காதல் தோல்வியால் வலிக்கும் மேற்கோள்கள்..! ஃபீல் பண்ணி பாருங்க..!

Feeling Quotes in Tamil
X

Feeling Quotes in Tamil

Feeling Quotes in Tamil-தோல்வி என்பது இழப்புகளால் ஏற்படும் துன்பம். அதிலும் காதல் தோவியால் ஏற்படும் சோகங்களை சொல்லி மாளாது.

Feeling Quotes in Tamil

பிரிவுத்துன்பம் என்பது ஒருவகை மறக்கமுடியாத சோகம். அதை அனுபவிப்பவருக்குத்தான் அதன் வேதனை புரியும்.

  • நேசிக்க யாரும் இல்லாத போது தான் யோசிக்க வைக்கிறது வாழ்க்கை..!
  • வழிகளைத் தேடித் தான் செல்கிறோம்.. ஆனால் போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டும் தான்..!
  • என் புன்னகைக்குப் பின்னால் ஒரு புண்பட்ட இதயம் இருக்கிறது..!
  • இருப்பதை விட இழந்ததைத் தான் மனம் அதிகம் தேடுகிறது..!
  • கவலை இல்லாத மனிதர் இருவர். ஒருவர் கருவறையில்.. மற்றொருவர் கல்லறையில்..!
  • எளிதில் கிடைப்பதில்லை.. எல்லா சூழ்நிலைகளிளும் நம்மை புரிந்துகொண்டு நம்முடன் நமக்காக இருக்கும் உறவுகள்..!
  • கவலைப்படத் தொடங்கும் தருணத்தில் நாம் எப்போதும் காயப்படுகிறோம்..!
  • வாழ்வதற்கு ஆயிரம் காரணம் கேட்கும் மனசு தான்.. சாவதற்கு ஒரு காரணம் போதும் என்கிறது..!
  • எத்தனை உறவுகள் இருந்தாலும், நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உறவு நம்மோடு இல்லையெனில் வாழ்க்கை சற்று கடினம் தான்..!
  • உங்கள் கண்ணீரின் மதிப்பு தெரியாத நபருக்காக ஒருபோதும் அழாதீர்கள்..!
  • பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயம் தா(தூ)ங்காது..!
  • இதயம் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகள் கண்ணீர்..!
  • தவறை சரியாக செய்தவன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.. நல்லதை தவறாக செய்தவன் தலை குனிந்து நிற்கிறான்..!
  • அதிகம் நம்பிக்கை வைக்கும் இடத்தில் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்..
  • வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறதோ.. அன்று தான், ஒவ்வொருவரும் மரணத்தை விரும்ப ஆரம்பிக்கின்றனர்..!
  • நேரம் காயங்களை ஆற்றவில்லை என்றாலும், அது வலியை பழக்கப்படுத்தும் அளவுக்கு பழையதாக ஆக்குகிறது..!
  • எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாக இரு..!
  • அதிகமாக எதிர்பார்ப்பது நம்மை நாமே காயப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்..!
  • நான் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்குக் கற்றுத் தருகிறது..!
  • எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான், தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டுமே தெரியும்.. அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்..!
  • நான் தனியாக இருக்கும்போதெல்லாம், துக்கம் என்னைத் தன் துணைக்கு அழைக்கிறது..!
  • உலகில் உள்ள சித்ரவதைக்கு எல்லாம் செல்லப் பெயர் வைத்தால் அது தான் காதல்..!
  • நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற பெரிய முயற்சியில், சிறிய மனிதர்களாகி விடுகிறோம்..!
  • அன்பின் ஏணியில் நாம் எவ்வளவு அதிகமாக ஏறுகிறோமோ, அவ்வளவு கடினமாக நாம் விழுகிறோம்..!
  • புன்னகையை விட கண்ணீரை நம்பலாம். ஏனென்றால் ஒவ்வொரு கண்ணீருக்கும் பின்னால் ஒரு உண்மையான காரணம் இருக்கும்..!
  • நான் ஒருபோதும் காதலிப்பதை நிறுத்துவதில்லை, அதைக் காண்பிப்பதை நிறுத்திவிட்டேன்..!
  • உடலுக்கு உயிர் கூட சுமை தான்.. நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும்போது..!
  • என்னைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எவரும் என்னுடன் பழகவில்லை.. என்னை மறந்துவிடும் அளவிற்கு நானும் எவரிடமும் பழகவில்லை..!
  • வாழ்க்கையில் கடினமான பகுதி புன்னகையை போலியாகக் காட்டவும், கண்ணீரை நிறுத்தாமல் மறைக்கவும் முயற்சிப்பது..!
  • ஒருவரின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே என்னும் வேதனையை விட, முழுமையாக மனதை வெளிப்படுத்தியும் ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்னும் வேதனை அதிகம்..!
  • பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்..! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்..!
  • ஓர் செழித்த பாலைவனத்தில், கருகிய இலையுடன் நிற்கும் ஒற்றை மரமும், நிழல் தரும்..!
  • பிரிந்து செல்லும் ஒவ்வொரு உறவுகளும், எதோ ஒரு வகையில், எதையாகிலும் கற்று கொடுத்து செல்கின்றனர்..!
  • காதல் முட்டாள் தனம் என்பதால் தான், சில அறிவாளிகள், அதை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்..!
  • எதிர்பாராமல் பார்த்த உனை தான், எதிர்பார்த்து காத்திருக்கிறது என் விழிகளும், அது சுமந்த இமைகளும்..!
  • இந்த வெறுமை விடாதா..! ஒரு சிறகு விழாதா..! சிறு பறவை எழாதா..! அது கனவைத் தொடாதா..! இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா..?
  • சில நேரங்களில், அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட, நம் வழியில் தனியாக பயணிப்பதே சிறந்தது..!
  • நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி..!
  • தனியாக இருப்பதால் எண்ணி, தனிமையில் விட்டுவிடுகிறோம் நம்மவர்களை..!
  • வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்... ஏனெனில், உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு