Horror Story in Tamil-திகில் கதை படிக்க ஆசையா..? படீங்க..பயப்படுங்க..!

Horror Story in Tamil-திகில் கதை படிக்க ஆசையா..? படீங்க..பயப்படுங்க..!
X

horror story in tamil-திகில் கதை (கோப்பு படம்)

திகில் கதை வாசிப்பதில் ஒரு த்ரில் இருக்கும். ஒரு எதிர்பாராத திருப்பம் நேரப்போவதை அறிய மனம் பாடுபடும். அப்படியான ஒரு திகில் கதை இதோ உங்களுக்காக.

Horror Story in Tamil

கனவு பலித்தது..! (திகில் கதை)

அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு பட பட என்று அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் சூடாக ஓடியது.

இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்து இருந்தது. தூத்துக்குடி பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்த தெரு பகுதி. மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர்விட்டு எரிந்தது போல இந்த தெருவில் மின் விளக்குகள் எரிந்தன.

Horror Story in Tamil

அவள் சில நிமிடங்கள் காரில் இருந்து பார்த்தாள்.., அந்த காரை நிறுத்திவிட்டு , குழந்தையை இருந்த இடத்திற்கு நோக்கி நடைபாதையில் அவசரமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவள் மனதில் எல்லா வகையான எண்ண ஓட்டம் தாமிரபரணி ஆறு போல ஓடியது.

ஒருவேளை தனக்கு வைத்த பொறியாக இருந்தாலும் இருக்குமோ ?

அப்படி இருந்தால் தனக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான பின் விளைவுகளை நினைத்து ஆறு கடலில் சேருவது போல மூளையிலிருந்து இதயத்திற்கு எண்ண அலைகள் அலைபோல அடித்தது. பூக்கள் வண்டுகளை சுற்றி வலம் வருவது மாதிரி அவள் கண்கள் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே அருகில் போனாள். இடி தாக்கும் உணர்ச்சியை ஆத்திரம் ,பயம் மற்றும் கவலை எல்லாம் சேந்த கலவையை உணர்ந்தாள் ,.

Horror Story in Tamil

ஐயோ கடவுளே..

என்ன விசித்திரம் ?

இது யார்?

மனிதநேயம் இறந்துவிட்டதா…!

"இது போன்ற செயல்கள் செய்தது யார்?

இப்படி ஒரு குழந்தையை நடுரோட்டில்

விட்டுவிடுகிறார்கள்?"

அந்த குழந்தை உயிரோடு தான் இருக்கிறது; எந்த ஒரு காயமில்லை என்று அவள் வேண்டிக் கொண்டே அருகில் செல்ல செல்ல மலர்கின்ற தாமரையைப் போல மனதில் ஓர் உணர்வு எழுந்தது . சிந்திக்கக் கூட

விரும்பாத ஒன்று இன்னும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் நடக்கும் தீமைகளை எண்ணி மனம் குமுறியது . மோசமான சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே பாதையை அடைந்தாள். குழந்தை நன்றாக இருந்தது.அவளுக்கு கண்களில் நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றது .

Horror Story in Tamil

இனி எந்த அசம்பாவிதம் நடக்காது எண்ணிக் கொண்டால், அவள் பார்க்க விரும்பாத கண்களில் பார்த்தாள். மனிதநேயத்தின் சார்பாக அவள் வெட்கப்பட்டாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல சிறிது தயங்கினாள். இந்த சமூகம் என்னும் கூண்டுக்குள் இருப்பதை நினைத்து வருந்தினாள்.

ஆகாஷ் “ ..!

“தன் காதலன் ஆகாஷுக்கு போன் செய்தால், அவள் அவசரம் அவசரமாக அவன் எண்ணை டயல் செய்ய ஆரம்பித்தாள்.

“ஆகாஷ், ஆகாஷ் ..ஆகாஷ் ..,சாலையில் ஒரு குழந்தை கிடக்குதுடா ! நீ கொஞ்சம் சீக்கிரம் இங்கு வர முடியுமா? ”

"சரி சரி. அமைதியா இரு. பொறுமையா இரு. நீ சரியா எங்க இருக்க? ”

“இங்கேயே ஆகாஷ், எழில் நகர் தெருவுக்கு எதிரே”

“நான் ஒரு பத்து நிமிடத்தில் வருவேன், நீ எதுவும் செய்ய வேண்டாம். தயவு செய்து கவனமாக இரு..!

தைரியமாக இரு. நான் இப்போது அங்கு வரேன். கவலைப்பட வேண்டாம். நீ அங்கேயே இரு. உடனே போலீசுக்கு கால் பண்ணு நடந்ததை சொல்லு ,

சரி. சரி?"

" நான் போலீஸை கூப்பிடுறேன். சரி. ஆகாஷ் தயவுசெய்து சீக்கிரம் வந்துரு எனக்கு பயமா இருக்கு ..!

வருகிறேன்!"

Horror Story in Tamil

அவள் கொஞ்சம் நிம்மதியை உணர்ந்தாள். அவள் இப்போது குழந்தையின் அருகில் அமர்ந்து குழந்தையின் நெற்றியில் தன் நடுங்கிய கை வைத்து பார்த்தல், இறுதியாக குழந்தையை தூக்கினாள்.

குழந்தை அழவில்லை. ஆனால் குழந்தையின் கண்கள் அவளை பார்த்து கொண்டிருந்தது.

தாயை போல அவள் குழந்தையை மடியில் வைத்து 1-0-0 என்ற எண்ணில் டயல் செய்தாள்.

பதில் இல்லை.

அவள் மீண்டும் டயல் செய்தாள்.

இப்போது போனை எடுத்தார்கள் ..

"வணக்கம். நான் எழில் நகர் தெருவில் இருந்து பேசுறேன். என்னுடைய வீட்டுக்கு போற வழியில ஒரு குழந்தையை பார்த்தேன்.

இந்த தெருவை சுற்றி யாரும் இல்லை. ”

"வணக்கம். மேடம், உங்கள் பெயரை என்னிடம் சொல்ல முடியுமா? ”

Horror Story in Tamil

“ராதா”

" நீங்க இருக்கிற சரியான ஒரு லாண்ட்மார்க் என்ன?"

“எழில் நகர். வலது அருள்மிகு ஶ்ரீ சக்தி முனிஸ்வரர் கோயில் பக்கத்தில. தயவுசெய்து யாரையாவது அனுப்ப முடியுமா?

தயவு செய்து!"

“மேடம், வேறு யாராவது பக்கத்தில இருக்கிறார்களா? குழந்தைக்கு எதுவும் அடிபட்டு இருக்க? ”

"இல்லை. இல்லை. குழந்தைக்கு அடிபடல. என்னை சுற்றி யாரும் இல்லை. ”

“மேடம், தயவுசெய்து கவனமாக இருங்கள். நாங்கள் எங்கள் ஆட்களை உடனே அனுப்புகிறோம். தயவுசெய்து யாராவது வரங்கல பாருங்க,

Horror Story in Tamil

சரி?

தயவுசெய்து அழைப்பில் இருங்கள். ”

“ஆம், ஆமாம் நான் அந்த பக்கம் போய் பார்க்கிறேன். மேடம் இங்கயும் யாரும் இல்லை. ”

குழந்தை இப்போது தொடர்ந்து கத்திக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தது. அவள் குழந்தையின் மார்பில் தட்டவும் அதை அமைதிப்படுத்தவும் முயன்றாள். அது ஒரு துணியால் மூடப்பட்டிருந்ததால் அது ஒரு பெண்ணா அல்லது பையனா என்று அவளால் சொல்ல முடியவில்லை.

துணியை அவிழ்க்க தைரியம் அவளுக்கு இல்லை. அவள் குழந்தையை தலையையும் மார்பையும் தன்னால் முடிந்தவரை மெதுவாகத் தட்டிக் கொண்டே இருந்தாள்.

“மேடம், நீங்கள் தொடர்புல இருக்கிறீர்களா?”

ஹலோ .., ஹலோ ..,

“ஆமா, ஆமா, நான் இங்கே தான் இருக்கிறேன். குழந்தை அழுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? ”

“மேடம், தயவுசெய்து குழந்தையை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க ஏதாவது வழி இருக்கிறதா? ”

Horror Story in Tamil

“ இருக்கு மேடம் என்னுடைய காரில் வைத்திருக்கிறேன். அந்த தெருவின் தொடக்கத்திலே நிறுத்தி வச்சிருக்கேன்.

நான் குழந்தையை அங்கே கொண்டு செல்ல வேண்டுமா?

வேண்டாம் .. அது சரியா படலை மேடம்.

அதற்கு அவசியமில்லை மேடம் இதோ என்னுடைய காதலன் இங்கே வந்துவிட்டான் , என்னால் அவனுடைய காரை பார்க்க முடிகிறது, உங்கள் அதிகாரிகள் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ”

“சில நிமிடங்கள், மேடம்.

தயவுசெய்து இணைப்பில் இருங்கள். "

“ஆகாஷ்! ஆகாஷ்! உன்னுடைய காரில் தண்ணீர் இருக்கிறதா?” என்று கத்தினாள் .

அவனோ தூரத்தில் இருந்து ..!

இருக்கு! இருக்கு!", அதே நேரத்தில் காரை நிறுத்தினான்.

அவன் காரில் இருந்து இறங்கி அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

திடீரென்று ஒரு பையன் கையில் கத்தியுடன் அவனை நோக்கி ஓடினான்.

Horror Story in Tamil

“ஆகாஷ்! ஆகாஷ்! அய்யோ!" அந்த பையன் அவனைத் தாக்க போகிறான் என்று தன்னால் நம்ப முடியவில்லை.

அவள் குழந்தையை விட்டுவிட்டு அவனை நோக்கி ஓடினாள்.

அவன் அருகில் அவள் வந்தாள். அடுத்த கணத்தில் கத்தி அவள் முகத்தில் இறங்கியது ..,, இரத்தமும் கண்ணீரும் சேர்ந்து வழிந்தது.

இது எப்படி சாத்தியமானது? என்று எண்ணுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது போல தோன்றியது , மறுபடியும் கத்தி நெற்றியை நோக்கி வந்தது.

அவள் ஒரு அதிர்ச்சியுடன் எழுந்தாள். இது மிகவும் உண்மையானதாக போலவேத் தோன்றியது. அது ஒரு விசித்திரமான கனவு என்று அவள் உடனே உணர்ந்தாள்.

"அட கடவுளே! கடவுளே! ” “என்ன இப்படி ஒரு கனவு!

ஓ இல்லை! ”

Horror Story in Tamil

அப்போ “குழந்தை, குழந்தை! கடவுளுக்கு நன்றி அது ஒரு கனவு.

ஆனால் குழந்தையின் முகம், எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்த முகத்துடன் ஒரு குழந்தை இருக்கிறதா?

இறைவனே! அந்த முகத்தை என்னால் மறக்க முடியாமல் இருக்குதே. ”

“ஆகாஷ் யார்?

அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?

அந்த பெயரைக் கொண்டு யாரையும் எனக்குத் தெரியாது ”

“கனவு வித்தியாசமானது. அதன் நினைவு

விசித்திரமாயிருக்கிறதே ..!

அவள் உடம்பு மீண்டும் சோர்வு போர்வையாக ஆட்கொண்டது.

. அந்த அதிகாலையில். ”

எப்படி இப்படி ஒரு கனவு ? அந்த நபர் யார்? எப்படி போலீசை கூப்பிட்டேன் ?

அந்த தெருவை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை.

Horror Story in Tamil

அது என்னது?

அதை நினைத்துக் கொண்டே அவள் இப்போது விழித்திருந்தாள்.

அவள் மனதில் ஏதோ தவறாக பட்டது.

கனவைப் பற்றி ஏதோ விசித்திரமாகத் தெரிந்தது. அதுவே அவளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

"இந்த நாட்டில் சோத்துக்கும் தண்ணிக்கும் பஞ்சம் மாதிரி கவலைக்கும் பஞ்சமில்லை””என்று தன் கவலையை உணர்ந்தாள்.

கனவு முடிந்துவிட்டதை உணர்ந்து அவள் இதயம் இப்போது சிந்தனையில் மூழ்கத் தொடங்கியது, ஆனால் உண்மையில் அவளுக்கு ஏதோ ஒன்று நடக்க போகுது? என்று ஆழ்மனதில் சூரியன் உதித்தான்.

Horror Story in Tamil

ராதா கண்களை கசக்கிக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து செய்தித்தாளை எடுக்க வாசலுக்கு நடந்தாள். ஏற்கனவே மந்தமான கண்களில், அவள் தலைப்பைப் பார்த்தபோது ராதாவுக்கு துக்கமாய் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனதை அழுத்தியது . கண்கள் கலங்கி ஈரம் கசிந்து கண்ணீர் மழையாக கொட்ட தொடங்கியது.

" கண்ணீர் அஞ்சலி

திரு.ஆகாஷ்

மறைவு: ஜூன் 13, 1996".

பலித்தது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!