/* */

தினமும் இந்த இலைகளை சாப்பிட்டால் சத்து கூடுமாம்..! சாப்பிடுங்களேன்..!

தினமும் 10 கறிவேப்பிலைகளை வெறும் வயிற்றில், மென்று சாப்பிட்டாலே போதும்.

HIGHLIGHTS

தினமும் இந்த இலைகளை சாப்பிட்டால் சத்து கூடுமாம்..! சாப்பிடுங்களேன்..!
X

இலைகள் (கோப்பு படம்)

இந்த பச்சை இலைகள் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதுடன், ஜீரண சக்தியையும் இந்த இலைகள் அதிகப்படுத்துகிறது. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் ஏகப்பட்ட இரும்புச்சத்து உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ந்து போன கறிவேப்பிலையாக இருந்தாலும் சரி, அல்லது பச்சை கறிவேப்பிலையாக இருந்தாலும், எந்த வடிவில் உணவில் எடுத்து கொண்டாலும் சத்துக்கள் மாறுவதில்லை.

துளசி இலை: அடுத்ததாக, "மூலிகைகளின் ராணி" என்று சொல்லப்படும் துளிசி இலைகளை சொல்லலாம்.. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருக்கிறதாம். சுத்தமான செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு கைப்பிடி துளசியை போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு வைத்து விட வேண்டும். காலையில், வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை 48 நாட்கள் குடித்து வந்தால், தோல்சுருக்கம் நீங்கும். நரம்புகள் பலப்படும். கண் பார்வை கூர்மை பெறும். அல்லது வெறும் துளிசியில் டீ தயாரித்து குடிக்கலாம். துளசி இலைகளை இப்படி சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்கலாம். இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

வேப்பிலைகள்: நான்கைந்து வேப்பிலை கொழுந்துகளையும் இப்படி வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.

புதினா இலைகள்: புதினா இலைகளை நீரில் போட்டு மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்தால் போதும்.. அல்லது எலுமிச்சம் சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால், அன்றைய தினத்துக்கான புத்துணர்ச்சி நமக்கு கிடைத்து விடும்.


வாயில் துர்நாற்றம் இருந்தாலும் நீங்கிவிடும். பற்களில் கரைகள் இருந்தாலும் மறைந்து விடும். இந்த இலைகளில் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், நம்முடைய சருமத்தின் இருக்கும் துளைகளை இறுக்கமாக்குகிறது. இதனால், இளமையை சருமத்தில் தக்க வைக்க முடியும்.

அதேபோல, சிறிது சீரகத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தை போக்குவதுடன், வயிற்று வலிக்கும் தீர்வு கிடைக்கும். முக்கியமாக கர்ப்பிணி பெண்களும் இந்த சீரக தண்ணீர் குடித்தால் மிகவும், நல்லது.


பூண்டு தண்ணீர்: அதேபோல, பூண்டு தண்ணீர் குடிக்கலாம்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பூண்டு ஊற வைத்த தண்ணீர் நிச்சயம் கை கொடுக்கும். முதல் நாள் இரவே பூண்டை சுத்தமான தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் அந்த தண்ணீரை லேசாக சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக, வெறும் வயிற்றில் குடித்துவந்தால், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதுபோலவே, வெந்தயத்தையும் முந்திய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், செரிமானத்திற்கு நல்லது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெந்தய டீ: இந்த வெந்தயத்தில் டீ போட்டுக்குடிக்கலாம். வேப்பிலைகளை மென்று விழுங்க கடினமாக இருந்தால், வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, தண்ணீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

Updated On: 3 April 2024 4:12 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
 3. திருவண்ணாமலை
  12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
 5. லைஃப்ஸ்டைல்
  முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
 6. லைஃப்ஸ்டைல்
  ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
 8. இந்தியா
  மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
 10. இந்தியா
  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி