விரை வீக்கம் ஏன் ஏற்படுகிறது? சூதானமா இருந்துக்கோங்க..! முழுசா தெரிஞ்சுக்கோங்க..!

hydrocele meaning in tamil-விரை வீக்கம் (கோப்பு படம்)
Hydrocele in Tamil-விரைகளைச் சுற்றி திரவம் சேர்வதை ஹைட்ரோசெல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதை விரை வீக்கம் என்று அழைக்கிறார்கள். இது ஆண்களுக்கு ஒரு பெரிய உடல்நலப் பிரச்னையாக மாறக்கூடிய ஒரு நிலை ஆகும். இது பொதுவாக புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளில் ஏற்படுகிறது. ஆனால் அது தானாகவே சரியாகிவிடும்.
இருப்பினும், வயதான ஆண்களில், வீக்கம் அல்லது காயம் காரணமாக விரை வீக்கம் ஏற்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவை வலியற்றவை மற்றும் பாதிப்பில்லாதவை, ஆனால் அவை சிறிது காலத்திற்குப் பிறகு பெரியதாக மாறி சிரமமாகவும் இருக்கலாம். இறுதியில், நீங்கள் விரை வீக்கத்திற்கு சிகிச்சை பெற வேண்டும்.
ஹைட்ரோசெல் ஏற்பட பொதுவான காரணங்கள்:
- ஆணுறுப்பில் ஏற்படும் காயம்
- நரம்புகளில் வீக்கம்
- மரபணு காரணங்கள்
- பல கூட்டாளர்களுடன் உடல் உறவு கொள்ளுதலால் ஏற்படும் அழற்சி
- அதிக எடையை தூக்குதல்
- உடலில் அசுத்தமான மலம் வெளியேறாமல் இருப்பது
- மலச்சிக்கல் காரணமாக
- நீண்ட நேரம் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம்
- ஆரோக்யமற்ற வாழ்க்கை முறையும் இந்த பிரச்னைக்கு பின் இருக்கும் காரணங்களாக உள்ளன.
அறிகுறிகள்
- முதலில் விந்தணு பையில் நீர் தேங்கி வீக்கம் உண்டாகும்
- விந்தணு பை நீர் தேங்கி சாதாரண அளவை விட பெரிதாகும்
- கடுமையான வலி ஏற்படும்
- இதனால் பாதிக்கப்பட்ட நபர் நடக்க முடியாது, உட்கார கூட முடியாது.
நோயைக் கண்டறிதல்
உடற்பரிசோதனையாக விந்தணு பை வீங்கிய விதத்தை வைத்தும் அளவைப் பார்த்தும் கண்டறியலாம். சில சமயங்களில் ஏதேனும் காயங்கள் அல்லது அழற்சியால் கூட இப்படி நேர வாய்ப்புள்ளது. அந்த மாதிரியான சமயங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் விந்தணு பையில் தேங்கி இருக்கும் திரவத்தை படம் எடுத்து கண்டறிவார்கள்.
hydrocele meaning in tamil
சிகிச்சை முறைகள்
விரை வீக்க பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம். இல்லையென்றால் நிலைமை மோசமாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
ஹைட்ரோகெலெக்டோமி ஹைட்ரோசெல் பாதிப்பால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று. வீக்கம் இருப்பதால் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புள்ளது. இந்த சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இரத்தத்தில் தொற்று, திரவம் கசியத் தொடங்கினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஹைட்ரோகெலெக்டோமி அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்து விடலாம். ஆனால் சிலருக்கு மீண்டும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
துளையிடுதல் முறை
இந்த முறையில் விந்தணு பையில் இருக்கும் நீரை வெளியேற்ற துளையிட்டு அதன் வழியாக வெளியேற்றுகின்றனர். பிறகு இந்த துளையை ஸ்க்லரோசிங் மருந்துகளை உட்செலுத்தி மூடி விடுகின்றனர். இந்த முறை மூலம் பிற்காலத்தில் இந்த பாதிப்பு வருவது குறைவு .
எனவே அறுவை சிகிச்சை விரும்பாத நபர்கள் இதை மேற்கொள்ளலாம். ஆனால் லேசான வலி, தொற்று மற்றும் விந்தணுக்களைச் சுற்றியுள்ள ஃபைப்ரோஸிஸ் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
- ஆரோக்யமான சாப்பாடு, சுகாதாரமான வாழ்க்கை முறையை பேணுங்கள்.
- ஆணுறுப்பில் ஏற்படும் காயத்தை தடுக்க விளையாடும் போது பாதுகாப்பு கப்களை வைத்துக் கொள்ளுங்கள்.
- நோய்த்தொற்றை தடுக்க பல பேருடனான உடலுறவை தவிருங்கள்.
- உடற்பயிற்சி செய்து உடம்பை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu