கொத்தமல்லி தழையில் இவ்ளோ நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!

Kothamalli Benefits in Tamil
Kothamalli Benefits in Tamil-பலருக்கு கொத்தமல்லி தழையின் நன்மைகள் குறித்து தெரிவதில்லை. கொத்தமல்லி தழை என்றதுமே அதன் வாசத்தை நம் நாசி உணரும். அந்த வாசமே ஒரு பசியை ஏற்படுத்தி உண்ணும் உணவை சீரணப்படுத்துவதில் உதவும். இன்று கொத்தமல்லி தழையின் பயன்கள் மற்றும் ஆரோக்ய நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

ஊட்டச்சத்து:
100 கிராம் கொத்தமல்லி தழையில் ,
கலோரிகள் 31
கார்போஹைட்ரேட் – 2 கிராம்
புரதசத்து – 4 கிராம்
கொழுப்பு – 0.7 கிராம்
கால்சியம் – 146 மி.கி
இரும்புசத்து – 5.3 மி.கி
நார்ச்சத்து – 4.7 கிராம்
வைட்டமின் சி – 24 மி.கி
வைட்டமின் ஏ – 635 மி.கி
கொத்தமல்லி தழை பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். ஊட்டச்சத்தைப் பொறுத்தவரை, கொத்தமல்லி தழையில் கலோரிகள் குறைவு மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம். கொத்தமல்லி தழையில் காணப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துகள் மேலே தரப்பட்டுள்ளன.
அவைகளின் ஆரோக்ய நன்மைகள் கீழ தரப்பட்டுள்ளன :
வைட்டமின் சி: கொத்தமல்லி தழை வைட்டமின் 'சி' இன் நல்ல மூலமாகும். இது நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் காயங்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் கே: கொத்தமல்லி தழை வைட்டமின் 'கே' இன் நல்ல மூலமாகும். இது இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்யத்திற்கு முக்கியமானது.
பொட்டாசியம்: கொத்தமல்லி தழையில் சிறிதளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்யத்தை மேம்படுத்துவதில் உதவுகிறது.

கால்சியம்: கொத்தமல்லி தழை கால்சியத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானதாகும்.
இரும்பு: கொத்தமல்லி தழையில் ஒரு சிறிய அளவு இரும்பு உள்ளது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: கொத்தமல்லி தழையில் பீட்டா கரோட்டின் மற்றும் குர்செடின் உள்ளிட்ட பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

கொத்தமல்லி தழையில் 11 அத்தியாவசிய எண்ணெய் காணப்படுகிறது. மேலும் கொத்தமல்லி தழையில் மாங்கனீஸ், வைட்டமின் கே, பாஸ்பரஸ், லினோலிக் அமிலம்,போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.
செரிமானத்தை அதிகரிக்கும்:
கொத்தமல்லி தழையில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசி உணர்வை தூண்டி, வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத் திறனை மேம்படுத்துகிறது. மேலும் பசியின்மையைப் போக்க உதவுகிறது.

வாய்ப்புண்:
கொத்தமல்லி தழையில் இலையில் வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல் என்ற சிறப்பான கிருமிநாசினி வேதிப்பொருள் உள்ளது. எனவே கொத்தமால்லி தழையை சாப்பிட்டு வந்தால் வாயிலுள்ள புண் ஆறவும், வராமல் தடுக்கவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கும்:
சிலர் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்து பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொத்தமல்லி தழையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களில் படியும் கெட்ட கொழுப்பை குறைப்பதால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பம் தொடங்கும் காலகட்டத்தில் வாந்தி, தலைசுற்றல் மற்றும் உடல்சோர்வது ஏற்படுவது வழக்கம். எனினும், இந்த காலகட்டத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி தழை மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவேண்டும். பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த அந்த நீரை குடித்து வந்தால் தலைச்சுற்றல், வாந்தியும் வராது.
கொத்தமல்லி தழையின் பயன்கள்
சரும நோய்கள்:
கொத்தமல்லி தழையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் செப்டிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சில சரும நோய்களை தீர்ப்பதில் கொத்தமல்லி நன்றாக செயல்படுகிறது. தோல் அழற்சி மற்றும் பிற சருமம் தொடர்பான வியாதிகளுக்கு, புதிய கொத்தமல்லி தழையை அரைத்து தேனில் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
அம்மை நோய்:
கொத்தமல்லி தழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நன்மைதரும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளதால், அம்மை நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்தும், வைட்டமின் 'சி'யும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu