/* */

அழகா 'ஸ்லிம்மா' இருக்கணுமா..? தினை சாப்பிடுங்க..! ஒப்பற்ற உணவு..!

Foxtail in Tamil-தினைக்கதிர் பார்ப்பதற்கு நரிவால் போல தோன்றுவதால் ஆங்கிலத்தில் இதை Foxtail millet என்கிறார்கள்.

HIGHLIGHTS

அழகா ஸ்லிம்மா இருக்கணுமா..? தினை சாப்பிடுங்க..! ஒப்பற்ற உணவு..!
X

foxtail millet tamil-தினை (கோப்பு படம்)

Foxtail in Tamil-தினை (Foxtail millet) ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

1,06,10,000 டன்கள் தினை உற்பத்தி செய்து உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. நைஜீரியா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. தினை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும்.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் விளைவைக்கப்படுகிறது.


சங்க இலக்கியத்தில் தினை

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் கூறப்படுவது தினைப்புனமும், தினையும், இதற்கு 'ஏனல்' என்று சொல்வார்கள். தினை ஓராண்டு வளர்ந்து பலன் தரும் பயிராகும். இது தினையரிசிக்காகப் பயிரிடப்படுகிறது. மலையில் வாழும் பழங்குடியின மக்கள் தினைமாவில் தேனைச் சேர்த்து உண்பார்கள். இதுவே அவர்களுக்கான முக்கிய உணவாகவும் இருந்தது. இதையே விருந்தினருக்கும் தருவார்கள். சங்க இலக்கியப் பெயர் ஏனல் எனப்படுவது தினை ஆகும்.

சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களிலும் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.

"பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை குறித்து,

'அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்

கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்

கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு

கடுங்கட் கேழல் உழுத பூழி

நன்னாள் வருபத நோக்கிக் குறவர்

உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை

முந்து விளை யாணர்" - புறநானூறு : 168

பொருள் : அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச் சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித்தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர் என்று புறநானுறு கூறுகிறது.

இவ்வாறு தினை குறித்து புறநானூற்றுப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இப்போது நாம் தினையில் உள்ள ஊட்டச் சத்துகள், அதன் பயன்கள் போன்றவைகளைப் பார்ப்போம் வாங்க.


ஊட்டச்சத்து விவரம்

3.5 அவுன்ஸ் (100 கிராம்) ​​தினையில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கலோரி: 331

கார்போஹைட்ரேட்: 60.9 கிராம் (தினசரி தேவையான மதிப்பில் 20%)

கொழுப்பு: 4.3 கிராம் (7%)

புரதம்: 12.3 கிராம் (22%)

நார்ச்சத்து: 8 கிராம் (32%)

இரும்புச்சத்து: 2.8 மிகி (16%)

கால்சியம்: 31 மி.கி (3% )

பொட்டாசியம்: 250 மி.கி (6%)

துத்தநாகம்: 2.4 மிகி (21%)

மெக்னீசியம்: 81 மி.கி (20%)

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது

தினையில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ​​தினை ஒரு சிறந்த உணவாகும்.

மேலும், உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க ​​தினை உதவும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, டைப்-2 நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அரிசிக்குப் பதிலாக ​​தினை அரிசி சாப்பிடுவது மிகவும் நல்லது.


எடை குறைக்க உதவுகிறது

உடல் பருமன் என்பது நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அதிக எடையுடன் இருப்பது நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தினையில் நார்ச்சத்து மற்றும் புரதம் மிக அதிகம். எனவே, கொழுப்பை குறைக்க மற்றும் தசைகளை பலப்படுத்த விரும்புவோருக்கு தினை ஒரு நல்ல உணவாகும்.

மேலும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு ​​தினை பெரிதும் உதவுகிறது என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மலச்சிக்கலை தீர உதவுகிறது

​தினையில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. நார்ச்சத்து,செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து உண்பது இதய தொடர்பான நோய்கள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது

​​தினையில் ஏராளமான பி வைட்டமின்கள் (B1, B2, B3 & B9) உள்ளன. பி வைட்டமின்கள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. மேலும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

​தினையில் வைட்டமின் A, வைட்டமின் E, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இன்றியமையாதவை. எனவே, ​​தினையை வழக்கமான உணவில் சேர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை