/* */

வறுமையும் வெறுமையும் தெரியாமல் வளர்த்த அப்பா, ஒரு நிஜ ஹீரோ..!

Happy Fathers Day Quotes in Tamil-தன் சோகங்களையும் சுகங்களையும் மறந்து பிள்ளைகளுக்காகவே உழைத்து களைத்த தந்தையர்கள் தியாக புருஷர்கள்..!

HIGHLIGHTS

வறுமையும் வெறுமையும் தெரியாமல் வளர்த்த அப்பா, ஒரு நிஜ ஹீரோ..!
X

fathers day quotes in tamil-தந்தையர் தின வாழ்த்துகள். (கோப்பு படம்)

Happy Fathers Day Quotes in Tamil

தந்தை, அம்மாவுக்கு அடுத்து என்றாலும் கூட அம்மாவையும் சேர்த்து சுமப்பது தந்தையே. அன்னை பத்து மாதம் என்றால் தந்தை ஒரு மகன் அல்லது மகளை வாழ்வில் ஒரு வளர்ச்சி நிலைக்கு வரும்வரை குறைந்தது 20 ஆண்டுகள் சுமக்கிறார். ஒரு நாளும் தன் கஷ்டங்களை வாய்விட்டு வெளியே சொல்லியிருக்கமாட்டார். அதனால்தானோ தந்தை என்பவர் கடுமையானவராக தோன்றுகிறார்..?! தந்தையர் வாழ்த்துகள் குறித்த மேற்கோள்களை பாப்போம் வாருங்கள்.

வாட்ட வந்த வறுமையை சிறிது பேசி, வழி அனுப்பி வைத்த என் தந்தைக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

எத்தனை ஜென்மங்கள் எனக்கு கிடைத்தாலும் அத்தனையிலும் உங்கள் பிள்ளையாக பிறக்கும் வரம் வேண்டுகிறேன். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

இது போன்ற ஒரு அற்புதமான வாழ்வை. எனக்கு வழங்கிய என் அப்பாவிற்கு நன்றி கூறுவதில் பெருமை கொள்கிறேன்..! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

ஆணாக பிறந்த யார் வேண்டுமானாலும் அப்பா ஆகலாம். ஆனால் சிறந்த தந்தையாக சிலரால் மட்டுமே இருக்க முடியும். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

உலகிலேயே என் அப்பாவின் இதயம் தான் இயற்கையின் அற்புத படைப்பு. எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவர் என் மகிழ்ச்சிக்கு மட்டுமே உழைத்தார்..என் வளர்ச்சிக்கு மட்டுமே முயற்சித்தார்..! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

வாழ் நாள் முழுவதும் பிள்ளையை சுமந்த கதையை ஒரு முறை கூட சொல்லிக் காட்டாத அப்பாவிற்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..1

கஷ்டங்களை சந்திக்க விட்டு, எதிர் கொள்ள துணை நிற்கும் என் அப்பா எனக்கு நம்பிக்கையை கற்பித்தார். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தன் பிள்ளைகளின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற தன்னை மறந்து உழைக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தந்தையின் அன்பு அவரைப் போலவே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று. அன்பை உள்ளுக்குள் ஒளித்து வைத்து வெளியே கண்டிப்பானவர்போல நடிக்க அவரால் மட்டுமே முடியும்..! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கும் அப்பாவிற்குஎனது இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தான் பெற்ற துன்பத்தை தன் பிள்ளைகள் பெறக் கூடாது என்று நினைக்கும் அப்பா தெய்வத்திற்கு ஒப்பாவார்..!இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

பாசத்தில் அவர் அன்னை..! கண்டிப்பில் அவர் ஆசிரியர்..! கருணையில் அவர் இறைவன்..! என் வாழ் நாள் முழுவதும் மிக அன்பான ஆசானாக விளங்கும் என் தந்தைக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தன் தேவைகளை மறந்து தன் குடும்பத் தேவைக்காக மட்டுமே உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

என்னை பத்து மாசம் கருவில் சுமந்த என் தாயையும் தன் நெஞ்சில் சுமந்துகொண்டு பிள்ளைகளின் கனவுகளையும் சுமக்கும் என் தந்தை கடவுளுக்கு சமம் ஆனவர்..! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தன் பிள்ளையின் வாழ்க்கை விருட்சமாக தன்னையே வேராக்கி கொண்ட தந்தைக்கு எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

தன் பிள்ளை உயரத்தை அடைய தன்னையே ஏணி ஆக்கி கொள்பவர் அப்பா..இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

கடவுள் கொடுத்த வரம் எனக்குக் கிடைக்கவில்லை மாறாக கடவுளே கிடைத்தார், அப்பா என்ற வரமாக..! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

என்னை தோளில் சுமந்து திருவிழாவில் தேரில் வந்த சாமியைக் காட்டிய என் அப்பாவே தெய்வம் என்பது இப்போதுதான் தெரிகிறது..! என் அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 4:18 AM GMT

Related News