Feeling quotes in tamil-எங்கே வலி இருப்பினும் அழுவது மட்டும் கண்கள்..!

Feeling quotes in tamil-எங்கே வலி இருப்பினும் அழுவது மட்டும்  கண்கள்..!
X

feeling quotes in tamil-உணர்ச்சிமிகு நிலை (கோப்பு படம்)

சோகங்கள் பொதுவாக பல்வேறு காரணங்களால் வந்தாலும் காதலால் ஏற்படும் வலியும் அதனால் ஏற்படும் தனிமையும்தான் அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

Feeling quotes in tamil

சோகம் என்பது மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியற்ற சூழல். அதை துக்கம் என்பார், துயரம் என்பார், வேதனை என்பார். எல்லாமே மகிழ்ச்சி இழந்த நிலை. நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஆனாலும் அதை மீறிய சோகங்களும் கவலைகளும் ஏற்படத்தான் செய்கிறது.

கவலைகளுக்கு காரணங்கள் பல உள்ளன. இருந்தாலும் கூட சிலர் வலுக்கட்டாயமாக கவலையைத் தேடிப்பிடித்தது நான் கவலைப்படுகிறேன் என்று இருப்பவர்களும் உள்ளார்கள்.

அவர்களுக்கு வேலையே கவலைப்படுவது. வீட்டில் தண்ணீர் வரவில்லை அதற்கொரு கவலை. குப்பையை அள்ளுவதற்கு சுத்தக்காரர்கள் வரவில்லை என்பது ஒரு கவலை. என்னை யாருமே காதலிக்கவில்லை என்றொரு கவலை, யாருமே என்னை மதிப்பதில்லை என்றொரு கவலை, வேலை கிடைக்கவில்லை என்பதொரு கவலை. குடிக்கிறது ஒரு தப்பாய்யா? குடிச்சா மரியாதையே இல்லை என்று குடிமகனுக்கு கவலை இப்படி கவலைகள் அனுமார் வால் போல நீண்டு கிடக்கிறது.


Feeling quotes in tamil

ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களால் கவலைப்படுகின்றனர். மாணவர்கள் பரிட்சையை நினைத்து கவலைப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் அவரவர் பணியை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற கவலை, குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்களினாலும் கவலையின் அறிகுறிகள் தோன்றுகிறது.

மனித வாழ்க்கையை பொருத்தமட்டில் மகிழ்ச்சி-கவலை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அவ்ளோதான். இந்த கட்டுரையில் சோகத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் சோக கவிதைகளை பாப்போம் வாங்க.

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது.

உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக் கொ(ல்)ள்கிறது.

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை. இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை.

சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே. என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை.


Feeling quotes in tamil

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க.

பிறரிடம் பகிர முடியாத வேதனையைக் கூட ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்

என் அதீத ஆசையெல்லாம், என் மனம் கஷ்டப்படும் போது, என் வார்த்தையை கேட்க ஒரு துணை வேண்டும் என்பதே.

வெளியே சிரிப்பது தெரிந்தவர்களுக்கு. உள்ளே சிதைபட்டு சிறைப்பட்டு கிடப்பது தெரியவில்லை ஏனோ...!

Feeling quotes in tamil

நினைக்கும் பொழுது இறக்கும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால், இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இடையே மதில்மேல் பூனையாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை.

தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்.


Feeling quotes in tamil

என்னைப் பிரிய உன் மனம் உடன் பட்டதை எண்ணுகையில் விழிகள் கண்ணீரால் கரைகின்றன.

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே எடுத்து கொண்டால் இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.

நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஒருவரை நேசித்த பின்பு நிறைய கற்றுக் கொள்கிறார்கள்

ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்.

Feeling quotes in tamil

கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால் எவ்வளவு ஏமாளியாய் இருந்திருக்கிறோம் என்று தெரிகிறது….!

பேச விரும்பாத உன்னோடு தான் அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம் 'பாவம் அதற்கு தெரியாது நான் உனக்கு சுமை என்று...!

தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்து விடலாம். நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.

நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்... இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் ஆழமாக யோசிக்க தோன்றும்.


Feeling quotes in tamil

நினைத்தது போல் எல்லாம் நடந்தது. ஆனால், கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.

எதிர் பார்க்கும் போது எதிர்பார்த்தவர்கள் பேசவில்லை என்றால் அதிகமாகவே வலிக்கிறது

தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது. தனிமை மட்டும் தான் நிஜம் என்று.

எல்லாம் கொஞ்ச காலம் தான் உயிரானாலும் சரி உறவானாலும் சரி

Feeling quotes in tamil

காயப்பட்டாலும் சரி, காயப்படுத்தினாலும் சரி, கலங்குவது என்னவோ கண்கள் தான்

வாழ்க்கையில் சோகங்கள் வரலாம் தான். ஆனால் சோகங்களே வாழ்க்கையாகி விட கூடாது

புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை

தேடி வரும் அன்பை தவற விட்டால் தேவைப்படும் போது தேடினாலும் கிடைப்பது இல்லை


Feeling quotes in tamil

தனிமையைவிட, கொடிது உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு, நீ இன்றி வாழ்வதுதான்

புரிந்தும் புரியாமல் நடிப்பவர்களுக்கு எப்படி சொல்லியும் ஒன்றையும் புரிய வைக்க முடியாது

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை. புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு