அப்பா ஒரு பலாப்பழம்..! எப்படின்னு தெரிஞ்சுக்கங்க..!

Fathers Day Quotes in Tamil

Fathers Day Quotes in Tamil

Fathers Day Quotes in Tamil-என் விரல் பிடித்து நடை பழக்கினாய். நான் விறல் (வெற்றி) பெற வியர்வை சிந்தினாய். நீ இருக்கும்போது உன் பெருமை தெரியவில்லை.

Fathers Day Quotes in Tamil

எங்களது நலன்களுக்காகவே உன்னை வருத்திக்கொண்டு, வெளியே ஒன்றும் தெரியாதவாராய் கோப முகத்தை வெளிப்படுத்தினாய். அப்போது எங்களுக்குத் தெரியவில்லை, நீ ஒரு பலாப்பழம் என்பது. வெளியே முள்ளாக இருப்பினும் உள்ளே இனித்துக்கிடக்கிறாய் என்பது. எங்கள் வளர்ச்சிக்காக நீ சிந்திய வியர்வைத்துளிகள்தான் இன்று எங்களின் அறிவாக விளைந்து நிற்கிறது. அப்பா..நீ கரும்பாறை என்று நினைத்தோம். நீ எங்களை உருவாக்க கடுந்தவம் புரிகிறாய் என்று தெரியாமலேயே போய்விட்டது. எங்களை மன்னியும் தந்தையே..!


வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,

கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா..!

இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்..!

தந்தையர் தின வாழ்த்துகள்..!

அம்மாவை விட அன்பு காட்டும் ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால்,

அது நம் அப்பா மட்டும்தான்..!

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்..!

மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுத்தவர்,

அப்பா..!

தந்தையர் தின வாழ்த்துகள்!


கணவனின் அன்பு கூட தோற்றுப் போகும்,

தந்தையின் அன்பின் முன்னே..!

தந்தையர் தின வாழ்த்துகள்..!

Fathers Day Quotes in Tamil

பல முறையாவது அம்மா சொல்லியிருப்பாள், பத்து மாதம் சுமந்த கதையை..ஆனால்,

ஒரு தடவை கூட அப்பா சொல்லிக் காட்டியதில்லை,

இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை..!

தந்தையர் தின வாழ்த்துகள்..!

தன் பிள்ளைககள் வளர்ச்சியடைய வேண்டும் என்று

தன்னை தேய்த்துத் கொள்ளும் ஜீவன், அப்பா…

தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!

கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா..!

கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர்,

சிறந்த அப்பா..!

தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால்,

தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் நமக்கே

தெரியவரும்..!

Fathers Day Quotes in Tamil

அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்

தெரியும்,

"அப்பான்னு" வார்த்தை அல்ல அது வாழ்கையின் பாடம் என்று..!

வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை

எதுவும் இல்லை..!

முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார், அப்பா..!

தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!

வளைந்து நெளிந்து

செல்லும் தொடர்வண்டியில் – பாதுகாப்பாய்

பிள்ளைகள் இருக்க

இன்ஜின் ட்ரைவராக இருப்பவர் அப்பா..!

உரையாடல்கள் கடினம்

பாதுகாப்பு அதிகம்..!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!"

Fathers Day Quotes in Tamil

திடீரென ஊற்றும்

திடீரென பொய்க்கும்

அன்புகளுக்கு மத்தியில்

எப்போதும் உறைந்திருக்கும்

அன்புக்கு சொந்தம் அப்பா!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!


வெளிச்சம் இருக்கும்போது

தெரியவில்லை உன் அருமை

இப்போது முழுவதும் இருள்

வெளிச்சமான நீதானில்லை அப்ப..!

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

என்கிறது இலக்கணம்

தந்தை அன்பிற்கு எல்லை இல்லை

என்கிறது உலகம்..!

அன்புள்ள அப்பா

என அன்பாய் பேசும்

பிள்ளைகளே

அன்புள்ள அப்பா

என அன்பாய் பேசத்துடிக்கும்

பிள்ளைகளே

பேசுங்கள் அன்பாய், உரிமையாய்..!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!

உன்னை கையில் ஏந்துகையில்

உன் வாழ்வை அழகாக்கும் பொறுப்பை

கையில் ஏந்துகிற உன்னதம் தந்தை!"

"நமக்கு நாம் தேவதைகளா என்பது தெரியாது

அப்பாக்களுக்கு நாம் தேவதைகள் மட்டுமே!"

"விழுந்துவிடுவோம் என்ற

பயமிருந்தாலும்

உயர உயர பறப்பது

தாங்கிப்பிடிக்க

அப்பா நீ இருக்கும்

தைரியத்தில்தான்..!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!

"அரண் பல சமயங்களில்

அன்பை வெளிப்படுத்தாது

காரணம்

அரணின் வீரியத்தை

அன்பு குறைக்கும்

நம் வாழ்வின்

அரண் அப்பா!"

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்..!


Fathers Day Quotes in Tamil

"மின்விசிறியும் அப்பாவும்!

மின்விசிறி சுழன்றுக்கொண்டே

இருக்கும்போது காற்றின்

பயன் புரியவில்லை

சற்றே மின்விசிறி நின்றது

காற்றில்லாமல் இப்போது

அனல் மட்டுமே!"

"அப்பா எனும் சூரியனின்

ஒளியை பிரதிபலிக்கும்

நிலவுதான்

நாம் ஒவ்வொருவரும்!"

"காலம் தென்றலாய்

நம்மை வருடும் போதெல்லாம்

தகப்பனை நினைக்கவில்லை

காலம் சூறாவளியாய்

நம்மை சுழற்றும் போதெல்லாம்

தகப்பனை நினைக்காமல்

இருக்க முடியவில்லை

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்"


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story