நோய்கள் ஏன் தலைவிரித்து ஆடுகிறது? இதற்கு என்ன காரணம்?
ஆரோக்ய உணவுகள் (கோப்பு படம்)
சீருணவு:
உணவு என்பது அனைத்து சத்துகளையும் உள்ளடக்கிய சமச்சீரான அளவில் இருக்க வேண்டும் மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து இவைகள் மூன்றும் அடங்கிய ஒன்றே உணவு என்றும் சமச்சீர் உணவு என்றும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளார்கள்
இந்த மூன்று சத்துக்களும் பாரம்பரிய அரிசிகளில் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அரிசி என்பது வெண்மையாக இருக்க வேண்டும் என்பது நவீன காலத்து மூளைச்சலவையாகும் (விளம்பரம் மற்றும் வியாபார நோக்கு)
நம் முன்னோர்கள் கைக்குத்தல் முறையில் உரல் மற்றும் உலக்கையில் இடித்து உணவை உண்டார்கள் எந்த நவீன ஆலைகளிலும் அரிசி அரைத்து உண்ணவே இல்லை நாம் தான் இப்பொழுது எல்லாவற்றுக்கும் நவீன இயந்திரத்தை நாடுகிறோம்
இதனால் அரிசியின் மேலே உள்ள பழுப்பு நிறங்கள் முழுவதுமாக நீக்கப்படுகிறது வெறும் மாவுச் சத்துக்கள் மட்டுமே அடங்கிய வெள்ளை அரிசியை நாம் பயன்படுத்துகிறோம் இதனால்தான் நோய் வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
காப்புணவு:
ஒரு உணவு என்பது மனிதனின் உயிரை நீண்ட காலத்திற்கு வாழ வைக்க வேண்டும். அதுவும் நோய்கள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டும். அதுவே சிறந்த உணவு. அப்படிப்பட்ட உணவை தான் நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட உணவை நாம் உண்ணுகிறோமா? நம் இளைய தலைமுறை பிள்ளைகள் உண்ணுகிறார்களா ? என்று உங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்ளுங்கள்.
ஒழுங்குணவு:
மாறுபாடு இல்லாத உண்டி (உணவு), நம் முன்னோர்கள் பாரம்பரிய வேளாண்மை செய்து அந்த அரிசியை உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்கள். நாம் அப்படி செய்கிறோமா தொட்டதற்கெல்லாம் ரசாயனம் களைக்கொல்லிகள் வாயில் நுழையாப் பெயர்களில் மாத்திரைகள் பூச்சிக்கொல்லிகள் எத்தனை எத்தனை விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் போகிறது நோய்கள் மட்டும் தீர்ந்தபாடில்லை.
நம் பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகை இரண்டு அடிகளில் சொல்லி விட்டுத்தான் சென்றுள்ளார்கள். அதை நாம் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறே நாமும் கடைபிடிக்க வேண்டும். நீண்ட ஆயுளுடன் நாமும் நமது அடுத்த தலைமுறைகளையும் காக்க வேண்டும் என்பதே நமது அடிப்படை கடமை ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu