கூந்தல் அழகி பெயர் வேண்டுமா? அப்ப இதை பின்பற்றலாம்..!

hair growth tips in tamil-அடர்த்தியான ஆரோக்யமான கூந்தல்.(கோப்பு படம்)
How to Get Long Hair Tips in Tamil
பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் என்பதைவிட பிறவியிலேயே ஏற்பட்ட குணம் என்றே சொல்லலாம். ஏனெனில் பெண்கள் அனைவருமே கூந்தல் பராமரிப்பு முதல் நகம் வரை அவ்வளவு மெனக்கெடுவார்கள். அதிலும் நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால், பல காரணிகள் கூந்தல் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும். நம்மைச்சுற்றி இருக்கும் தூசி, மாசு, புறஊதா கதிர்கள், தூய்மையற்ற நீர் போன்றவை பெண்களின் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.

ஆனாலும் சில பெண்கள் தங்கள் முயற்சியை கைவிடுவதில்லை. கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் சிலருக்கு பாதிப்புகளும் ஏற்படலாம். ஆனால் இயற்கையான பொருட்கள் எந்த எதிர்விளைவுளையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், பொதுவாகவே கூந்தல் வளர்ச்சிக்கு எந்தவகையான ஊட்டச்சத்தை வழங்கவேண்டும் என்பதை அறிந்து தெரிந்து அதற்கேற்ப கூந்தல் வளர்ச்சி பொருட்களை பயன்படுத்தவேண்டும். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவிலேயே கூட கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கலாம். நாம் உண்ணும் உணவுகள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவலாம். முக்கியமாக, உயர் புரதச்சத்து உணவுமுறையை கடைப்பிடித்தால் கூந்தல் வளர்ச்சி இரட்டிப்பாகும். பயோட்டின் போன்ற துணை பொருட்கள் அதிகரிப்புக்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
போலேட், சல்பர், துத்தநாகம், வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B12 ஆகியவை முடி உதிர்வை குறைக்க உதவும். எனவே தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துமிகுந்த சில உணவுகளை பற்றி நாம் பார்க்கப்போகிறோம்.
சிறப்பான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

நெல்லிக்காய்
ஆக்சிஜனேற்ற பண்பினை கொண்டது
நரை முடிக்கும், பொடுகு பிரச்னைக்கும் நல்லது
எப்படி பயன்படுத்தனும்?
நமக்கு நெல்லிக்காய் தெரியாமல் இருக்காது. அந்த நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு, நெல்லிக்காய் மற்றும் கற்றாழை மாத்திரையை காலி நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், நேரடியாக நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸ் குடிக்கலாம். அப்புறம் பாருங்க முடியை முடிச்சிபோடக்கூட உங்களுக்கு நேரம் போதாது.

கறிவேப்பிலை
இரும்புச்சத்து, போலிக் அமிலம் நிறைந்தது
இது முடி உதிர்வை குறைக்கும், நரைமுடி வராமல் பாதுகாக்கும்
எப்படி பயன்படுத்த வேண்டும்?
3 முதல் 4 கறிவேப்பிலை இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று வர, முடி வளர்ச்சிக்கு நல்லது. சாதாரணமாக நாம் ரசம் மற்றும் சாம்பாரில் பயன்படுத்தும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் அதை சாப்பிடுவது நல்லது.

பாதாம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் பயோட்டின் நிறைந்தது
ஆக்சிஜனேற்ற பண்பினையும் அதிகம் கொண்டது.
எப்படி பயன்படுத்துவது?
தினமும் காலை நேரத்தில் 5 பாதாம், 1 வால்நட் இரண்டையும் சாப்பிட்டு வரவும். இதை இரவே, இரவே தண்ணீரில் ஊறவைத்து விடவும்.

முருங்கை
முருங்கையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகள் உள்ளன.
முடியின் நுண்குமிழ் சேதத்தை தடுக்க உதவுகிறது
எப்படி பயன்படுத்துவது?
மதிய உணவிற்கு, பருப்பு வகை உணவு, காய்கறி உணவு போன்றவற்றில் முருங்கை பொடியை சேர்த்துக்கொள்ளலாம். அல்லது நேரடியாகவே முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். சாப்பிடுங்க அப்புறம் பாருங்க. முடி வளர்ச்சி சீராக அதிகரிக்கும்.

வேர்க்கடலை
வேர்க் கடலையில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் உள்ளது.
ஆரோக்யமான முடி வளர்ச்சிக்கு உதவும்
எப்படி பயன்படுத்துவது?
இரவில் நிலக்கடலையை ஊறவைத்து அவல் உப்புமா அலலது பிற உப்புமாவுடன் வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிடுங்கள். முடி வளர்ச்சி அதிகமாகும்.

எள், சீரகம்
இதில் கால்சியம் மற்றும் மாங்கனீசு அதிகமாக உள்ளது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

எப்படி பயன்படுத்தனும்?
சப்பாத்தியுடன் எள்ளு சேர்த்து சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சீரக டீ குடிக்கலாம்
திரிபலா
திரிபலா பாக்டீரியா எதிர்ப்பு பண்பினை கொண்டது.
முடி வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியையும் தடுக்கும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு டீ போட்டு குடிக்க வேண்டும்.

ஆளி விதைகள்
இந்த விதையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, E போன்றவை உள்ளன.
ஆக்சிஜனேற்ற பண்பு நிறைந்தது.
எப்படி பயன்படுத்தனும்?
காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, ¼ டீஸ்பூன் ஆளி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

வெந்தயம்
பைட்டோ எஸ்ட்ரோஜன் நிறைந்தது.
முடி சேதமாகாமல் பாதுகாக்கும்.
எப்படி பயன்படுத்தனும்?
ஒரு டம்ளர் தண்ணீருடன் வெந்தயத்தை ஊறவைத்து, அரைக்கவேண்டும். அரைத்த வெந்தயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் சிலிக்கான் மற்றும் சல்ஃபர் உள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.
நீர்ச்சத்து போக்கினையும், அழற்சியையும் குறைக்க கூடியது
எப்படி பயன்படுத்தலாம்?
கொத்தமல்லி மற்றும் புதினா உடன் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி (Salad )செய்து சாப்பிடலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu