Good night wishes in tamil-கண்ணுறங்கும் வேளையிலே கவிதைபோல ஒரு வாழ்த்து..!

Good night wishes in tamil-கண்ணுறங்கும் வேளையிலே  கவிதைபோல ஒரு வாழ்த்து..!
X

Good night wishes in tamil-இரவு வணக்கம்(கோப்பு படம்)

இரவு என்பது இயற்கை நம்மை புதுப்பித்துக்கொள்ள அளித்த அற்புத வரம். அந்த வரத்தை இனிதே உறங்கி ஆரோக்யம் பெறுதல் வேண்டும்.

Good night wishes in tamil

இரவில் நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் வேலைகளைச் சரியாக பார்க்க முடியும். அத்தகைய உறக்கம் சரியாக இல்லையென்றால் அடுத்தநாள் வேலைகளை சரியாகப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தூக்கம் என்பது மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதற்கு இயற்கை ஏற்படுத்திக்கொடுத்த ஒரு வழி.

மீண்டும் புத்துணர்வோடு மூளை செயல்படுவதற்காக இரவில் உடலுக்கு ஓய்வு மிக முக்கியமான ஓன்று. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. அதனால் நல்ல உறக்கமே உடல் ஆரோக்யத்தின் அடிப்படை. ஆழ்ந்த உறக்கம் பெற உள்ளத்தில் எந்த நினைவுக்கையும் சேகரித்து வைத்துக்கொள்ளக் கூடாது. உறங்கச் செல்லும்போது அவைகளை கழட்டி வைத்துவிட்டு உறங்குங்கள்.


Good night wishes in tamil

இரவு வணக்கம் சொல்வதற்கான சில மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. நீங்களும் இவைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் பிடித்தமானவர்களுக்கு பகிர்ந்து பயன் பெறுங்கள்.

கண்கள் உறங்கும் நேரம், திரைவிலக்கி கனவுகள் திரைப்படமாக மூளைச் செல்களுக்கு அனுப்பும். அந்த திரைப்படத்தை இனிதே காணுங்கள். நித்திரையைத் தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய “இரவு வணக்கம்”.

வாழ்க்கை என்பது ஒரு விடுகதை போன்றது. தினமும் ஒரு விடுகதை நாடகம் அரங்கேறும். விடையினை நாட்கள் அவிழ்க்கின்றன. நண்பர்கள் அனைவருக்கும் இரவு இரவு வணக்கம்.

நாள் முழுவதும் விழிக்கும் விழிகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரமே இரவு. அந்த பூவிழி நோகாமல் உறங்குங்கள். அனைவருக்கும் இனிய வணக்கம்.

பிரபஞ்சத்து நிலவு ஆகாயத்தில் மின்னுகிறது. என் இதயத்தின் நிலவு இங்கே பூமியில் மின்னிகொண்டிருக்கிறது. அந்த நிலவின் அழகினை எண்ணியபடியே அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் கூறுகிறேன்.


Good night wishes in tamil

வானத்து நட்சத்திரங்களும், நிலவும் உன்னைக் கண்டு பொறாமை கொள்ளும் என்று சொல்ல இனிமேல் முடியாது. சந்திரயான் தந்த புகைப்படங்கள், உன்னழகு ஒப்புமைக்கு அப்பாற்பட்டது. ஆமாம் நீயே அழகு. இனிய இரவு வணக்கம்.

தேவதைகள் ஒன்று கூடி உன்னைத் தூங்கச் செய்யட்டும். நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன். இனிய கனவுகளுடன் உறங்குவாயாக. இனிய இரவு வணக்கம்.

நாம் ஓய்வெடுப்பதற்காக கடவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு. கண்ணே நீ இந்த இனிய இரவில் சுகமான ராகங்களுடன் நன்கு ஓய்வெடு, இனிய இரவு வணக்கம்.

ஓய்வு இல்லாமல் உற்சாகமாக இலக்கை நோக்கி பயணிக்க இயலாது. நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. இனிய இரவு வணக்கம்


Good night wishes in tamil

இரவுகள் நம்மை உறங்க வைத்தாலும் சில நினைவுகள் நம்மை உறங்க வைப்பதில்லை. இனிய இரவு வணக்கம்

பல மணிநேரம் பேசும் உதடுகளை விட, சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம். இனிய இரவு வணக்கம்

என்ன வாழ்க்கைடா இது? என்று நினைப்பதை விட ' இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை? என்று எண்ணி வாழுங்கள்... வெற்றி நிச்சயம். இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம். மண்ணில் வாழ்வதற்குத் தான் பணம் வேண்டும். மற்றவர் மனதில் வாழ்வதற்கு அன்பான குணம் இருந்தால் போதும்.


Good night wishes in tamil

இனிய இரவு வணக்கம். நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை முதல் படியில் ஏறு. அது உன்னை உச்சியில் கொண்டுநிறுத்தும்.

இன்றைய மகிழ்ச்சியான நாளுக்காக இறைவனுக்கு நன்றி. நாளைய நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கம்.

எதிர்மறையான அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்குங்கள். நாளைய நாள் வெற்றிகளின் நாளாக விடியட்டும். இனிய இரவு வணக்கம்.

வாழ்க்கையும் கடிகாரமும் ஒன்றுதான். ஒரே திசையில் தான் ஓடிக் கொண்டு இருக்கும். திருப்பி ஓட வைக்க முடியாது. இன்றைய நாளை இனிதாக்குங்கள். இனிய இரவு வணக்கம்.


Good night wishes in tamil

கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு காண பயணிக்கிறது. இனிய இரவு வணக்கம்

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை என்றும் வெல்லாது. முயற்சி செய்யுங்கள். வெற்றியை அடையுங்கள். இனிய இரவு வணக்கம்

எத்தனை நட்சத்திரங்கள் மினுமினுத்தாலும், வராத அந்த ஒரு நிலவுக்காக, ஏனோ மனம் ஏங்குகிறது. இனிய இரவு வணக்கம்.

Good night wishes in tamil

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே.ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி வரும் இனிய இரவு வணக்கம்

கனவு மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத் தான் இருக்கும்..கனவின் படகில் ஏறி உழைப்பின் துடுப்பெடுத்து பயணம் செய்தால் மட்டுமே அது நிஜமாகும். இனிய இரவு வணக்கம்.

Tags

Next Story