Happy Mattu Pongal in Tamil-மாட்டுப்பொங்கல் வாழ்த்து கூறுவோமா?
happy mattu pongal in tamil-மாட்டுப்பொங்கல்.(கோப்பு படம்)
Happy Mattu Pongal in Tamil
பொங்கல் பண்டிகையின் சிறப்பே அது மனிதர்களுக்கான பண்டிகையாக மட்டும் அல்லாமல் மனிதன் உயிர் வாழ உதவும் அனைத்திற்கும் நன்றி கூறி வழிபடும் அறம் சார்ந்த பண்டிகையாகும்
அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்து வரக்கூடிய மாட்டுப் பொங்கல் என்பது, உழவனுக்கு உழவு செய்ய உதவும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உழவுக்காக தங்களின் தோள் கொடுத்து உதவும் மாடுகளை இந்நாளில் போற்றுவதால் இதற்கு மாட்டுப் பொங்கல் என்ற பெயரும் வந்தது.
Happy Mattu Pongal in Tamil
இந்நாளில் மாட்டு பொங்கல் வாழ்த்துகள் கூறி அனைவரும் மகிழ்வதுண்டு. இந்த மாட்டு பொங்கல் நாளில் பொதுவாக விவசாயில்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொட்டு வைத்து அழகு படுத்துவது வழக்கம்.
அதே சமயம் சில ஊர்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் இந்நாளில் நடப்பது உண்டு. இந்த நாளின் மகிழ்வை பகிரும் வகையில் பலரும் தங்கள் உறவுகளுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் கூறி இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதோ மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
எண் சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு தடையின்றி உணவு கொடுத்த உழவுக்கும், உழவருக்கும் உதவிய மாட்டுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்..!
மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம். மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
Happy Mattu Pongal in Tamil
மாடுகளின் அழகினை கவிதையில் வர்ணிக்கலாம். ஆனால் உழைப்பை வர்ணிக்க ஓராயிரம் கவிதை போதாது. இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
களைப்பறியாது உழைக்கும் உன் கால்களை வணங்கி கூறுகிறேன், மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை ஆனாய். மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
தாய் கூட சில மாதங்கள் தான் எனக்கு பால் ஊட்டினாள். ஆனால் நான் இருக்கும் வரை எனக்கு பால் கொடுக்கும் நீ என் தாயினும் சிறந்தவள். மாட்டு பொங்கல் வாழ்த்துகள்.
Happy Mattu Pongal in Tamil
பொங்கல் பண்டிகை
பொங்கல் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகை தென்னிந்தியாவின் அறுவடைத் திருநாள். கொண்டாட்டம் 4 நாட்கள் நீடிக்கும். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி வரும். கொண்டாட்டத்தின் 4 நாட்களில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் நீடிக்கிறது.
பொங்கல் தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளாகும், இது தென்னிந்தியாவின் சிறந்த பண்டிகையாகும். இந்த விழா கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் அறிந்தது போல், எந்த ஒரு விவசாயிக்கும் அறுவடை செய்வது அவனது கடின உழைப்பின் மிகப்பெரிய பகுதியாகும். அவர் தனது கால்நடைகளுடன் ஆண்டு முழுவதும் உழைத்து, இரவும் பகலும் மழை மற்றும் வெயிலை நம்பி உழைக்கிறார். எனவே, அவருக்கு முழுவதும் உதவிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Happy Mattu Pongal in Tamil
பொங்கல் கொண்டாட்டத்தின் 4 நாட்கள் பின்வருமாறு:
போகிப் பொங்கல்: பழைய பொருட்களை அகற்றி வீடுகளை சுத்தம் செய்து அலங்காரம் செய்வார்கள்
சூரிய பொங்கல்: இது தமிழ் மாதத்தின் முதல் நாள் – தை. இந்த நாள் தைப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கின்றனர். சூரிய பொங்கல் என்றும் அழைப்பது வழக்கம்.
Happy Mattu Pongal in Tamil
மாட்டுப் பொங்கல்: இந்த நாளில், புதிய அறுவடை கிடைத்த மகிழ்ச்சியை விவசாயி வெளிப்படுத்துகிறார். உழவுக்கு உழைத்த கால்நடைகள் மற்றும் இயற்கை ஆகியவைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும்
காணும் பொங்கல்: இந்த நாள் ரக்ஷா பந்தன் போன்றது. இந்த நாளில் சகோதரர்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இந்த காணும் பொங்கலை கொண்டாடுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu