ஆதலால் காதல் செய்வீர் கணவனை..! கொண்டாடும் மனைவிகள்..! எப்டீ..?
Best Husband Quotes in Tamil
Best Husband Quotes in Tamil
முதற்காதல் என்றுமே மறக்கமுடியா இன்பம். தயக்கமே இல்லாமல் சொல்லிய அந்தக்காதல் தோற்றாலும் சரி வெற்றியடைந்திருந்தாலும் சாரி, அந்த காலகட்டங்களை மறக்கமுடியாது. கணவன் மனைவியாக வாழும்போது கூட அந்த நினைவுகள் அழகான நினைவுகளாக மலரும். கணவன் என்பவனை நினைத்து மனைவி இன்புறும் ரசனைமிகு மேற்கோள்கள்.
மயிலிறகாய் என் மனம்
வருடி மலர்கின்றாய்
என் மன்னவனே!
பகல் நிலவாய் என் பாதையில்
ஒளிர்கின்றாய் என்னவனே!
நிழற்குடையாய் நீ நிற்க
ஏங்குகிறேன் என்னுயிரே!
நகல் படமாய் நானிருக்க
நேரமென்ன மாயவனே..!
ஒரு வண்ணத்துப்பூச்சி
என்னிடம் வந்து கேட்டது
உன் கணவன் என்ன ஓவியமா?
அதற்கு நான் சொன்னேன் இல்லை
அவன் என் உயிரின் காவியம் என்று...!
Best Husband Quotes in Tamil
பாசத்தை பொழிய பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது என்னவோ
உன் மடியைத்தான்..!
என் இதயம் வரைந்த ஓவியம்..
என் வாழ்க்கையில் மலர்ந்த காவியம்..
உனக்கென இனி நான் எனக்கென இனி நீ..
புது பயணம் தொடர்வோம்..வா..வா..!
நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்
ஆனால் என் உயிர் உன்னோடு
இருப்பது யாருக்கு தெரியும்
உன்னை தவிர..!
அளவுக்கு மிஞ்சினால்
அமிழ்தமும் நஞ்சாம்..!
எனக்கு ஏனோ
அமிழ்தமாகவே தெரிகிறது
அவன் முத்தம்..!
அளவுக்கு மிஞ்சினாலும்..!
Best Husband Quotes in Tamil
கவிதை கேட்கும்
காகிதம் போல்- அவன்
கன்னங்கள் கேட்கும்
என் முத்தம்..!
மனைவி வாழும்
இரண்டாவது கருவறை
கணவன் இதயம் தான்..!
உன்னை ரசிக்கும் போது
நான் என்னை மறந்தேனடா..!
உன்னை ரசிக்கும் போது,
என் விழிகள் உன் அழகில்
உறைந்து போகிறதடா
என் அழகா..!
உந்தன் வருகையை
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்..!
நீ என் மணாளனாக
அமைவதற்கு மட்டுமல்ல
என் தந்தையின் மறு
உருவமாக அமைவதற்கும் தான்..!
காலங்கள் கரைகிறது..
நாளங்கள் சிறுக்கிறது..
ஆனாலும் உன்மேல் நான்
வைத்த அன்பு மட்டும்
குறையவில்லையடா..
என் புருஷா..!
Best Husband Quotes in Tamil
சண்டை வந்தா சமாதானம் பண்ணலாம் ஆனால்.
சமாதானம் பண்ணவே சண்டையிடும்
என்னவன் அழகு..!
என்னோடு ஊடல் கொள்வதற்காகவே
என்னவன் செய்யும் சேட்டைகள்
குறும்பின் உச்சம்..!
என் கண்களுக்குள் மட்டுமல்ல -நீ
என் உயிரில் கலந்த ஜீவன்..!
என் இதயத்தில் மட்டுமல்ல -நீ
என் உடல் முழுதும் விரவியிருக்கும்
குருதி நீ..!
கணவனாக மட்டுமல்ல-
என் தோழனாக
தோள் கொடுக்கும் என் மூச்சும் நீதான்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu