காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..? இதழ்களின் உரசலில் எழும் வரம்..!

காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..? இதழ்களின் உரசலில் எழும் வரம்..!
X

husband wife quotes in tamil-கணவன்-மனைவி மேற்கோள்கள்.(கோப்பு படம்)

Husband Wife Understanding Quotes in Tamil-மின்தூண்டல் குறித்து இயற்பியலில் படிக்கும் நாம், உடலுக்குள் எழும் வேதிமாற்றங்களை காதலில் மட்டுமே காண முடியும்.

Husband Wife Understanding Quotes in Tamil-காதல், காலங்களை கட்டிப்போட்டுவிட்டு கவிதைகள் எழுதும் பருவத்தில் கனியாக வருவது. வரங்களை வாங்கிவரும் தேவதூதர்களைப்போல காதல் வந்ததும் தவிக்கும் உள்ளங்களின் தவிப்பு வார்த்தைகளால் வடிக்கமுடியாதது. ஒரு சிறிய பார்வை ஒன்றே போதும் இரு விழிகளும் காதல் மொழிகளில் பேசிக்கொள்ள. மொழிகளற்ற ஒரு உலகம் காதல். பார்வைகளால் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும் மாய மொழி, காதல்.

பாடல்களை மட்டுமே ரசித்துக்கொண்டிருப்பவர்கள் காதல் வயப்பட்டால் பாடல்களின் வரிகள் பிடித்துப்போகும். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா....என்ற பாடலை ரசித்த மனம், காதல் வயப்பட்டதும் அந்த வரிகளின் அழகை ரசித்து அந்த தென்றல் என் மீது வந்து மோதாதோ..என்று எண்ணவைக்கும். மனைவியைக் கணவனும் ; கணவனை மனைவியும் காதலியுங்கள்..ஈருயிர் ஓருயிராய் வாழுங்கள். கணவன்,மனைவி மேற்கொள்கள் உங்களுக்காக..

  • திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை நரகம் என்றால் அது பொய்! மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம்.
  • உன்மேல எனக்கு இருக்கிற உரிமை எனக்கு மட்டுமே சொந்தமானது யாருக்கும் விட்டு தரமாட்டேன்.
  • உலகம் மறந்து உறைந்து போவேன்... உன் விரல் பிடிக்கும் ஒரு நொடிப் பொழுதில்.
  • மனைவியின் கோபத்தையும், கவலையையும் புரிந்து கொள்ளும், ஒவ்வொரு ஆணும் தன் மனைவி கண் கலங்குவதை விரும்புவதில்லை
  • நமக்காக ஏங்கும் காதலும், எப்போதும் நம்மைச் சுற்றி சுற்றி வரும் காதலும், கிடைத்தால் அதை விட அன்பு காட்ட எவராலும் முடியாது
  • இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உன் மீது வைத்த காதல் குறையவே குறையாது...
  • இருமனங்கள் உறவாட வார்த்தைகள் ஏதும் தேவையில்லை, பார்வைகள் பேசும் மௌன மொழியே போதும் என்பதை உணர்ந்தேன், உன் விழி காதல் மொழி பேசுகையில்.
  • என்ன மந்திரம் செய்தாயோ தெரியவில்லை, நின் இமை சிறகில் பறக்க விரும்பிய நான், உந்தன் இதழ் சிறையில் அகப்பட்டுவிட்டேன், ஆயுட்கால கைதியாக.
  • எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்" அழகு, காதலுக்கு "நாம்" அழகு..!
  • என் கோபங்களும் தாபங்களும் கதிரவனைக் கண்ட பனியாய் உருகித் தான் போகிறது, நீ இதமாய் கட்டி அணைத்து எந்தன் காதோரம் இதழ் முத்தம் பதிக்கையில்..
  • தீபத்தை ஒளியும், மலரை மணமும், உடலை நிழலும், பகலை பரிதியும், இரவை இருளும் பிரியாதது போல, உன்னில் என்னை தொலைத்து நின்னை யான் பிரியாதிருக்கும் வரம் ஒன்று வேண்டும்..!
  • என்னுடன் அவள், அவளுடன் நான்.. அழகாய் எங்கள் உலகம்..!
  • பெற்றவர்களின் பரிவு வாலிபம் வரை.. உறவினர்களின் பாசம், தேவை முடியும் வரை.. உன்னுடனான என் உறவு, நீளலாமே வாழ்வின் எல்லை வரை..!
  • விழுதுகள் மரத்தை தாங்கலாம். வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்.எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவி தான். ஒரு பெண்ணுக்கு கணவன் தான்.அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
  • அப்பாவி பெண் கூட புத்திசாலி கணவனை ஆள முடியும். ஆனால் புத்திசாலிதானம் உள்ளவளே

முட்டாள் கணவனை ஆள முடியும்.

  • நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ. இப்போது வரமாக கேட்கிறேன்,உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று.
  • எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை, எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்

விட்டுச் செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண் மகன்.

  • உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும் எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை.

அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.

  • தன் மனைவியின் கோபத்தையும் பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும் எந்த ஒரு ஆண் மகனும் தனது மனைவி கண்ணீர் சிந்துவதை விரும்புவதில்லை.
  • நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
  • எவ்வளவு பெரிய துன்பத்தையும் உன் புன்னகையால் விழுங்கி விடுவாய்.
  • கணவன் பணக்காரனாக இல்லை என்றாலும் பரவாயில்லை. கடன் காரனாக இருக்க கூடாது என்று நினைப்பவளே உண்மையான மனைவி.
  • என் இதயம் இருப்பது என்னவோ எனக்குள் தான் ஆனால் அது துடிப்பது உனக்காக மட்டும் தான்.
  • கணவன் மனைவி காதல் என்பது,கட்டி பிடித்தலிலும் முத்தம் இடுதலிலும் இல்லை. தன்னோடு வாழ்பவரின் வலியையும் உணர்வையும் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.
  • எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்து கொண்ட மிக பெரிய உறவு நீ.. !
  • நாம் ஒருவரை நேசிக்கும் போது இந்த உலகமே அழகாய் தெரியும் நம்மை ஒருவர் நேசிக்கும் போது இந்த உலகம் பேரழகாய் தெரியும்..!
  • கோபப்படுவது நீயாக இருக்கும் போது, உன்னிடம் தோற்பது கூட எனக்கு சுகமே..
  • ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால், அந்த உறவின் மீது உள்ள அன்பு வானுயர்ந்தது..!
  • சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்..!
  • உனது சிணுங்கல்களை நான் ரசிப்பதற்காகவே சண்டை போடுகிறாயோ..?
  • காதல் மொழியில், கோபம் கூட அன்பின் வடிவமே..!
  • கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை..!
  • கோபமாக நான் நிற்கும் போது, உன் செல்லக் கொஞ்சல் போதும் பெண்ணே, என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது