Happy Birthday Anna Quotes in Tamil-அண்ணன் என்பவன் கடவுளின் வரம்..!

Happy Birthday Anna Quotes in Tamil-அண்ணன் என்பவன் கடவுளின் வரம்..!
X
தங்கையும் தம்பியும் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதை பெருமையாக நினைப்பார்கள். நடுநிசி 12மணி வரை விழித்திருந்து அண்ணனுக்கு இன்ப அதிர்ச்சித் தருவார்கள்.

Happy Birthday Anna Quotes in Tamil

சகோதர பாசம் என்பது தொப்புள்கொடி வழியாக வந்த பந்தம். அதிலும் அண்ணன் இருக்கும் தங்கையோ அல்லது தம்பியோ வரம் பெற்றவர்கள். ஆமாம், அண்ணன் என்பவன் வீட்டில் மட்டுமே சண்டை போடுவான். ஆனால் வெளியில் வந்துவிட்டால் அவனது தம்பிக்கோ அல்லது தங்கைக்கோ பிரச்னை என்றால் முந்திவந்து நிற்பான். முட்டுக்கொடுத்து நிற்பான்.

அண்ணன் என்பவன் இன்னொரு தந்தை. தந்தை இல்லாத இடத்தை இட்டு நிரப்பும் பொறுப்புமிக்கவன். தந்தை செய்ய நினைத்ததை எல்லாம் செய்து தர முயற்சிகள் செய்யும் நேசிக்கத்தெரிந்தவன். அப்படியான அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோமா?


Happy Birthday Anna Quotes in Tamil

நட்பினை போல் நினைவுகளை கொட்டும் உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.

என்னை கவனிக்க ஒரு தந்தை போதாதென்று இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட இன்னொரு தந்தை..

அவன் “என் அண்ணா”.. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும் நம்ம அண்ணன் நம்ம கூட இருந்தா போதும் எல்லாமே

சரி ஆகிவிடும். அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

அன்னையாய் நீ அருகில் இருந்த நிமிடங்கள், தந்தையாய் நீ எனக்கு தைரியம் கொடுத்த நிமிடங்கள்

என்றுமே மறக்க முடியாதவை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அன்பு அண்ணா.


Happy Birthday Anna Quotes in Tamil

ஆணின் அன்பில் மென்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உண்மை இருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.

என் அன்பு அண்ணனே நீ செலுத்தும் அன்பினை ஈடு செய்ய இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை..

அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

என் அன்பு அண்ணனே உனது வாழ்வில் இன்பங்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா.

விளக்கின் எண்ணெயாய் நீ இருந்து என்னை சுடர் விட்டு எரியச் செய்யும் அற்புதம் நீ. இனிய பிறந்தநாள்

வாழ்த்துகள் அண்ணா.

உயிராய் நினைத்து எனக்கு நடை பழகக் கற்றுக் கொடுத்தவன் நீ. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.


Happy Birthday Anna Quotes in Tamil

ஒவ்வொரு அசைவிலும் நான் கலங்கிடக் கூடாதென்று தூக்கத்தை தொலைத்தவன் நீ. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கடவுள் எனக்கு கொடுத்த வரம் என் அண்ணன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.

அண்ணன் இருப்பவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.

எனக்காக அனைவரையும் எதிர்த்து நிற்கும் உறவு என்றால் அது என் அண்ணன் மட்டும் தான். என் அன்பு

அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Anna Quotes in Tamil

தந்தை அன்பு அது பிறக்கும் வரை. தாயின் அன்பு அது வளரும் வரை. அண்ணன் ஒருத்தன்

வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு அண்ணா.

யாருக்காகவும் எதற்காகவும் எப்பொழுதும் உன்னை விட்டுக் கொடுக்கமாட்டேன் அண்ணா.கடவுள் வந்து

கண் முன் நின்று ஒரு வரம் தருகிறேன் கேள் என்றால் சாகும் வரை என் அண்ணனின் அன்பு மட்டும் போதும் என்பேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.

Tags

Next Story