Feelings quotes in tamil-துயர தேசத்தின் ராஜாவாக வேண்டுமா..? அப்ப இதை படிங்க..!

Feelings quotes in tamil-துயர தேசத்தின்  ராஜாவாக வேண்டுமா..? அப்ப இதை படிங்க..!
X

Feelings quotes in tamil-வேதனை உணர்வுகள் (கோப்பு படம்)

உறவை விரும்பும் மனது பிரிவை மட்டும் மறுக்கிறது. இயல்பான வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் அறிந்தவை என்றாலும் மனமேனோ ஏற்க மறுக்கிறது.

Feelings quotes in tamil

உள்ளம் அழும்போது தோள் கொடுக்க துணை இல்லையேல் விரக்தி நிலை வருகிறது. விரக்தியில் பிறப்பதே வலியின் வேதனை. வேதனை வெளிப்படும்போது அழுகையாக வெடிக்கிறது. அந்த அழுகை கண்ணீரை கொட்டுகிறது.

இந்த 'விரக்தி' என்பவன் பொல்லாதவன். அவன் மோசமான விளைவுகளைக்கூட தூண்டுவான். அதிலிருந்து மீள்வதே விழிப்புநிலைக்கு சமமாகும். சோகங்கள் சுமந்த இதயங்களுக்கு நீரூற்ற இதோ வலிநிவாரணமாக சில ஆறுதல் வார்த்தைகள். படிங்க.


தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு... குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது...!

உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தேன். 'மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்..

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்துவிட்டேன் என்ற கவலை என்னை தினம் தினம் கொல்கிறது. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை, பொய்யாய் பழகிட எனக்கு தெரியவில்லை. அதனால் கூறுகிறேன் இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம்..

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது, ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் காலம் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு.

Feelings quotes in tamil

இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயம் ஓர் நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்

உன்னை மறந்த இதயத்தை நினைத்துக கொண்டு உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.

தயவு செய்து திரும்பி வந்து விடாதே.... இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது. நாட்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி விட்டேன் - அவன் பெயர் தனிமை.

நீ என்னிடம் பேசி என்னை வருத்தமடைய வைக்க கூடாது என்று எண்ணி நீ வருந்துகிறாய்.. நானோ நீ அப்படி வருந்துவதை நினைத்து இனிமேல் பேச வேண்டாம் என்று விலகிவிட்டேன், நீ வருந்தக்கூடாது என்பதற்காக....


Feelings quotes in tamil

என் நினைவு வந்தாலும் என்னைத் தேடாதே உன் இதயத்தைத் தொட்டுப்பார் நான் துடிப்பேன் உன்னை நினைத்துக் கொண்டு என்றென்றும்....

உன் நினைவுகள் என்னும் கானகத்தில் பிரிவு எனும் வலியை தந்து இடைவிடாமல் என்னை நனைய செய்து விட்டாயே...

சில கண்ணீர்களுக்கு தான் விரல்கள் கிடைக்கின்றன... பெரும்பாலானவை தரைக்கும் தலையனைக்குமே சொந்தம்...

யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால் நீ இன்னும் நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்...

சிலருக்கு விளக்கம் கொடுப்பதை விட... அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே மேல்...

Feelings quotes in tamil

வலியை விட கொடுமையானது நாம் பேச நினைக்கும் ஒருவரிடம் பேச முடியாமல் போவது தான்.!!

நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு. சிலரை உண்மையாக நேசிப்பது....

தொலைந்து போன என் வார்த்தைகளை எல்லாம் கண்டுபிடித்து விட்டேன் உன் மௌனத்தில்..

மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல் ஏன் என் கூட பேசல என்னாச்சு என்று கேட்குற மனம் தான் அதிகம்...

அழவைத்தவரே கண்ணீரை துடைக்கட்டும் என்று காத்திருக்கிறது எனது கண்கள்..

எதையும் அதிகம் விரும்பி விடாதீர்கள்... காரணம்.. எதுவும் நமக்கான நிரந்தரமானவைகள் அல்ல..


Feelings quotes in tamil

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான். சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..! இதுதான் வாழ்க்கை என்ற தத்துவம் விளங்கியது.

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது. பெருமூச்சு மட்டுமே நான் சொல்லாமல் வருகிறது..!

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தா ( தூ) ங்காது. தொலைந்துபோனது எங்கே என்று தேடுகிறேன் இன்னும்..

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது. அனுபவித்து பார்த்தால் மட்டுமே வலியின் வேதனை புரியும்.

Feelings quotes in tamil

நம் உறவாக இல்லாத போதும் யாரோ ஒருவரின் மரணம் கூட மனதை பாதிக்கச் செய்கிறது. நமக்குமான வரிசையை நினைவுபடுத்துகிறதோ..?!

வழக்கம் போலவே உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது, ஆங்காங்கு துடைக்கும் உயிரினங்களைப் பார்த்து ரசித்து..!

.வலி மிகு நினைவுகளும் மனதுக்கு சுமையானதுதான்..தொல்லையாகும் உறவுகளின் சீண்டுதலால்..!

நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகளுக்கு இரட்டிப்பு சுமையாகும். மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு யாருக்காவது, உன் இதயத்தை..!

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத இழப்புகளிலும் துயரத்திலும் விதிமேல் பழிபோட்டு மனதை தேற்றிக்கொள்வோம், பாவம் விதியும் நொந்துகொள்ளும்..!


Feelings quotes in tamil

கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் விழிகளுக்கு தூசியாகி கண்ணீரைத் தருகிறது. வாழ்க்கையை கற்றுக்கொடுப்பதற்கா..?

உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது, விடியாத இரவுகளாய் நீடித்து கிடக்கிறது அழுத்த மனம்.

தொட்டுச்செல்லும் நினைவுகளைத்தான் விட்டுச்செல்ல முடியாமல் விடாமல் துரத்துகின்றது மனம்.

சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கத்தான் வேண்டும். ரணங்கள் மரணங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக..!

கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள், நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் காலமாகிப்போனது..!

Feelings quotes in tamil

சில நேரங்களில் தனிமை கடினம். சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்...!

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை. இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை. உள்ளத்தை தொலைத்தவனுக்குத்தான் தெரியும் காதலின் வலிமை.

சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே அதிகம். ஆனாலும் அழுத்த நிமிடங்களைவிட சிரித்த நிமிடங்களே மீண்டும் மீண்டும் மனதில் வந்து வாட்டுகிறது..

சிலரது வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதும் எழுத்துக்களை போன்றதே. அது எழுத்துக்களை குறையவும் செய்யும் வாழ்க்கையை மூழ்கவும் செய்யும்.

புகைப்படத்திற்கு கூட புன்னகைப்பது மறந்துபோய்விடுகிறது, கவலை சுமந்த மனங்களுக்கு..!


Feelings quotes in tamil

பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல பிடித்தவர் அருகில் இல்லாதவர்களுக்கும் ஏற்படும்..!

நினைவுகள் என்னைத் துரத்த அதை மறக்க சற்றும் தாமதம் இல்லாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் முடிவுறா பயணமாக..

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது. மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க, அது பாடமாகும்..!

எரித்து கொண்டிருக்கும் நினைவுகளை அணைத்து கொண்டிருக்கின்றேன் மையில் வரிகளாக. ஆனாலும் வரிகள் கூட அனல்பரப்புவதாகவே விழுகிறது. உள்ளம் எரிந்துகொண்டிருக்கும்போது எங்கிருந்து வரும் குளிர்ச்சிமிகு கவிதைகள்..?

Feelings quotes in tamil

பேசி பயனில்லாத போது மெளனமே சிறந்தது. பேசியே அர்த்தமில்லாத போது பிரிவதே சிறந்தது.

பிறரிடம் பகிர முடியாத வேதனையின் அழுத்தம் உள்ளுக்குள் விம்மிப்புடைக்க அதை ஆற்றிட விழிகள் ஊற்றெடுக்கும் அருவியே, கண்ணீர்..!

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் உணர முடியாமலே போய்விடும். அதனால்தான் பிரிவை வலிமையாக்கினானோ..இறைவன்..?

பிரிந்து போவாய் என தெரியும். ஆனால் மறந்து போவாய் என தெரியாது. அறுந்துபோன பட்டமாக அலைந்து திரிகிறது மனம், திக்குத்தெரியாமல்..!


Feelings quotes in tamil

மலரும் நினைவுகளில் கூட சிலவை வாடியேதான் இருக்கின்றது.

வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும் வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது.

நீயுமா இப்படி..? என்ற வார்த்தையில் மிச்சமிருந்த ஒருதுளி நம்பிக்கையும் உதிர்ந்துபோன வலியிருக்கும். காயுமா அந்தக் காயம்? என்ற வினாவில் துச்சமாய் ஒருதுளி விஷம் கலந்திருக்கிறது..!

மனக் காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாகவே இருக்கின்றது, எத்தனை முறைதான் அழுவது?

Feelings quotes in tamil

சில சமயம் மீள முடியாத தனிமைக்கு தள்ளப்படுகின்றேன். எனது பேச்சுக்கு பிறர் இடம் இருந்து மதிப்பு குறையும் போது

யாரை பிரிந்த பின் நீ நீயாக இல்லையோ அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்துக்கொள்..!

வார்த்தைகளில் அன்பை செலுத்துங்கள். அம்பு துளைப்பதைவிட ஆழமாய் பாயும் அன்பு. வார்த்தைகளில் கூட அன்புக்குத் தான் வலிமை அதிகம்..!

காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை. புரிதலற்ற வார்த்தைகளே போதும். வலிக்க வலிக்க நின்று கொல்லும்.

சில சந்தர்ப்பங்களில் எதையும் இழப்பதற்கும் தயாராக இருங்கள். எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. இழப்புகள் மட்டுமே பாடங்களாகின்றன.


Feelings quotes in tamil

அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது, நாம் நேசித்தவரின் பிரிவு

புரிதல் இல்லையெனில் பிரிதலே மேல் அது எந்த உறவாக இருந்தாலும் கூட

தனிமை வேதனைதான். ஆனால் ஒரு நாள் மீள்வேன் என்ற நம்பிக்கை என் நம்பிக்கைக்கு வேரூன்றுகிறது.

தனிமையின் கோரப்பிடி ரண வேதனை..! ஆனால் வாழ்க்கையின் மறுபக்கத்தை கற்றுக் கொடுத்த நூலானது..!

தெளிந்த நீரை போன்ற மனதினில் முகவரி இல்லாத ஒருவர் எறியும் கல்லால் தான் அது கலங்கிய நீராக மாறிவிடுகிறது. அதை அறிந்த பின்னர்தான் கலக்கமும் கூடுகிறது.

Feelings quotes in tamil

என் புன்னகைக்குப் பின்னால் உள்ள வலி என்னை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கடந்து செல்கிறேன், காலம் மாறும் என்ற நம்பிக்கையில்

எவ்வளவு தூரம்தான் கடந்து சென்றாலும் சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது..

அடுத்தவர் ரசிக்கும் அளவிற்கு பொய்யாய் வாய் விட்டு சிந்தும் புன்னகையில் சொல்ல முடியாத சோகங்கள் மறைந்தே இருக்கிறது, கசப்பு தரும் மருந்துபோல..!

விதியின் கணக்கை சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது. ஒரு மனிதன் இன்று நம் முன் சிரித்துக்கொண்டு இருப்பான். நாளை...? கண் கலங்க வைக்கிறது விதி.

அலை அலையாய் சுழல்கிறது நினைவலைகள் உதிர்ந்(த்)துவிட்ட இலையின் ஒருதுளி கண்ணீர்த் துளியில்


Feelings quotes in tamil

பேச நிறைய இருக்கும் போது பேசுவதற்கு, பிடித்தவர்கள் அருகில் இருப்பதில்லை.

நிஜம் ஒரு நொடி வலி. ஆனால் நினைவு ஒவ்வொரு நொடியிலும் வலி

தேவைக்கு அதிகமான நினைவுகளும் கடனும் தூக்கத்தை பறித்துக்கொள்ளும்.

சூழ்நிலை என்று மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும் சில வலிகளை மட்டும் தவிர்க்க முடிவதில்லை. சில விசயங்களில் அது நின்று கொல்கிறது.

என் தலையணைக்கு விடாத தாகம் போல, ஆமாம் அடாது தினமும் கண்ணீரை கடனாகக் கேட்கிறதே..!

எழுதப்படாமல் விட்ட எண்ணற்ற காவியங்களை விட வாசிக்கப்படாமல் வைக்கப்பட்ட காவியங்களுக்கே வலி அதிகம்.

வார்த்தைகளால் சிதைவது மனம் மட்டுமல்ல அந்த உறவும் தான் என்பதை ஒரு வினாடி அறிந்தால், அந்த உறவு வலிக்காமலாவது சாகும்.


Feelings quotes in tamil

புகைவண்டி என்னதான் வேகமாகச் சென்றாலும் அதைவிட வேகமாக பின்நோக்கியே செல்கிறது மனது, விட்டுவிட்டு வந்த என் உறவினைத்தேடி..!

நினைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது, வாழ்க்கைப்பயணத்தில். ஆனால் நிஜமான அன்பில் பாதி பேர் கூட இல்லை

மனதின் வலிகளை மறைத்து போலி வேடமிட்டு புன்னகைக்கிறது பல முகங்கள்.

சிலரின் அன்பு அழகான நினைவுகளை கொடுத்துச் செல்கிறது. சிலரின் அன்பு மனதைக்கெடுத்து ஆழமான காயத்தை மட்டும் கொடுத்துச் செல்கிறது

உள்ளத்தின் உளறல்கள் பலருக்கு புரிவதில்லை. அது உடைந்து கிடந்தாலும் கவனிக்க யாருமில்லை, யார் வருவார் ஒட்டவைப்பதற்கு..?

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்