feeling quotes in tamil-முள் குத்திய வலியினும் கொடியது சொல்லால் குத்தும் வலி..!

feeling quotes in tamil-முள் குத்திய வலியினும் கொடியது சொல்லால் குத்தும் வலி..!
X

feeling quotes in tamil-வலிமிகுந்த மேற்கோள்கள்.(கோப்பு படம்)

feeling quotes in tamil-வலி என்பது உடல் காயங்களால் மட்டுமே வருவதில்லை. பழகிய உறவுகளே நம்மை தூக்கி எறியும்போது ஏற்படும் வலியே வேதனைமிக்கது.

feeling quotes in tamil-ஆயிரம் வலிகளை சுமந்து கொண்டு அதையும் தாண்டி வாழ்க்கையில் எதையும் யாரையும் சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும், அதை எல்லாம் தாண்டி போலியாக முகத்தில் சிரிப்பைக் காட்டிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான உள்ளங்களின் சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலிகளை இங்கே காணுங்கள். இதோ உங்களுக்காக வலியின் வேதனை வரிகள்..!


தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு... குப்பையை விட கேவலமானதாகி விடுகிறது...!

உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தேன். 'மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்..

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட, ஏமாந்துவிட்டேன் என்ற கவலை என்னை தினம் தினம் கொல்கிறது. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை, பொய்யாய் பழகிட எனக்கு தெரியவில்லை. அதனால் கூறுகிறேன் இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம்..!

எல்லா வலிகளையும் வார்த்தைகளால் வெளியே சொல்லி விட முடியாது, ஓசையின்றி மௌனமாகவே அழுகின்ற ஓராயிரம் வலிகள் காலம் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு...!

feeling quotes in tamil

இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயம் ஓர் நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்

உன்னை மறந்த இதயத்தை நினைத்துக கொண்டு உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.

தயவு செய்து திரும்பி வந்து விடாதே.... இனியும் உனக்காய் என்னால் காத்திருக்க முடியாது. நாட்கள் கடந்ததால் நானும் ஒரு துணையை தேடி விட்டேன் - அவன் பெயர் தனிமை.

நீ என்னிடம் பேசி என்னை வருத்தமடைய வைக்க கூடாது என்று எண்ணி நீ வருந்துகிறாய்.. நானோ நீ அப்படி வருந்துவதை நினைத்து இனிமேல் பேச வேண்டாம் என்று விலகிவிட்டேன், நீ வருந்தக்கூடாது என்பதற்காக....

என் நினைவு வந்தாலும் என்னைத் தேடாதே உன் இதயத்தைத் தொட்டுப்பார் நான் துடிப்பேன் உன்னை நினைத்துக் கொண்டு என்றென்றும்....


feeling quotes in tamil

உன் நினைவுகள் என்னும் கானகத்தில் பிரிவு எனும் வலியை தந்து இடைவிடாமல் என்னை நனைய செய்து விட்டாயே...

சில கண்ணீர்களுக்கு தான் விரல்கள் கிடைக்கின்றன... பெரும்பாலானவை தரைக்கும் தலையனைக்குமே சொந்தம்...

யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால் நீ இன்னும் நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்...

சிலருக்கு விளக்கம் கொடுப்பதை விட... அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே மேல்...

வலியை விட கொடுமையானது நாம் பேச நினைக்கும் ஒருவரிடம் பேச முடியாமல் போவது தான்.!

feeling quotes in tamil

நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு. சிலரை உண்மையாக நேசிப்பது....

தொலைந்து போன என் வார்த்தைகளை எல்லாம் கண்டுபிடித்து விட்டேன் உன் மௌனத்தில்..

மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல் ஏன் என் கூட பேசல என்னாச்சு என்று கேட்குற மனம் தான் அதிகம்...

அழவைத்தவரே கண்ணீரை துடைக்கட்டும் என்று காத்திருக்கிறது எனது கண்கள்..


feeling quotes in tamil

எதையும் அதிகம் விரும்பி விடாதீர்கள்... காரணம்.. எதுவும் நமக்கான நிரந்தரமானவைகள் அல்ல..

என்னதான் நம்முடன் நிறைய மனிதர்கள் சொந்தக்காரன்,நண்பன் என்ற பேர்களில் இருந்தாலும் நவீன இந்த காலத்தில் நம்முடைய வலிகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.காரணம் கெளரவம் என்ற ஒற்றைச் சொல்லில் எல்லோரும் தனிமரமாகி போய்விட்டோம்.

என்னை காயப்படுத்தியவர்களுக்குக் கூட என் நிலைமை வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

வலிகளை கூடத் தாங்கிக் கொள்ளமுடிகிறது. ஆனால், வலிக்கவே இல்லை என்பது போல் சிரிக்க வேண்டும் என்ற சூழ்நிலை தான் வலிக்கிறது..!

feeling quotes in tamil

நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான். ஆனால், கவலைகளை மறப்பது எப்படி என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை.

அழுத நொடிகள் எனக்குள் மௌனமாய் மூழ்கிக்கிடக்கிறது..! சிரிக்கும் நொடிகள் வெளிச்சத்தில் பிம்பமாய் இருப்பது தான் என் வாழ்க்கை..!

கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க ஒரு புன்னகை சிறந்த வழி. அது போலியாக இருந்தாலும் சரி. சரியாகப் பயன்படுத்தினால், எதையும் சமாளிக்கலாம்..!


feeling quotes in tamil

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைத் தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது. ஆனால், கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்..!

சிரிக்கும் பொழுது லேசாகும் இதயம் நினைக்கும் பொழுது கனக்கிறது மீண்டும்..!

நினைக்கும் பொழுது இறக்கும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால், இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்..!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடித் தான் வாழ்க்கை பயணிக்கிறது. ஆனால் கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்...! அதுதான் வாழ்க்கையென்று கடந்து போகிறோம்..!

சிரிக்கும் பொழுது லேசாகும் இதயம் நினைக்கும் பொழுது கனக்கிறது மீண்டும்..!

மகிழ்ச்சியைத் தேடி அலைவதில் பயனில்லை என்று இருந்த எனக்கு மகிழ்ச்சியை தொலைத்த பிறகு தான் தெரிந்தது.

feeling quotes in tamil

நொந்து போன மனதில் நோய் வந்தால் என்ன?வராமல் இருந்தால் என்ன?

ஆறுதல் தேடி அலைந்தால் அவஸ்தை மட்டும் தான் மிஞ்சும்..!

என்னதான் எதார்த்தமாய் பழகினாலும் எதையோ எதிர்ப்பார்த்து பழகும் சுற்றத்திடையே மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியே...!

நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் எனக்கு கவலைகளே இல்லை என்று அர்த்தம் இல்லை. எனக்குள் உள்ள இதயத்தை பாருங்கள்..!

மகிழ்ச்சியான புன்னகையின் பின்னால் ஆயிரம் உணர்வுகளை மறைக்கும் எளிய மனிதன் நான்..!


feeling quotes in tamil

என் கண்கள் சிந்தும் கண்ணீரை என் உதடுகள் உதிர்க்கும் புன்னகையால் மறைத்து கொள்கிறேன்..!

வாழவேண்டும் என்ற ஆசையே வரமறுக்கிறது...வரம்புகளற்ற சில வார்த்தைகளால்..!

அழவே தோன்றுவதில்லை அவஸ்தைகள் அதிகமானதால்..! எல்லாம் பழகிப்போன ஒன்றாகிவிட்டது..!

இங்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் நம்மை குத்திக்காட்டுபவர்கள் தான் அதிகம்..!

நமக்காக யாருமில்லை என்று நினைத்து அழுதேன். அழுது முடித்த பிறகு நான் புரிந்தது, ஏன் அழுகிறாய் என்று கேட்க கூட இங்கு யாருக்கும் மனமில்லை என்று..!

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு