கோடைக்கு கிடைத்த 'ஐஸ் ஆப்பிள்' எது? அட நம்ம 'நுங்கு' தாங்க..! எவ்ளோ நன்மைகள்..?!
Palm Fruit in Tamil
Palm Fruit in Tamil-பனை மரத்தில் காய்க்கும் நுங்கு இந்தியாவில் தமிழ்நாடு உட்பட வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் ஒரு பழமாகும். இது போராசஸ் ஃபிளாபெல்லிபர் மரத்தின் பழமாகும். இது பனைமரத்தில் இருந்து காய்க்கும் ஒரு காய் ஆகும்.
பழம் வட்டமான அல்லது ஓவல் வடிவத்தில் உள்ளது. மேலும் உட்புறத்தில் மென்மையான, ஒளி ஊடுருவக்கூடிய, ஜெல்லி போன்ற கூழ்மம் போன்ற வடிவில் இருக்கும். அதில் சுவையான தண்ணீர் உள்ளடங்கி இருக்கும். கடினமான வெளிப்புற ஓடு உள்ளது. பழம் முதன்மையாக தண்ணீரால் நிரம்பி இருக்கும். மேலும் இதன் குளிர்ச்சியான பண்புகளால் பிரபலமான கோடைகாலப் பழமாகும்.
நுங்கில் பல ஆரோக்ய நன்மைகள் உள்ளன. இதில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும் மற்றும் பாரம்பரியமாக காய்ச்சல் மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில், நுங்கு பொதுவாக பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் நுங்கு சர்பத் என்ற புத்துணர்ச்சியூட்டும் பானத்தை தயாரிக்கப் பயன்படுகிறது, இது பழத்தை சர்க்கரை, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப்பால், அரிசி மற்றும் நுங்கில் செய்யப்படும் ஒரு வகை புட்டு, நுங்கு பாயசம் போன்ற இனிப்பு வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, ஐஸ் ஆப்பிள் ஒரு தனித்துவமான மற்றும் சத்தான பழமாகும். இது அதன் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் சாத்தியமான ஆரோக்ய நன்மைகளுக்காக பிரபலமானதாகும்.
எடை குறையும்
கோடைகாலம் எடை குறைக்க உகந்த காலமாகும். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதில் ஒன்று, நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். அதிக உணவு உண்ணாததால் எடை கூடுவது தடுக்கப்படும்.
மார்பகப் புற்று மற்றும் சின்னம்மை
நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.
சின்னம்மை வராமல் தடுக்கவும், வந்த சின்னம்மையை விரைவில் குணமாக்கவும் நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
வெயில் மயக்கம்
சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மயக்கம் ஏற்படுவது குறையும்.
கர்ப்ப காலம்
கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
நீர்ச்சத்தை அதிகரிக்கும்
நுங்கில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே,கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய நுங்கு சாப்பிடலாம். இது உடல் வறட்சியை போக்கி உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
வயிற்று பிரச்னைகள்
வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைப் போக்க நுங்கு சாப்பிடலாம். வயிற்றில் ஏற்படும் வெப்பக்கோளாறுகள் தீரும்.
சோர்வு
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் நீர்ச்சத்து வெளியேறி அடிக்கடி சோர்வு ஏற்படுகிறது. இவ்வாறு சோர்வு ஏற்படாமல் இருப்பதற்கு நுங்கு சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
செரிமான பிரச்னைகள்
செரிமான பிரச்னை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கும். அதனால் செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
கல்லீரல் பிரச்னை
கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள நுங்கு சிறப்பாக துணைபுரிகிறது. ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
உடலை குளிர்ச்சி
கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு ஏற்படும் வெப்பத்தை நுங்கு சாப்பிடுவதன் மூலம் தணித்துக்கொள்ள முடியும்.
வியர்க்குரு
நுங்கு சாப்பிடுவதன் மூலமாக உடல் வெப்பம் குறைந்து, வியர்க்குரு போய்விடும். நுங்கில் உள்ள நீரை எடுத்து வியர்க்குரு உள்ள இடத்தில் பூசினால் குளிர்ச்சியடைந்து வியர்க்குரு மறைந்துவிடும்.
வெயில் கொப்பளம்
கோடை வெயில் தாளாமல் பலருக்கு சூட்டுக் கொப்பளம் வரும். இவ்வாறு ஏற்படும் கொப்புளத்துக்கு நிறைய நுங்கு சாப்பிட்டால் உடலில் ஏற்பட்டிருக்கும் உஷ்ணம் தணிந்து கொப்பளம் காய்ந்துவிடுவதுடன் கொப்புளம் வராமல் தடுக்கப்படும்.
ஆற்றலை அதிகரிக்கும்
நுங்கில் உள்ள கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பனம்பழம்
பனம்பழம் சாப்பிடுவதும் உடல் ஆரோக்யத்துக்கு நல்லது. கிராமங்களில் பனை மரத்தில் இருந்த நன்றாக பழுத்து விழும் பனம்பழம் அவ்வளவு ருசியானது. அப்படியான பனம்பழம் இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஒரு பழம்,நம்ம ஊர் மதிப்பில் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu