ஆலியா'வின் திருமணம்..! (திகில் சிறுகதை) க.சு.பூங்குன்றன்

ஆலியாவின் திருமணம்..! (திகில் சிறுகதை) க.சு.பூங்குன்றன்
X

horror story in tamil-ஆலியாவின் திருமணம் திகில் கதை (கோப்பு படம்)

Own Story in Tamil-சிறுகதைன்னா..பல வகை கதைகள் உள்ளன. அவைகளில், இது திகிலுடன் காதலும் கலந்த கதை. படிச்சுப்பாருங்க.

Own Story in Tamil-கதைகள் வாசிப்பது வாசிப்பவரை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் செல்லும். அதுவே வாசிப்பவருக்கு புதிய சிந்தனைகளை வளர்க்க உதவும். விமர்சன சிந்தனை எழும். வாசிப்பு என்பது மனிதரை யோசிக்க வைக்கும் என்பது இதன் அடிப்படையில்தான். திகில் கதை வசிப்பது பலருக்கு அல்வா சாப்பிடறது மாதிரி. பெரிய நாவல்களைக்கூட ஒரே மூச்சில் முடித்துவிடுவார்கள்.

'ஆலியா'வின் திருமணம்..! ( திகில் சிறுகதை)

க.சு. பூங்குன்றன்

வனத்தின் அந்தகார இருட்டுக்குள் எங்கோ தொலை தூரத்தில் ஏதோ ஒரு பட்சி க்ரீச்.. க்ரீச்.. என் அலறலாக கத்திக்கொண்டிருந்தது. அந்த அலறல் சத்தம் அந்த அந்தகார இருட்டை மேலும் அச்சமூட்டுவதாக இருந்தது. இரவுப்பூச்சிகளின் 'கருக்..புரூக்.. இச்சிக்..'என் பலவாறான ஓசை வனத்தின் தனிமைக்கு தனித்த பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு உயரமான மரத்தில் இருந்து ஒரு பெரிய கிளை உடைந்து சர..புரவென..பெரிய ஓசையை ஏற்படுத்தி 'பொத்' என விழுந்தது. வனத்தின் பட்சிகளும், மிருகங்களும் அந்த நள்ளிரவு நேரத்தில் கத்தத் தொடங்கிவிட்டன. பட்சிகள் பயந்து பல்வேறு கிரீச்சிடல்களுடன் வனத்தின் மேலே வட்டமிடத் தொடங்கின. மிருகங்கள் திசைதெரியாது ஓடத்தொடங்கின..

மரக்கிளை விழுந்து ஓசையடங்கியதும் மீண்டும் ஒரு நிசப்தம் நிலவியது. மெல்ல மெல்ல. மிருகங்களும் பறவைகளும் சப்தம் அடங்கி இயல்பு நிலைக்குத் திரும்பின.

வனத்துக்குள் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தது. 'டும்..டும். டம டம..டும்..டும்' என்ற ஒரு சத்தம் காற்றில் கரைந்து வனம் முழுவதும் விரவியது. அந்த வேளை மரத்துக்கு மரம் சத்தமின்றி ஒரு உருவம் தாவித்தாவி செல்வது கண்களுக்குத் தெரிந்திருக்குமோ..என்னவோ..சில பறவைகள் மெல்ல சத்தம் எழுப்பின. பறவைகள் சத்தம் எழும்போது அந்த உருவம் அசையாது இருந்தது. பறவைகள் அமைதியானதும் மீண்டும் தாவல் தொடங்கியது.

horror story in tamil

அந்த உருவம் அந்த டும்..டும்... சத்தம் வந்த திசை நோக்கி நகர்வது, அந்த ஓசை அதிகரிப்பதில் இருந்து தெரிந்தது. நெருங்க..நெருங்க..'டும்..டும்..டம டம..டும் ..டும்.." காதுகளில் தெளிவாக விழுந்தது. அந்த சத்தம் வந்த இடத்தில் காய்ந்த மரங்களை அடுக்கி ஒரு நெருப்பு 3 அடி உயரத்துக்கு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் வலது மூலையில் இருந்துதான் அந்த டும் டும்..டம..டம..டும்..டும் சத்தம் வந்தது.

அந்த இடத்தில் 4 பேர் வித்தியாசமான ஒரு கருவியை வைத்து அந்த ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தனர். நெருப்பைச் சுற்றிலும் ஒரு 20 அல்லது 30 பேர் கொண்ட ஆணும் பெண்ணுமாக ஒரு வித்தியாசமான நடன நெளிவுகளை வெளிப்படுத்தி ஆடிக்கொண்டிருந்தனர். ஆடைகளும் வித்தியாசமாகவே இருந்தது.

அவர்கள் வனத்தில் வாழும் மக்கள் என்பது தெரிந்தது. அந்த நெருப்பின் இடது மூலையில் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். ஒருவேளை அவர்களுக்கு இன்று திருமணமாகக் கூட இருக்கலாம். நெருப்புக்கு நேர் எதிரே ஒரு பத்து அடி தள்ளி ஒரு முழு மான் தோலுரிக்கப்பட்டு இரண்டு பக்கங்களிலும் மரக்கால்கள் தாங்கிக்கொள்ள நடுவில் நெருப்பில் அந்த மான் வெந்து கொண்டிருந்தது. பொறுப்பாக பக்கத்தில் இருந்த நான்குபேர் மானை வேகச் செய்யும் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மேடைபோன்ற ஒரு பகுதியில் அமர்ந்து நடப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

தனித்து அமரவைக்கப்பட்டிருந்த ஆண் மற்றும் பெண் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அவர்களது முகம் ஏதோ ஒரு நூலால் இழைக்கப்பட்ட ஒரு வித்தியாச துணியால் மூடப்பட்டிருந்தது.

மான் கறி வெந்ததும்..ஒருவன் ஓடி வந்து கூட்டத்தின் நடுநாயகமாக அமர்ந்து இருந்த (தலைவனாக இருப்பார் போல) ஒருவரிடம் ஏதோ சொன்னார்.


'ஓஹோ..ஓஹோ..ஓஹ் ..ஓஹ்..'ஓஹோ..ஓஹோ..ஓஹ் ..ஓஹ்..' என்று அவர் கத்தியவுடன்..கூட்டத்தினரும் 'ஓஹோ..ஓஹோ..ஓஹ் ..ஓஹ்..' என்று பின்னாலேயே கத்தினர். அப்போது, மணமக்களாக அமர்ந்து இருந்த ஆண் தலையை நிமிர்த்தி,

' நான் உங்க பொண்ணை ஒன்னும் செய்யலைங்க..நான் ஒரு ஆராய்ச்சிக்காகத்தான் வந்தேன். உங்கள் இன மக்களை ஆய்வு செய்து உங்களைப்பற்றி உலகத்துக்கு தெரிய வைக்கறத்துக்குத்தான் வந்தேன். அப்படி வந்தபோதுதான்..ஆற்றங்கரை ஓரத்தில் இந்த பொண்ணு அவங்க பிரெண்ட்ஸ் கூட குளிச்சிக்கிட்டு இருந்தது. அப்போது கரடி ஒன்னு இந்த பொண்ணுங்களை விரட்டியது. மற்ற பொண்ணுங்க எல்லாம் ஓடிட்டாங்க.

இந்த பொண்ணு மட்டும் கரடிக்கிட்டே சிக்கிடிச்சு. நான் ஓடி வந்து கரடியை விரட்டும்போது தவறி அந்த பொண்ணு மேல விழுந்துட்டேன். நான் அந்த பொண்ணு மேல இருக்கறதை மற்ற பொண்ணுங்க தூரத்தில் இருந்து பார்த்துட்டு நான் தப்பாக நடந்துட்டதா. உங்ககிட்ட சொல்லிட்டாங்க..ஆனா.நான் என்ன சொல்ல வரேன்னு சொல்ல விடாம தடுத்திட்டீங்க. ' என்றான் வனத்துக்குள் ஆராய்ச்சி மாணவனாக சென்ற வெங்கடேஷ்.

கூட்டத்தில் இருந்த தலைவன் எழுந்து அந்த பெண்ணிடம், 'அவன் சொல்றது உண்மையா..?' என்றார். அந்த பெண்ணும், 'ஆமாம்..ஐயா..கரடியிடம் இருந்து காப்பாத்த முயறச்சிக்கும்போதுதான் என் மேலே விழுந்துட்டார். அவர் எந்த தப்பும் பண்ணலை. என்னையும் என் அப்பா அம்மா பேச விடலை.' என்றாள் கண்ணீருடன்.

'ஆமா சாமீ..நம்ம எனத்துல இருந்து வேறு ஒரு எனத்து பையன் என் பொண்ணுமேல விழுந்திட்டான். எப்டீ சாமி இனிமேல நம்ம எனத்து பையன் என் பொண்ணைக் கட்டிக்குவான்..? அதான் அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணச் சொன்னேன்' என்றார் பெண்ணின் தந்தை. அவர் சொன்னதையே தாயும் வழிமொழிந்தாள்.

'ஐயா..நான் வேணும்ணா..உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன். அது உங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்ய எனக்கு கூடுதல் வசதியாகப்போகும். ஆனால், நான் என் அப்பா அம்மாவிடம் சொல்லி அவர்களையும் அழைத்து வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்..' என்றான் வெங்கடேஷ்.

அவன் அப்படிக் கூறியதும் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி பிரகாசமானது அவள் கண்களில் தெரிந்தது.

உடனே, 'ஆலியா உனக்குச் சம்மதமா..?' என்று தலைவன் கேட்க. அப்போதுதான் அவள் பெயர் ஆலியா என்பது வெங்கடேஷுக்குத் தெரிந்தது. ஆலியா தலையாட்டி சம்மதம் கூறினாள்.

வெங்கடேசைப் பிடித்து உட்கார வைத்த ஆலியா, ' நானும் கல்லூரியில் பி.ஏ., பட்டம் வாங்கியவள் தான். இருந்தாலும் ஊர்க்கட்டுப்பாடு, எங்க அம்மா அப்பா பேச்சை மீறி எதுவும் பேச முடியவில்லை. என்னை மன்னிச்சுடுங்க.' என்றாள்.

வெங்கடேஷுக்கு கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது. அவளும் படித்தவள் என்பதால் இந்த ஆராய்ச்சியில் பெரிய வெற்றி பெறமுடியும் என்று நம்பினான். அம்மா அப்பாவை எப்படியும் சம்மதிக்க வைக்கலாம். நான் ஒரே பையன் என்பதால் என் ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள் என்று அவனுக்குள் சமாதானம் செய்துகொண்டான்.

'அப்புறம் என்ன எல்லோருக்கும் சம்மதம்தானே..இப்போ விருந்து சாப்பிடலாம்தானே..?' என்ற தலைவரை இடைமறித்த ஆலியாவின் தந்தை, ' இந்த பையன் சொல்றதை நான் எப்படி நம்பறது? இப்போ தப்பிக்கறத்துக்காக அப்படி சொல்லிவிட்டு அவன் ஊருக்கு ஓடிப்போய்ட்டா என் பொண்ணோட தலைவிதியே மாறிப்போயிடுமே..?' என்றார் ஆலியாவின் அப்பா.

இதை தலைவரும் எதிர்பார்க்கவில்லைபோலும்..'ஆமா.. நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு..என்ன செய்யலாம்..?' என்று யோசிக்கும்போது ஆலியா எழுந்தாள்.

'அப்பா.. நீங்க சந்தேகப்படவேண்டாம். எனக்கு அவரு மேல நம்பிக்கை இருக்கு. அவர் நிச்சயமா..வருவாரு.என்னை கல்யாணம் பண்ணிப்பாரு.' என்று நம்பிக்கையோடு கூறினாள்.

வெங்கடேஷுக்கு சந்தோஷம் தாங்கவில்லை..ஆலியாவை அப்படியே தூக்கிச் சுற்றினான். அவள் கண்களை மூடிச் சிரித்தாள். மான் கறி விருந்துடன் அன்றைய ஷூட்டிங் முடிந்தது.

படத்தின் இயக்குனர் பேக் அப் கூறினார். மீண்டும் காடு நிசப்தமானது.

(முற்றும்)

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!