Good night quotes in tamil-'செல்லம்' இரவு வணக்கம் 'செல்லம்'..!

Good night quotes in tamil-இரவு வணக்கம் (கோப்பு படம்)
Good night quotes in tamil
இரவு என்பது இயற்கை உயிரினங்களுக்கு அளித்துள்ள ஓய்வு நேரம். அந்த ஓய்வை முழுவதுமாக ஆக்ரமிக்கவேண்டும். ஆமாம். ஆழ்ந்த உறக்கம் மட்டுமே அமைதியைக் கொண்டுவரும். உடல் ஆரோக்யத்தைக் கொண்டுவரும்.
ஆயிரம் கவலைகள் இருப்பினும் அவைகளை உறங்கும் முன் கழட்டி மேசைமீது வைத்துவிடவேண்டும். நிம்மதியான உறக்கத்துக்குப் பின்னர் நாளை காலை மீண்டும் அதை போட்டுக்கொள்ளலாம். உறங்கும்போது இரவை அழகாக்க இரவு வணக்கம் சொல்வது சம்பிரதாயமாக உள்ளது.
அப்படி இரவுப்பொழுதின் அழகினை மேன்மையாக்க இதோ அழகான இரவு வணக்கங்கள். உங்கள் நட்புகளுக்கும் பிடித்தவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
இரவு என்பது வரமாக, உறக்கம் என்பது நலமாக, நாளைய பொழுது சுகமாக அமைய, இனிய இரவு வணக்கம்
மனிதனை அதிக சந்தோசமாக வைப்பது அமைதியும் நிம்மதியும் மட்டும் அல்ல. அன்பான நட்பும் உயிரான உறவும் தான். இனிய இரவு வணக்கம்
இந்த உலகில் அன்பை விட சிறந்த பொக்கிஷம் எதுவும் இல்லை . அன்புடன் இரவு வணக்கம்
நேரம் காலம் எப்படி இருந்தால் என்ன? நேசம் தர நட்பும், பாசம் தர உறவும் இருந்தால் வாழ்க்கை என்றும் வசந்தம் தான். இனிய இரவு வணக்கம்
Good night quotes in tamil
வாழ்வில் அனைத்து உணர்வுகளும் வந்து செல்லும். ஆனால் இறுதியில் அன்பு மட்டுமே நிலைத்து இருக்கும். அன்பான இனிய இரவு வணக்கம்
கடவுள் உங்களுக்கென்று கொடுப்பதை யாராலும் தட்டிப்பறித்து விடமுடியாது. அதனால், கவலை மறந்து நிம்மதியாக தூங்குங்க. அழகான இரவு வணக்கம்
நீங்கள் யாருக்கும் தீங்கு செய்யாதவர். உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். கவலையை மறந்து நிம்மதியாக உறங்குங்கள். இன்பமான இனிய இரவு வணக்கம்
இரவு வணக்கத்தோடு கொஞ்சம் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் குழைத்து அனுப்புகிறேன், என் அன்பான உள்ளத்திற்கு. நேசமுடன் இனிய இரவு வணக்கம்
Good night quotes in tamil
மலரும் நினைவுகளுடன் உங்கள் மனம் போல தூங்கச் செல்லும் முன் மின்மினி பூச்சிகள் பறக்கும் ஒரு குட் நைட். அழகான இனிய இரவு வணக்கம்
வயதோ அழகோ என்றும் அன்பைத் தீர்மானிக்காது. அன்பை தீர்மானிப்பது என்றுமே மனம் மட்டும்தான். அதில் அன்பெனும் திரவம் நிரம்பி இருக்கும். அன்பான இரவு வணக்கம்
இன்றைய பொழுது இனிதாய் கடந்தது. நாளை நடப்பது நல்லதாகவே நடக்கும். நிம்மதி மட்டுமே நம்பிக்கை வளர்க்கும். ஆழ்ந்த உறக்கம் பெற அழகான இரவு வணக்கம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழும் வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம். அந்த வரத்தினை முழுதுமாக அழகாக்குவது கூடும் உறவும், சேரும் நட்பும்தான். நட்புடன் அழகான இரவு வணக்கம்
Good night quotes in tamil
வாழ்க்கை மாறலாம்,வருடங்கள் மாறலாம். ஆனால் நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் பேசிய நாட்களும் பழகிய நினைவுகளும் என்றுமே மாறாது. பாசமுடன் இனிய இரவு வணக்கம்
கண்களால் பலரை பார்த்து நேசிக்க முடியும். ஆனால் இதயத்தால் மனசுக்கு பிடித்தவர்களை மட்டும் தான் நேசிக்க முடியும். இனிய இரவு வணக்கம்
இன்னொரு பிறப்பு பிறப்போமா என்பது வெறும் புனைக்கதை. இப்பிறவியில் கிடைத்த உங்களை எப்போதும் மறக்கப் போவதில்லை, பிரியப் போவதுமில்லை. இனிய இரவு வணக்கம்
அழகைவிட உயர்ந்தது நட்பு. அழகின் விலையைவிட நட்பின் மதிப்பதிகம். அந்த நட்புக்கு இனிய இரவு வணக்கம்
Good night quotes in tamil
ஓவியத்திற்கு அழகு சேர்க்கும் வண்ணங்கள் போல நம் மனதிற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள். அந்த நல்ல மனதிற்கு இனிய இரவு வணக்கம்
அமைதி என்பது ஆழ்கடல் போன்றது. அங்கு அலைகள் இருப்பதில்லை. ஆழ்ந்த மனதுடன் உறங்கச்செல்ல அழகான இரவு வணக்கம்
பிடித்தவர்களுக்கு 'குட் நைட்' சொன்னால் பிரியம் அதிகரிக்குமாம். எனக்கு பிடிச்சது நீங்க தான். அதான் சொல்ல வந்தேன் "குட் நைட் " ஸ்வீட் ட்ரீம்ஸ். இனிய இரவு வணக்கம்.
தட்டி கொடுப்பதும் நட்பு;தட்டி கேட்பதும் நட்பு;விட்டு கொடுப்பதும் நட்பு;இறுதி வரை உன்னை விடாமல் இருப்பதும் நட்பு. நட்புடன் நட்புகளுக்கு நட்பான இனிய இரவு வணக்கம்.
Good night quotes in tamil
தோல்விகளைக் கண்டு சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் நாளைய நாள் உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நாளாக அமையலாம். இனிய இரவு வணக்கம்
இந்த இரவின் மடியில் விழிகளை மூடி கவலைகளை மறந்து நிம்மதியாக உறங்கு, என் அன்பே.. இனிய இரவு வணக்கம்.
இரவுகள் நம்மை உறங்க விட்டாலும் சில நினைவுகள் உறங்க விடுவதில்லை இனிய இரவு வணக்கம்
இருப்பதைக் கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை.. இனிய இரவு வணக்கம்
Good night quotes in tamil
அனைவரின் வாழ்க்கையிலும் 'நாளை' என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது. இன்று தவறியதை நாளை சரி செய்து கொள்ளுங்கள். இனிய இரவு வணக்கம்.
பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி. இனிய இரவு வணக்கம்
இருப்பதை கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை. இனிய இரவு வணக்கம்
தூக்கம் ஒரு பெரிய கள்வன் பாதி வாழ்நாளை கொள்ளையடிக்கிறான். இனிய இரவு வணக்கம்
Good night quotes in tamil
வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்லை, வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம். அன்புடன் இனிய இரவு வணக்கம்
ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும். அது நாளையாக கூட இருக்கலாம். இனிய இரவு வணக்கம்
இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே. நாளை உனக்காகக் கைதட்ட உலகமே காத்திருப்பதை மறந்து விடாதே. இனிய இரவு வணக்கம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu