Fraud Quotes in Tamil-பகைவனைக்கூட நம்புங்கள்..! துரோகியை நம்பாதீர்கள்..!
fraud quotes in tamil-மோசடி உறவுகள் (கோப்பு படம்)
Fraud Quotes in Tamil
உறவு என்பது நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய அனைத்திலும் பங்கேற்று நம்முடன் இறுதி வரை உறுதுணையாக இருப்பது தான் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு அடையாளம் .
இப்போதைய கால கட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே ஆரோக்கியமான உறவில் பழகுகின்றனர். மற்றவர்களெல்லாம் ஒரு பொய்யான தோற்றத்தில் உறவு வைக்கின்றனர்.
அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் நம்மிடம் ஆக வேண்டுமென்றால் நம்மிடம் வந்து பேசி பழகி அந்த காரியம் நம்மால் அவர்களுக்கு நடந்து முடிந்துவிட்டால் அவர்கள் நம்மிடம் வைத்திருந்த உறவை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் வேறு யாரிடமாவது உறவை தொடருவார்கள் . இந்த உறவின் பெயர்தான் போலியான உறவு ஆகும்
மோசடி உறவுகளைக் காட்டும் மேற்கோள்கள்
Fraud Quotes in Tamil
ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால்
உண்மையாக வெறுத்து விடு
பொய்யாக நேசிக்காதே.
உங்களிடம் ஒருவர் ஆறுதல் தேடி வரும் போது
ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை
மற்றவரிடம் குறை கூறினால் அது
நம்பிக்கை துரோகம்.
உங்களை ஏமாற்றியவர்களை மன்னித்து விடுங்கள்
ஆனால் மறுபடியும் அவர்களை
மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் .
துரோகத்தை செய்து விட்டு
அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட
இல்லாமல் திரிபவர்கள் தான்
மிகச் சிறந்த துரோகிகள்.
நீ யாருக்காக அழுது அழுது
இறந்து கொண்டிருக்கிறாயோ
அவர்கள் வேறு யாருடனோ
சிரித்து சிரித்து வாழ்ந்து
கொண்டு இருப்பார்கள்.
பல பேரின் மாற்றங்களுக்கு காரணமே
சிலர் தரும் ஏமாற்றங்கள் தான்!
Fraud Quotes in Tamil
துரோகங்கள் வலியை விட
ஆச்சரியத்தை தான் தருகின்றன
இவ்வளவு சிறப்பாக எப்படி நடித்து
ஏமாற்றினார்கள் என்று.
துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால்
தான் விதைக்கப்படுகிறது.
தன்னோட தேவைக்காக மட்டுமே
உறவு வைத்துக் கொள்ளும் உலகம்!
கண்டிப்பாக தேவைகள் முடிந்ததும்
தூக்கி எரிந்துவிடும்.
என்னை ஏமாற்றியது
உனது தவறல்ல
என்னை ஏமாற்றும் அளவிற்கு
உன் இடம் நான் உண்மையாய்
இருந்தது தான் என் தவறு.
Fraud Quotes in Tamil
போலி நண்பர்கள்
வதந்திகளை நம்புகிறார்கள்.
உண்மையான நண்பர்கள்
உங்களை நம்புகிறார்கள்.
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு
நாம் மூன்றாவது மனிதர் இவருக்கு
கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்து விட்டால்
அவர்கள் சொல்லும் பொய்கள் கூட
உண்மையாகவே தெரிகிறது
ஒருவரை மன்னித்து விடும் அளவிற்கு
நல்லவராக இருங்கள்
ஆனால் அவரை மீண்டும் நம்பும்
அளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்
பொய்யான அன்பு பொழுதுபோக்கான
பேச்சு தேவைப்படும் போது
தேடல் இதுதான் இங்கே பலரது வாழ்க்கை
எந்த உறவிலும் அடுத்தவர் வாழ்விலும்
நம்முடைய இடம் எது என்பதை
தெளிவாக புரிந்து கொண்டால்
மட்டுமே உறவுகள் நீடிக்கும்
Fraud Quotes in Tamil
நேர்மையாக இருப்பவனை அழ வைக்கிறது
நேரத்திற்கு ஏற்ப மாற்றி
பேசுபவனை வாழ வைக்கிறது
உனக்கு ஒருமுறை துரோகம் செய்தவன்
உனக்கு மீண்டும் துரோகம் செய்வான்
என்பதில் உறுதியாக இரு
என்னைத் தவிர யாரும் எனக்கு
நிரந்தரமில்லை என்று புரிவதற்குள்
எத்தனை ஏமாற்றங்கள் என் வாழ்வில்
என்று வருந்துவோர் பலருண்டு
வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே
நம்புங்கள் ஏனென்றால்
யார் உண்மையானவர்கள் என்று
உங்களுக்கே தெரியாது
Fraud Quotes in Tamil
உண்மையானவர்கள் யார் என்று
நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால்
அவர்களின் முகத்தை அல்ல
இதயத்தை பாருங்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu