விழிகள் தொடங்கி இதயம் தொடும் காதல்..! ஆதலினால் காதல் செய்வோம்..!

விழிகள் தொடங்கி இதயம் தொடும் காதல்..! ஆதலினால் காதல் செய்வோம்..!
X
Heart Touching Love Quotes in Tamil-அன்பு உள்ள இடத்தில் மட்டுமே காதல் மலரும். அந்த காதல் மனதில் மட்டுமே இதயம் வாழும். அந்த இதயம் தொடும் வார்த்தைகள் எப்படி இருக்கும்..?

Heart Touching Love Quotes in Tamil-ஒரே ஒரு பார்வை ஒரு பெரிய கவியத்தையே படைத்திவிடும். அதைப்போலவே சில வார்த்தைகள் நம் இதயம் தொடும். அதுவும் காதல் வாக்கியங்கள் என்றால் இளசுகளுக்கு கசக்கவா செய்யும்? வாருங்கள்..உங்களுக்கான இதயம் தொடும் மேற்கோள்கள் இங்கு விதைத்துள்ளோம். அள்ளிக்கொள்ளுங்கள்.

  • உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...
  • காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
  • விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள் வாழ அழகான காதல் போதும்.!
  • பிடித்த இதயத்தை அணைத்து உறங்குபவர்களை விட.. பிடித்த இதயத்தை நினைத்து தலையணையை அணைத்து உறங்குபவர்களே அதிகம்..!
  • உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்...!

  • என் காதல் காற்று போன்றது. உன் கைகளால் பிடித்துவிட முடியாது, நீ உணரத்தான் முடியும்..!
  • பிடித்தவர்களை தக்க வைத்துக் கொள்ள நிறைய செலவழியுங்கள், ஆமாம். பணத்தை அல்ல நேரத்தை...!
  • தேடித் தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீதான்... இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீதானடி...
  • இதுவரை எதையும் எதிர் பார்த்தது இல்லை, என் இதயம்.. இப்போது தினமும் எதிர் பார்க்கிறது உன் அன்பை மட்டுமே...
  • தேடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி..! அதில் அழகு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு நிச்சயம் இருக்கும்..!
  • என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும், உன்னை என்றும் நான் சுமப்பேன், உன் தாயைப் போல் ...
  • என் காதலுக்கு கர்வம் இல்லை. என்றுமே அது உன் காலடியில் தான்...
  • பழகப் பழக பாலும் புளிக்கும் என்றாலும், ஏனோ மரணம் வரை புளிக்காத ஒரு சுவையாக "முத்தங்கள்" இருக்கின்றன...!
  • பிடித்தவருடன் வாழும் வாழ்க்கையை விடவா சொர்க்கம் அழகாய் இருந்து விடப் போகிறது..?!!
  • நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை படைத்தேன்..! வார்த்தைகளால் அல்ல என் கனவுகளில் ..!
  • விரும்பியது "தகரம்" என்றால், அருகில் "வைரமே" இருந்தாலும் மனம் ஏற்காது...!
  • இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இருப்பதில்லை..!
  • நமக்கானது என்று படைக்கப்பட்டு இருந்தால் அது நம்மை விட்டு சிறிது காலம் தள்ளிப் போகுமே தவிர, நமக்கு கிடைக்காமல் போகாது..!
  • நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம்தான்..!
  • காத்திருக்கிறேன், உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக..
  • உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story