good morning quotes in tamil-'இனிய காலை வணக்கம்', நம்பிக்கைத்தரும் அழகான தமிழில்..!

good morning quotes in tamil-இனிய காலை வணக்கம், நம்பிக்கைத்தரும் அழகான தமிழில்..!
X

good morning quotes in tamil-காலை  வணக்கம் (கோப்பு படம்)

good morning quotes in tamil-ஸ்மார்ட்போன் வந்தபின்னே 'காலை வணக்கங்கள்' எல்லாம் சொல்லழகில் மிளிர்கின்றன. வசந்தப் பாக்களாக, வசந்தப்பூக்களாக அழகு சேர்க்கின்றன.

good morning quotes in tamil-காலைப்பொழுது என்பது நம்பிக்கைத் தரும் நேரம். அன்றைய நாள்முழுவதும் இனிமைதரும் நாளாக அமைய நம்பிக்கைத்தரும் வார்த்தைகளே போதுமானது. இனிய சங்கீதம் போல..இனிய வார்த்தைகளும் மனதில் ஆழமாக பதிந்து நிற்கும். அதைப்போன்ற நம்பிக்கைத் தரும் இனிய காலை வணக்கம் சொல்ல இவைகளை பயன்படுத்துங்கள்.

கோபத்தின் உச்சியில் நீங்கள் இருக்கும்போது

காக்கும் சில நொடி அமைதியானது

பல்லாயிரக் கணக்கான வருத்தம்

நிறைந்த காலங்களை தவிர்க்கும்.

இனிய காலை வணக்கம்

யாரும் யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள், மாறமாட்டார்கள்.

அதனால் உங்கள் நேரமும் ஆரோக்யமும் தான் கெடும்.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil

புரியும்படி கற்றுத்தரலாம் ஆனால்,

எப்படி புரிந்துகொள்வது என்பதை

கற்றுத்தர முடியாது.

இனிய காலை வணக்கம்


சில நேரங்களில் சில மனிதர்களின்

செயல்களை கண்டு ஆத்திரப்படுவதை விட

அமைதியாக சென்று விடுவது நல்லது.

இனிய காலை வணக்கம்


உங்களை வெறுப்பவர்களுக்கு

நீங்கள் கொடுக்கக்கூடிய தண்டனை

அவர்கள் கண்முன் நீங்கள் மகிழ்வுடன்

வாழ்வது மட்டுமே. துணிந்து செயல்படுங்கள்

வெற்றி உறுதி.

இனிய காலை வணக்கம்

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பித்து,

மகிழ்ச்சியாக வாழ இரண்டே வழிகள் தான்.

ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்

இல்லையென்றால் சூழ்நிலைக்கேற்ப

மாறிக் கொள்ளுங்கள்.

இனிய காலை வணக்கம்

வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்.

மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின்

முதல் மாற்றத்தின் ஆரம்பம்.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil

இறைவன் உங்களுக்கென எழுதியதை

உலகமே சேர்ந்து தடுத்தாலும்,

அது உங்களை வந்தடைந்தே தீரும்

கவலையை விட்டொழியுங்கள்.

இனிய காலை வணக்கம்

எதையாவது ரொம்ப ஆசைப்படும் போது

அதை இப்போது வைத்திருப்பவர்

சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று

நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

இனிய காலை வணக்கம்


சிக்கல்களை பற்றி யோசித்தால் வலிகள் மட்டுமே தோன்றும்.

தீர்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் வழிகள் பிறக்கும்.

மாற்றி யோசித்தால் மாற்றம் உண்டு.

இனிய காலை வணக்கம்


அனுபவித்த துன்பங்களை

மறந்து விடு

அனுபவம் அளித்த

பாடங்களை மறந்து

விடாதே.

இனிய காலை வணக்கம்.

பிறர் செய்த

நன்மைகளை நினை

அவர்கள் செய்த

தீமைகளை விடு.

இனியதோர் காலை வணக்கம்

செல் செல் செல்

நல் வழியில் செல்

சொல் சொல் சொல்

நல் வார்த்தை சொல்.

இனிய காலை வணக்கம்.

பிறரை நேசிப்பதை விட

உன்னை நேசிப்பவனை

அதிகம் நேசி.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil

நம் வாழ்வில்

கஷ்டங்கள்

வந்து போகும்

அதனையும் கடந்து

வாழ பழகு.

இனிய காலை வணக்கம்


மற்றவரிடம் குறைகளை

தேடுவதை விட

நிறைகளை தேடு

மற்றவரிடம்

உன் மனம் பக்குவமடையும்.

இனிய காலை வணக்கம்

துன்பங்களே இல்லாத

வாழ்க்கை

சிந்தனை இல்லாத

மனிதன் போல.

இனிய காலை வணக்கம்

நீர் ஊற்றும் வரை

செடிகள் வாடுவதில்லை

உன் சிந்தனை ஊற்று

இருக்கும் வரை

உன் வலிமை

தோற்பதில்லை.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil

பிறர் சொல்லும்

கடுஞ்சொற்களை

கொண்டு அஞ்சாதே

நீ சாதிக்க பிறந்தவன்

இனிய காலை வணக்கம்.

அதிகாலை பூக்கும்

மலர்களை போல

விடியட்டும்

உன்காலைப் பொழுது.

இனிய காலை வணக்கம்

நீங்கள் உங்களை பிறரோடு

ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்கள்

தனித்தன்மையையும்

தனித்திறமையையும்

இழக்க நேரிடும்..

இனிய காலை வணக்கம்

வாழ்க்கை என்பது, எல்லாம் அழகாய்,

ஆடம்பரமாய் அமைவதில் இல்லை.

அமைந்ததை அழகாய் மாற்றிக்

கொள்ளவதே சிறந்த வாழ்க்கை ஆகும்.

இனிய காலை வணக்கம்

விழுவதற்கு உங்கள் கால்கள் முடிவு செய்தால்,

எழுந்து ஒடுவதற்கு உங்கள் மனதை தயார் செய்யுங்கள்.

விழுவது உங்கள் கால்களாக இருந்தால்.

எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil

கட்டுப்படுத்த முடியாத மனதை விட

மோசமான எதிரி யாரும் இல்லை மனிதருக்கு.

இனிய காலை வணக்கம்


வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு.

ஆனால் அதன் மதிப்போ

வாழ்வோரைப் பொறுத்தது.

இனிய காலை வணக்கம்

சிறிய வெற்றிகளைத் தேடுங்கள்,

அதை உருவாக்குங்கள்.

ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்களுக்கு

நம்பிக்கையைத் தருகிறது.

இனிய காலை வணக்கம்

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!