தீபங்கள் ஏற்றும் தீபாவளி..! மனதினில் மகிழ்ச்சி மலரும் திருநாள்..!

Happy Diwali Wishes in Tamil
X

Happy Diwali Wishes in Tamil

Happy Diwali Wishes in Tamil-கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளே தீபாவளி என்னும் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Happy Diwali Wishes in Tamil-தீபாவளி என்பது தீப ஒளி என்பதில் இருந்து உருவான புதிய சொல்லாகவும். இந்த திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், ஜைனம் மற்றும் பௌத்தம் மதங்களில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை இந்தியா,இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருள் நீங்கி ஒளியைத் தரும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டிப்படி அக்டோபர் 17ம் நாளிலிருந்து நவம்பர் 15ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

  • பலகாரம் பல செய்து வீடுதோறும் மகிழ்வோடு பரிமாறி..இல்லாதவருக்கும் மனமகிழ்ந்து உதவி செய்து நிறைவான தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்..!
  • இளமைக்காலத்து பசுமை நினைவுகளுடன் பெரியவர்களும், எதிர்காலத்து கனவுகளுடன் இளைய தலைமுறையும் இனிதே கொண்டாடும் தீபாவளிக்கு இனிய வாழ்த்துக்கள்..!
  • அகம் மலர்ந்தால் உள்ளுக்குள் தீய எண்ணங்கள் மறைந்து போகும். புறத்தில் புத்தாண்டாய் அணிந்து அகத்தில் நல்லெண்ணங்கள் மலர..இருளகன்ற ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..!
  • மகிழ்ச்சியை அள்ளித் தருவது வெறும் பண்டிகைகள் மட்டுமல்ல..இல்லாதோருக்கு ஈந்து அவர்களையும் மகிழ்விப்பதே உண்மையான திருநாள்..பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்வதே உயர்ந்த மனிதர்களுக்கான அடையாளம்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • துன்பங்கள் சூழ்ந்தபோதும் நம்பிக்கை இழக்காது, வாழ்க்கையை வாழ்ந்துகாட்டி உயர்ந்துள்ள உங்களுக்கு இன்று உண்மையான தீபாவளி..! வறுமை என்னும் அரக்கனை வீழ்த்தி உயர்ந்த நாள். உங்களுக்கு ஒளிமயமான வாழ்த்துக்கள்..!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • மகிழ்ச்சியை இறைவன் நேரடியாக தருவதில்லை..அந்த மகிழ்ச்சிக்கு காரணமாக நீங்களாகவே இருக்கவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதனால் பிறரை மகிழ்விப்பதன் மூலமாக உங்கள் மகிழ்ச்சிக்கு வித்திடுகிறான்..இறைவன்..அவன் வழி பின்பற்றி வாழும் உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • அன்பு எதிரிகளையே வசியம் செய்யும் மேன்மைமிகுந்த மருந்து..அது உறவுகள்,நட்புகளிடம் உண்மையானதாக இருப்பின் எத்தனை தூரம் இருப்பினும் அகமகிழ்ந்து வாழ்த்தும்..! நட்புகளுக்கும்..உறவுகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • தினம் தினம் வீடுகளில் ஒளியேற்றினாலும் ஆண்டுக்கு ஒருமுறை வீடுகளில் ஏற்றும் தீபத்திருநாள் ஒளி ஆண்டு முழுவதும் நன்மைபயக்கும் இனிய நாள்..! இறைவனைத்தேடி நாம் கோவிலுக்குச் செல்வதுபோல தீபாவளி நாளில் இறைவன் நம் வீடு தேடி வருகிறான்..! அந்த உன்னத நாளில் மகிழ்வோடு இறைவனை துதித்து தீபாவளி கொண்டாடுவோம்..!இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • தீமைகளை தீயாக்கும் நாள்தான் தீபாவளி..! உள்ளத்தின் இருளகற்றி புன்னகைப் பூக்களாய் முகம் மலரச் செய்து இதய ஒளியேற்றும் உன்னத நாள்..! சிறுமைகள் தொலைந்து மனத்திலும் மாலையிலும் மங்களம் பொங்கட்டும்..! இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
  • செல்வங்கள் குவியலாம்..பணமழை பொழியலாம்..! ஆனால் மகிழ்ச்சி நிலைக்க, உடல் ஆரோக்யம் வேண்டும். கூடவே பிறர் துன்பம் போக்கும் உள்ளம் வேண்டும். பிறர் துன்பம் போக்கும் குணமுடையோர் நெஞ்சில் கோடி பணமிருக்கும் செல்வந்தனைவிட மகிழ்ச்சி பொங்கிக்கிடக்கும்..! செல்வமும் ஆரோக்யமும் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • நெஞ்சத்தில் இறையருள் நிலைக்க, பிறருக்கு உதவுவதே ஒரே வழி. ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு செய்த தொண்டாகும்..! நாம் கேட்காமலேயே இறைவன் அள்ளித்தருவான்..! பிறருக்கு உதவி,உண்மை இறையருள் பெறுங்கள்..! உள்ளத்தில் அமைதி நிலைக்கட்டும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • தீபங்கள் ஏற்றுவது தீமைகளை பொசுக்குவதற்கு..உள்ளத்தின் தீய எண்ணங்கள் எனும் இருள் அகன்று நல்ல எண்ணங்கள் எனும் ஒளி மலர்ந்து தீபாவளித் திருநாளை மகிழ்வோடு கொண்டாட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
  • உள்ளத்தின் இருள் நீங்கி, நல்லெண்ணம் எனும் நல்லெண்ணெயை தலைக்குத்தேய்த்து உடல் குளிர்ந்தால் போல உள்ளமும் மகிழ்ந்து தீபங்கள் ஏற்றுவோம்..நிப்புகளை வழங்கியே..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • உறவுகள் ஒன்று சேர்ந்து, நட்புகள் குதூகலமாக ஒன்றிணைந்து இல்லாதோருக்கு புத்தாடையும், இனிப்பும் வழங்கி மகிழ்ச்சி அடைவோம்..இல்லமும் உள்ளமும் மலரும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • தீபத்தின் ஒளி வெற்றியின் அடையாளம்..சூரனைக்கொன்று கிருஷ்ணன் வெற்றிபெற்ற நாள்..! மலையாய் குவிந்த துன்பங்கள் எல்லாம் பனியாய் கரைந்துபோகும்..! மகிழ்ச்சியும் வெற்றியும் ஒன்றாய் பெருகிட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • தீப ஒளியில் இருள் அகன்று ஒளி எழுவது போல உங்கள் வாழ்விலும் துன்பங்கள் தொலைந்து இன்பங்கள் பெருகட்டும்..உள்ளத்தின் அமைதி நிலைக்கட்டும்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
  • கவலைகள் எல்லாம் கனநேரத்து தூசிகளாய் காணாமல் போகும்..! வீணர்கள் தூற்றிய காலங்கள் எல்லாம் மறைந்து உங்களைப் போற்றும் காலங்களாகிப்போயின..! கஷ்டங்கள் தீர்ந்து வெடித்துச் சிதறின பட்டாசுகள் போல..! மகிழ்ச்சியும் பொங்கியது மத்தாப்புப் பூ போல..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!