Happy Life Quotes in Tamil-மகிழ்ச்சி, நம்பிக்கையின் உடன்பிறப்பு..!
happy life quotes in tamil-மகிழ்ச்சியான வாழ்க்கை மேற்கோள்கள் (கோப்பு படம்)
Happy Life Quotes in Tamil
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தன்னம்பிக்கையைத் தரும் ஒரு அருமருந்து. மகிழ்ச்சி இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்யம் கூட சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சிக்கும் மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அதனால்தான் மகிழ்ச்சி அடையும்போது சிரிக்க முடிகிறது. அதேபோல வருத்தம் ஏற்படும்போது அழுகிறது. மனம் என்பது ஒரு மாயச் சுரங்கம். அதன் மாற்றங்களை அறிவது எளிதான காரியம் அல்ல.
Happy Life Quotes in Tamil
இருப்பினும் மனம் விரும்புவது மகிழ்ச்சியை மட்டுமே. அந்த மகிழ்ச்சி ஏற்படும்படியான மேற்கோள்களை பார்ப்போம் வாங்க.
மகிழ்ச்சி என்ற
உணர்வு இல்லாவிட்டால்
வாழ்க்கையே கடினமான
சுமையாகிவிடும்.
வார்த்தைகள் ஏதும் இன்றி
அன்பை வெளிப்படுத்தும்
அழகான மொழி புன்னகை.
உண்மையான மகிழ்ச்சி
நம் மகிழ்ச்சி கொள்வதில்
இல்லை மற்றோரை
மகிழ வைப்பதே.
நிலை மாறினால் மட்டும்
மகிழ்ச்சி வராது.
மகிழ்ச்சியோடு இருந்தால்
நிலை தன்னாலே மாறும்.
எல்லோரிடமும் சிரித்து பேசினாலே
உங்கள் வாழ்வில் உள்ள பாதி
பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
சிறிது வாழ வேண்டும்
பிறர் சிறிது வாழ்த்திடாதே.
Happy Life Quotes in Tamil
ஆசை ஆசையாய் இருக்கிறதே
இது போல் வாழ்ந்திடவே.
பாச பனி மலை பொழிகிறதே
இதயங்கள் சேர்ந்திடவே.
எந்த நகை இல்லை என்றாலும்
புன்னகை என்ற ஒன்றை
மட்டும் அணிந்திருந்தாள்
எந்த பிரச்சனையும் வராது.
மகிழ்ச்சியாய் இருந்தால்
அந்த மரணத்தையும் கூட
எளிதாக வெல்ல முடியும்.
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது
ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை
Happy Life Quotes in Tamil
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ....
ரசித்து வாழ்வோம்....
அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்...
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு...
அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்...
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...
அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது...
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்...
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை...
Happy Life Quotes in Tamil
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்...
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை...
குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
Happy Life Quotes in Tamil
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்...
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்...
அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்...
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...
Happy Life Quotes in Tamil
இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்...
வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை...
எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்...
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை...
நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை...
இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
Happy Life Quotes in Tamil
சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது
புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்...
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு...
அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி...
விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்...
Happy Life Quotes in Tamil
ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்...
மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்...
வெற்றி தோல்வி அறியாமலேயே
முடிந்துவிடும் விளையாட்டு
வாழ்க்கை...
தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க...
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்குத் தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க...
கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தந்து விடுகிறது...
Happy Life Quotes in Tamil
கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு
நம் தேடல்களில் ....
பல தேவையற்றவையே
கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்...
காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்...
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட...
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்...
நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை...
காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்...
உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட...
அவர்களை பாராமல் இருந்து பார்...
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!
Happy Life Quotes in Tamil
உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்...
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்...
தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்...
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட...
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...
எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை...
அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்...
Happy Life Quotes in Tamil
நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது....
நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு...
உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்...
பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது....
இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்
பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை...
நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை......
மறைவதற்குள்
ரசித்திடுவோம்
இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்...
Happy Life Quotes in Tamil
ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu