Happy birthday wishes in tamil-பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..!

Happy birthday wishes in tamil-பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..!

Happy birthday wishes in tamil-பிறந்தநாள் வாழ்த்துகள் (கோப்பு படம் )

பிறந்தநாள் வாழ்த்து கூறுவது ஒருவரின் மீதான அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்துவதாகும்.அவரை மகிழ்ச்சிப்படுத்துவதாகும்.

Happy birthday wishes in tamil

பிறப்பு என்பது ஒருமுறை வருவது. அந்த பிறப்பைக் கொண்டாடுவது நம் பெருமை. ஒவ்வொரு ஆண்டும் வயது ஒன்று கூடினாலும், பிறந்தநாளில் என்றும் சிறு குழந்தைதான். எத்தனை வயது ஆனாலும் பெற்றவர்களுக்கு குழந்தைகள் சிறுபிள்ளைகள்தான்.

பிறப்பைக்கொண்டாட இதோ உங்களுக்கான வாழ்த்துகள்.

தூறும் மழைத்துளி போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்கட்டும். சிலிர்க்கும் பனித்துளி போல உன் வாழ்வு மலர்ச்சியாக இருக்கட்டும்.

நீ நினைப்பது எல்லாம் நடக்கட்டும். கேட்பது எல்லாம் கிடைக்கட்டும். மனம் மகிழ்ந்து நலமாய் வாழ .. உளமார வாழ்த்துகள்

கொள்ளைகொள்ளும் அழகோடு உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு, விரிந்த உதடுகளின் சிரிப்போடு

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.


Happy birthday wishes in tamil

இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

சூரியக் கதிர்கள் உன் துயில் எழுப்பட்டும். ஜன்னலின் காற்றில் நான் விடும் தூதினைப் பார். இனிய பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறேன் என்னவளுக்கு..!

பூவினம் சேராத பூ ஒன்று பூமியில் பூத்த நாள் இன்று. வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று. அது என்னவள். என்னுயிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சிறப்பு என்று ஒன்று உண்டென்றேல் அது என் இனிய தேவதையின் பிறந்தநாள். சிறப்பு, சிறப்பு பெறும் நாள். என் இதயத்து தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!


Happy birthday wishes in tamil

சூரியன் எழுந்து வருகிறது. சந்திரன் பின்னே மலர்கிறது. நட்சத்திரங்கள் வானில் மத்தாப்பாய் பொறி பறக்க

என்ன விசேசம் என்று தென்றல் மரத்திடம் விசாரிக்க, மரமோ என்னை மர்மமாக பார்க்கிறது. புன்னகைத்து பூக்களை உதிர்த்து அள்ளிச் செல் என்கிறது. ஆமாம், என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் இயற்கை அன்னைக்கு வணக்கம்.

ஏழு பிறப்பு எடுத்தாலும் நீயே என் நண்பனாக வரவேண்டும். என் நட்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நினைத்ததெல்லாம் நிறைவேற, நித்தமும் ஆனந்தம் ததும்ப நிறைவான வாழ்வு அமைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


Happy birthday wishes in tamil

உனக்குள் இருக்கும் லட்சியம் நிறைவேற, உன் கனவுகள் என்றும் ஈடேற அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கருவினில் சுமந்து உரு தந்தாய். இடுப்பில் தூக்கி உணவூட்டி அன்புடன் அறிவும் செறிவாக்கி எனக்குள் நீயே ஆனாய் அன்னையே. இன்னும் எத்தனை பிறவிகள் எடுப்பினும் நீயே என்றான் தாயாவாய். என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மர்மதேசத்து மனிதர் என்று அப்பா உங்களை நன் வர்ணித்துள்ளேன். அன்பு தேசத்து சக்கரவர்த்தி என்பதை தாமதமாகத்தான் அறிந்துகொண்டேன். உங்கள் பிறந்த நாளில் வணங்குகிறேன் தந்தையே.


Happy birthday wishes in tamil

கண்களில் ஒளிக்கீற்று. முகத்தினில் புன்னகைக்காற்று. துள்ளி வருவதில் புள்ளிமான் தோற்கும். மலர்களும் கொஞ்சிடும் அவள் நடை பார்த்து. என் தங்கையவள் வருகிறாள் என முன்னே வந்து காதில் ரகசியம் சொல்கிறது, காற்று. இன்று என் தங்கை பிறந்தநாள். வாழ்த்துகிறேன் என் தொப்புள்கொடி மலரவளை.

இந்த பிறந்தநாளில் மகிழ்ச்சியும் ஆரோக்யமும் வாழ்க்கை முழுவதும் தொடர வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தங்கம்போன்ற மனசு கொண்ட நண்பனே, உன் முன்னாள் தங்கம் கூட கைகட்டி நிற்கணும். உன் குணத்தின் மதிப்பு என்றும் குறையாதது. அது கறைபடியாதது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


Happy birthday wishes in tamil

அறிவின் விருட்சம் வளரவேண்டும். ஞானத்தின் ஒளியும் வீசவேண்டும். கல்வியில் கலைமகள் பேசவேண்டும். இமயமலை போல நிமிர்ந்த வாழ்க்கை பெறுவாயாக. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை. முகவரியும் தேவை இல்லை. நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


Happy birthday wishes in tamil

நீண்ட நீண்ட காலம் நீ நீண்டு வாழ வேண்டும். வானம் தொடும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும். நேசம் என்றும் நம் நெஞ்சம் தொட வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும். உன் உள்ளம் அன்பால் நிறையட்டும். உன் கனவுகள் விண்ணை தொடட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர, இந்த பூந்தோட்டத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Tags

Read MoreRead Less
Next Story