பீர்க்கங்காயில் என்னென்னஊட்டச்சத்து இருக்குதுன்னு தெரியுமா?
பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பழம். இது கிழக்கு மற்றும் மத்திய ஆசியா போன்ற துணை வெப்ப மண்டலங்களில் வளர்கிறது. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வியட்நாமிலும் மக்கள் இதை சூப்புகள் மற்றும் பொரியல்களில் பயன்படுத்துகின்றனர். இங்கு, பீர்க்கங்காய் தரும் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து விவரங்களை நாம் காணலாம்.
பீர்க்கங்காயின் நன்மைகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
பீர்க்கங்காய் நீரிழிவு நோயை எதிர்க்கும் குணங்களை பெற்ற காய்கறியாக உள்ளது. இதில் உள்ள பெப்டைடுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் அளவு ஆகியவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகின்றன. எனவே, பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த காய்கறியாகும்.
உடல் எடையை குறைக்க உதவும்
பீர்க்கங்காய் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இதில் குறைவான கலோரி மற்றும் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இதில் உடல் எடையை குறைக்க உதவ கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இதன் மூலம், பீர்க்கங்காய் நீண்டநேரம் உங்களை பசியின்றி வைப்பதால் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்கும்
பீர்க்கங்காய் மற்ற காய்கறிகளை விட குறைந்த கொழுப்பையும் கொண்டுள்ளது. எனவே உங்கள் இதய பாதுகாப்பிற்கு ஒரு மிகச்சிறந்த காய்கறியாகும். இதய நோய் உள்ளவர்கள் இதை அடிக்கடி அடிக்கடி உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும்.
செரிமானம் மேம்படும்.
பீர்கங்காய் அதிகளவு நார்ச்சத்துக்களை கொண்டுள்ளதால் செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது மிகக் குறைவான அளவு கொழுப்பை கொண்டுள்ளதால் மலச்சிக்கலைத் தடுத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
வைட்டமின்கள் நிறைந்தது
பீர்க்கங்காயில் தோல், தலைமுடி, கண் பார்வை போன்றவற்றிற்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் பீர்க்கங்காயில் வைட்டமின் பி-3, பி-5, பி-6, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பீர்க்கங்காயில் உள்ள இந்த வைட்டமின்கள், புற்றுநோய், இதய நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
ஒவ்வாமைகளில் இருந்து பாதுகாக்கிறது.
பீர்க்கங்காயில் ஒவ்வாமையை எதிர்க்கும் குணங்கள் உள்ளது. மேலும், பீர்க்கங்காயை தொடர்ந்து உண்டு வருவதால் அரிப்பு போன்ற ஒவ்வாமைகளை தணிக்க உதவக்கூடும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது மட்டுமில்லாமல், சில ஹோமியோபதி மாத்திரைகள் பீர்க்கங்காய் சாற்றையும் கொண்டுள்ளன.
மூளை ஆரோக்கியத்திற்கு உதவும்
பெருமூளை இஸ்கெமியா என்பது மூளையில் போதிய இரத்த ஓட்டம் இல்லாததால் மூளை திசுக்களின் இறப்பு ஏற்படுகிறது. பீர்க்கங்காய் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும், எலிகள் மீது செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பீர்க்கங்காய் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் என கூறுகின்றன.
வலியில் இருந்து நிவாரணம் பெற
பீர்க்கங்காய் ஆன்டி-அழற்சி குணங்களை பெற்றுள்ளதால் அலர்ஜியினால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. பீர்க்கங்காய் விதை சாற்றில் ஆன்டி-அழற்சி, ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன
கூடுதலாக, பீர்க்கங்காயில் பினோலிக் அமிலம் (Phenolic acid) மற்றும் ஃபிளாவனாய்டுகள் (Flavanoid) உள்ளன. அவை பீர்க்கங்காயை இயற்கையான வலி நிவாரணி ஆக்குகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu