நார்ச்சத்தும் உள்ளது. சோளத்தில் ஆரோக்ய நன்மைகள் குறித்து பார்ப்போம் வாங்க.

சோளம் என்பது என்ன?
சோளம் ஒரு தனிய வகையைச் சார்ந்த உணவாகும். இது ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படும் சோளம், அதன் ஊட்டச்சத்து குறித்த முக்கியத்துவத்தால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது சோளம் பிரபலமாகி வருகிறது. சோளம் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால், இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கோதுமையால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு சோளம் நன்மை பயக்கிறது.
சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்
சோளத்தில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியம், வைட்டமின் 'பி' காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருப்பதால் இவை உடல் ஆரோக்யத்திற்கு பெரிதும் நன்மை பயக்கிறது.
சோளத்தின் நன்மைகள்

சோளத்தின் ஆரோக்ய நன்மைகள் கீழே தரப்பட்டுள்ளன:
பல்வலிக்கு நிவாரணம்
பல் தொடர்பான பிரச்னைகளை முறையாக கவனிக்காவிட்டால் அதிக ஆபத்து ஏற்படக்கூடும். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் மட்டுமே பற்கள் பலவீனமடைகின்றன. இதன் விளைவாக பல்லில் வலி ஏற்படுகிறது. பல்வலியை போக்க சோளம் உதவுகிறது. ஏனெனில், இதில் பற்களை வலுப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளன.
Sorghum Millet in Tamil
மலச்சிக்கலுக்கு :
அஜீரணம் மலச்சிக்கல் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோள ரொட்டியை சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். சோளத்தில் நல்ல நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை சீராக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கலை குணப்படுத்த முடிகிறது. இது மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மூல நோயை தடுக்கிறது.

இரத்தத்தை அதிகரிக்கிறது:
சோளத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் சோளத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை தடுக்கப்படும்.
முகப்பருவை நீக்கும்
பொதுவாக பெண்கள் குறிப்பாக இளம் வயது பெண்கள் பருக்கள் மற்றும் முகப்பரு குறித்து கவலைப்படுகிறார்கள். முகப்பருவை போக்குவதற்கு வீட்டிலேயே பல வைத்திய முறைகளை செய்தும் பலனளிக்காமல் விரக்தியில் இருப்பார்கள்.
அப்படி முகப்பரு போகாதவர்களுக்கு முகப்பருவை நீக்க சோள பேஸ்ட் பெஸ்ட் ஆப்ஷன். சோளத்தை நன்றாக ஊறவைத்து அதை அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்து முகப்பருக்கள் மீது பூசுங்கள். குறைந்தது அரை மணி நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகப்பருக்கள் காணாமல் போய்விடும்.

எலும்புகளை பலமாக :
உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனம் ஆவதுடன் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. சோளத்தை சாப்பிடுவதன் மூலம், எலும்பு பலமாகும். சோளத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அச்சுறுத்தலை தடுக்கிறது.
யார் சோளத்தை தவிர்க்க வேண்டும்?

சோளம் அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு ஆரோக்ய குறைபாடு ஏற்படக்கூடும். யார் சோளம் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்று கீழே தரப்பட்டுள்ளது :
- ஒரு ஆராய்ச்சியின்படி, பலவீனமானவர்கள் சோளத்தை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சோளத்தை ஜீரணிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான இருக்கலாம்.
- பித்தம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும். சோளத்தில் குல்கந்து கலந்து மாவாக்கி அதில் ரொட்டி செய்து சாப்பிடலாம்.
- சோளம் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் சாப்பிடக்கூடாது. சோளத்தை கோதுமையுடன் கலந்து சாப்பிடலாம்.
சோளம் சாப்பிடுவதால் வேறு பிரச்னைகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை செய்யலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu