என் அப்பா ஒரு "பலாப்பழம்"..! எப்படி?

என் அப்பா ஒரு பலாப்பழம்..! எப்படி?
X

father's day 2024 in tamil-அப்பா (கோப்பு படம்)

அப்பா என்றால் ஆளுமை என்பது நான் சிறுவனாக இருந்தபோது உணரமுடியவில்லை. நான் வளர்ந்தபின் முழுதுமாக உணர முடிகிறது.என்னை செதுக்கிய சிற்பி.

Father's Day 2024 in Tamil, Happy Father Day 2024 in Tamil

குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போது குறும்புகல் செய்தோ அல்லது அறியாத தவறுகளை செய்தோ மாட்டிக்கொள்ளும் எனது தாத்தா பாட்டி, இப்படி எல்லாம் செய்யக்கூடாது. உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சி கொடுத்துருவேன்' என்பார்கள்.

Father's Day 2024 in Tamil,

ஆனால் அப்போது பயந்த நான், அப்பா இருக்கும்போது அப்பாவிடம் கூறி அந்த பூச்சாண்டியை வராகி சொல்லுங்கள் அப்பா என்பேன். அதை இப்போது நினைக்கும்போது எனக்குள் ஆச்சர்யம் எழுகிறது. அப்பா இருக்கும் துணிச்சலில் கூறிய வார்த்தைகள். அப்பா பூச்சாண்டியை துவம்சம் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை. அது அப்பா மீது ஏற்பட்ட நம்பிக்கை. அதனால்தான் இன்றும் எனது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.


ஆளுமை நிறைந்த அப்பா அதிகம் பேசாமாட்டார்

மன உறுதிக்கு அப்பாவைப்போல வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. ஒருமுறை நான் கீழே விழுந்து தலையில் 4 தையல் போடும் லாவுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. அம்மா கூச்சலிட்டு அழுது துடித்தார். ஆனால் அப்பா நிதானம் தவறாமல், ஒண்ணுமில்லை..ஒண்ணுமில்லை ..சின்ன காயம்தான்' என்று என்னைத்தூக்கியவர் சைக்கிளில் வைத்துக்கொண்டு பத்தே நிமிடங்களில் மருத்துவமனைக்கு ‘வந்துவிட்டார்.

Father's Day 2024 in Tamil,

மருத்துவர் பார்த்துவிட்டு, பரவாயில்லை வேகமாக கொண்டுவந்துவிட்டீர்கள். உடனே தையல் போட்டுவிடலாம்' என்று கூறியபடியே எல்லாம் முடித்தார். அப்பாவைக் கட்டிப்பிடித்திருந்த எனக்கு வலி தெரியவில்லை. அடுத்த 20 நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

வழக்கம்போல நான் விளையாடாத தொடங்கிவிட்டேன். அம்மா நிம்மதியாக இருந்தார். அம்மாவைப்போல அப்பா அதிகம் பேசவில்லை. செயலில் காட்டினார். அதிகம் சிரிக்காவிட்டாலும் கூட அவரது மனதில் அன்பு கொட்டிக்கிடக்கும் என்பதும் எனக்கும் தெரியும்.

தாய் ஒரு கருவை சுமக்கத் தொடங்கிய காலம்தொட்டு பிறப்பது ஆணா பெண்ணா என்பது அறியாமலேயே குழந்தை குறித்த எண்ணங்களை மனதுக்குள் ஆனந்தமாக வளர்த்துக்கொண்டவர், அப்பா. கருவைச் சுமக்கும் தனது மனைவியை தாய்போல தாங்கிக்கொள்வார், அப்பா. தனது மனதுக்குள் பிறப்பது பெண்ணா ஆணா? ஏதோ ஒரு உருவத்தை மனதுக்குள் சிருஷ்டித்து உருவகம் செய்து ரசிப்பார்.

Father's Day 2024 in Tamil,


என்ன பெயர் வைக்கலாம்? ஆண் என்றால் இதுதான் பெயர். அலலது பெண் என்றால் இதுதான் பெயர் என்று தீர்மானித்து வைத்திருக்கும் அன்பின் கல்நெஞ்சக்காரர்.

எனக்கு கிடைக்காதவை அனைத்தும் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர் அப்பா.

அம்மா, அப்பாவை சாப்பிடச் சொன்னால், அடுத்தநொடி, பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என்று வந்து வார்த்தைகள் விழும்.

‘தனக்கென்று எதுவும் வேண்டாம் பிள்ளைக்கு குடு’ என்று சொல்பவர் அப்பா. நான் இடைநிலை கல்வி முடித்து உயர்நிலை பள்ளிக்குச் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும். தினமும் நான் நடந்து சென்று வருவதை கவனித்த அப்பாவுக்கு மனதுக்குள் சங்கடம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அடுத்தநாள் மாலை பள்ளிமுடிந்து நான் வீட்டுக்கு வந்தபோது, வீட்டு வாசலில் ஒரு சைக்கிள் நின்றது.

Father's Day 2024 in Tamil,

அம்மா ஓடிவந்து, உனக்குத்தான் என்று மகிழ்ச்சி பொங்கினார். நான் ஓடிப்போய் அப்பாவைக் கட்டிகொண்டேன்.'நல்லா படிக்கணும்' என்று மட்டும் சொல்லிவிட்டு சைக்கிளை கவனமா வச்சுக்கணும்' அவ்வளவுதான் அப்பா பேசினார். ஆனால் என்மீது எவ்வளவு அக்கறை இருந்திருக்கவேண்டும்? என்பதை எண்ணி மகிழ்ந்தேன்.

தனது கஷ்டங்கள் வெளியே தெரியாமல் தனக்குள் புதைத்துக்கொள்பவர், அப்பா. பிள்ளைகளுக்குத் தெரிந்தால் என் கவலை அவர்களையும் தொற்றிக்கொள்ளும் என்ற உயர்ந்த உள்ளத்தால் கோபுரமாக உயர்ந்து நிற்பவர்.

பிள்ளைகளின் வெற்றிக்குப்பின் அவர்தான் முழுவதுமாக இருக்கிறார் என்பதைக்கூட அவர் உணராமல், வெற்றியடைந்தவுடன் குதூகலம் கொள்வார். ஊருக்கே இனிப்பு வழங்குவார். குடும்பத்து சுமைகளை சுகமாக சுமப்பவர், அப்பா.

தனக்கான அனுபவங்களை அன்போடு எடுத்துக்கூறும் ஆசிரியர், அப்பா. சறுக்கினாலும் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியவர். தோல்விகள் உனக்கான பாடங்கள். என்ன தவறுகள் செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டது என்று யோசித்துப்பார். அடுத்த வெற்றிக்குத் தயாராகு என்பார் அனாயசமாக.


Father's Day 2024 in Tamil,

பார்த்தால் ஏதும் அறியாதவர்போல இருக்கும் அப்பாவுக்கும் இத்தனை கலாம்கள் இருக்கிறார்கள். எத்தனை பாரதிகள் இருக்கிறார்கள் என்று நான் அசந்துபோய் இருக்கிறேன்.கடினமான சூழலை எப்படிக் கடக்கவேண்டும் என்பதை என் அப்பாவைப்பார்த்தே கற்றுக்கொண்டேன். முள் சூழ்ந்த பாதையிலும் முள்ளை அகற்றி எப்படி பாதை அமைக்கலாம் என்ற உத்தியும் சொல்லித் தந்தவர் என் தந்தை. திரைக்கதை வசனம் நான் எழுதினாலும் என் வாழ்க்கையின் இயக்குனர் அவரே.

என் இலக்குகளை அடைய பாதை அமைத்துத் தந்தவர் என் அப்பா. தன்மானம் கற்றுத்தந்த பெரியார் என் தந்தை. காரியம் ஆவதற்காக பிறர் காலை பிடிக்காத தன்மானம் உள்ளவர். எனக்கும் அதை ஊட்டியவர்.

நான் என் குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை அவரது செயல்பாட்டால் எனக்குச் சொல்லாமல் சொல்லித் தந்தவர், என் அப்பா. அபப்டி வளர்த்த அப்பாவை என் கடைசி காலம்வரை எனது குழந்தைபோல தாங்குவேன் நான்.

Father's Day 2024 in Tamil,


அப்பா வாழ்ந்த காலங்களில் எனக்கு அவர் ஒரு 'பலாப்பழம்'. பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் முள் இருந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் இனிமையான பலாச்சுளை போன்றவர் அப்பா.

கடவுள் உயரே இருக்கிறார் என்று யார் சொன்னார்கள்? கடவுள் என் கண்முன்னே நான் காணும் கடவுளாக நேரில் இருக்கிறார். அவரே என் அப்பா.நிஜ ஹீரோக்கள்.

தந்தையின் தியாகத்தையும் தன்னலமற்று உழைக்கும் அவரது கடமை உணர்வையும் போற்றும்விதமாக தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தந்தையர் தினத்தில் மட்டும் தந்தையைப்போற்றிவிட்டு கடந்து சென்றுவிடக்கூடாது. நம்மை தோளில் சுமந்த தந்தையை நாம் தோளில் சுமக்கவேண்டும்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?