Family Quotes in Tamil Words-உறவுகளின் பூச்செடி, குடும்பம்..!
family quotes in tamil words-குடும்பம் மேற்கோள்கள் (கோப்பு படம்)
Family Quotes in Tamil Words
மனித சமூகத்தின் மிக தொன்மையான சமூக அமைப்பாக இருப்பது குடும்பமே. இந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்திருப்பதே சமூகம் ஆகிறது. ஒர் ஆணும், பெண்ணும் பிள்ளைகளுடனோ அல்லது பிள்ளைகள் இல்லாமலோ அல்லது திருமணபந்தத்தால் இணைக்கப்பட்டு இரத்த உறவினாலும் அல்லது தத்தெடுக்கும் உறவுகளினாலும் இணைக்கப்படுகின்ற அமைப்பு எனலாம்.
வேறுவகையில் கூறினால், பாலுணர்ச்சியால் நிலைத்து நிற்கக் கூடியதும், இனப்பெருக்கத்தின் மூலமாக குழந்தை பெறும் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு இணைப்பு குடும்பம் ஆகும். ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கின்ற அடிப்படை அலகாக குடும்பம் திகழ்கின்றது.
Family Quotes in Tamil Words
அந்த அற்புத குடும்பத்தின் உறவுகள் குறித்த மேற்கோள்கள்
நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும்
தன் மகளுக்கு அடிமையாகவே
வாழ்கிறான் தந்தை!
நம் பசி அறிந்தே பசியாற்றுபவள் அம்மா
தன் பசி மறந்தே பசி போக்குபவன் அப்பா.
காற்றும் எங்களுடன் சேர்ந்து
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் அம்மாவின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்.
மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
அவள் மகள் மட்டும் இல்லை
தன் தாயின் மறுபிறவி என்று!
மனைவியின் மகிழ்ச்சிற்காகவும்
பிள்ளைகளின் சிரிப்பிற்காகவும்
சந்தோசங்களை தொலைக்கின்றன
பல அப்பாக்கள்!
Family Quotes in Tamil Words
ஆண்டவன் கொடுத்த வரம்
எனக்கு கிடைக்கவில்லை
அந்த ஆண்டவனே கிடைத்தார்
வரமாக அப்பா!
சின்ன சின்ன கூட்டுக்குள்ளே
சொர்கம் இருக்கிறது
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
நேசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் எதற்கு.
பல மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் நடமாடும் ஓர் உயிர் தந்தை.
தன தங்கையை
முதல் பிள்ளையாய் நினைக்கும்
அண்ணன்களும் தாயின் மறுஉருவமே!
நாணலை போல்தானே
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
தூண்களை போல் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
நாமே அடை மழையாக
பெய்யும் சந்தோசம்.
Family Quotes in Tamil Words
தன் குழந்தையயை
வயிற்றில் சுமக்கும் பாக்கியம்
அப்பாவுக்கு கிடைப்பதில்லை
அதனால் தன் நெஞ்சில் சுமந்து கொள்கிறார்.
மனித வாழ்வில் ஏற்ற இறக்கங்கள்
நடப்பது வாடிக்கை தான்..
இதை தீர்மானிப்பது அன்பு என்ற
மந்திரம் மட்டுமே.!
இனம், மொழி அறியாது அன்பு.
சிறு புல்லில் கூட பூக்கலாம்..
பெரும் கல்லில் கூட பூக்கலாம்..
எங்கு வேண்டுமானாலும் அன்பு..!
பூமிக்கு அழகு பூக்கள் மட்டுமல்ல..
அன்பு மட்டும் இல்லை என்றால்
என்றோ அழிந்திருக்கும் இந்த பூமி.
அன்பு ஒளிரும் இடத்தில்
கடவுளை பார்க்கலாம்..
கடவுள் உன் உருவிலும் தெரியலாம்..
நீ அன்பு செய்தால்.!
இருக்கும் போது தொல்லையாக
தெரிந்த என் அன்பு தான்..
நான் இல்லாத போது நீ உணர்வாய்..
உன் வாழ்வில் உனக்கு கிடைத்த
மிகச் சிறந்த ஆறுதலான
உண்மையான அன்பு
அதுவாக தான் இருக்கும்..!
Family Quotes in Tamil Words
உண்மையான அன்பு
ஒரு போதும் எவரையும் ஏமாற்றாது..
அதை பெற்று கொண்டவர்கள் தான்
ஏமாற்றுகிறார்கள்.
இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு
நம்மிடம் என்ன இருக்கிறது என்று
யோசிக்க வைக்கிற ஒருத்தரை
வாழ்க்கையில சந்திச்சு இருந்தா..
உண்மையாகவே நீங்கள்
அதிஷ்டசாலிதான்.!
ஒருத்தவங்க மேல அன்பு வைத்து
அசிங்கப்படுவதை விட..
அவர்கள் தேடினாலும் கிடைக்காத
மாதிரி விலகி விடனும்..
அப்போதுதான் நம்மளோட மதிப்பு
அவர்களுக்கு தெரியும்.
அன்பு மட்டும் தான்
உலகில் நிலையானது..
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும் நாம்
நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.
அன்பான உறவுகள்
மின் மினி பூச்சி போன்று என்றும்
இதயத்தில் மின்னிக்கொண்டு இருக்கும்.
நிலையாக ஒருவரிடம் கிடைக்கும்
அதிகமான அன்பு என்றுமே
திகட்டும்.
Family Quotes in Tamil Words
நெடுநாள் எதிர்பாத்திருந்த
ஒருவரின் அன்பு கிடைக்கும் போது
அளவற்ற இன்பத்தை வாரி
வழங்குகின்றது.
நீ யாருடைய அன்பை காக்க
வைக்கிறாயோ..
அவரின் உண்மையான அன்பு
உன்னை தேடி வருகின்றது.
நீ யாருடைய அன்புக்கு காத்திருக்கிறாயோ
அவரின் அன்பு உன்னை என்றும்
காக்க வைக்கிறது.
பிரிவுகள் நிரந்தரம் அல்ல..
இமைகளில் பிறந்த உறவுகள்
இதயத்தில் இருக்கும் வரை..!
கல்லறை கூட அழகாகத் தெரியும்
உண்மையான அன்பு அங்கு
உறங்கும் போது..
உன் அன்பில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல..
உயிர் பிரியும் வரை.!
எவ்வளவு தான் அன்பை
மரணிக்க செய்தாலும்..
அது மீண்டும் மீண்டும்
உயிர் பெற்று விடும்.
உண்மையான அன்பு எப்போதும்
அதிகமாக நேசிக்குமே தவிர..
என்றும் மறையாது.
Family Quotes in Tamil Words
இன்பமாய் இசை பாடுவதும்
அன்பு தான்..
ஐயம் இல்லாமல் வாழ்வதும்
அன்பில் தான்.
அன்போடு இணைந்து
வாழும் வாழ்வு..
மலர் தோட்டம் போல்
காற்றில் நறுமணம் வீசும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu