காசு..பணம்..துட்டு..! காசிருந்தால் மட்டுமே கடவுளையும் காணமுடியும்..!

Family Money Quote in Tamil
X

Family Money Quote in Tamil

Family Money Quote in Tamil-'பணம்' இந்த சமூகத்தின் அந்தஸ்த்தை அளவீடு செய்யும் பொருளாதார கருவி. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்பார்கள்.

Family Money Quote in Tamil

பணம் வாழ்வதற்கு தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. பலர் இன்று உண்மையான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு பணத்தின் பின்னல் ஓடிக்கொண்டிருப்பது வேடிக்கையான விஷயம்தான். எவ்வளவு பணம் இருந்தாலும் கூட நம் வயிற்றுக்கு தேவையான உணவை மட்டுமே உட்கொள்ள முடியும். பின்னர் பணத்தை சேர்த்துவைத்து பணத்தை சாப்பிடவா முடியும்..? பொருள் உள்ளவர்கள் இல்லாதோருக்கு கொடுத்து வாழ்வதே செல்வத்திற்கும் அழகு சேர்க்கும்.

  • பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை.... நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை ...!
  • பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும்.. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்..
  • மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் அமைதியாக இருக்கிறன.. மதிப்பில்லா சில்லறைக் காசுகள் தான் அதிகம் சத்தம் போடுகின்றன.. மனிதர்களும் அப்படித் தான்..!
  • பணம் இன்றி மனிதனாய் வாழ முடிகிறது. ஆனால் மனிதர்களுடன் தான் வாழ முடியவில்லை..

Family Money Quote in Tamil

  • பணம் ஆறாம் அறிவு போன்றது, அதில்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது..
  • நம்ம கிட்ட எவ்வளவு தான் நல்ல குணம் இருந்தாலும், நம்ம கிட்ட பணம் இல்லன்னா ஒரு நாய் கூட மதிக்காது..
  • பணத்தை எண்ணி பிணமாய் வாழ்வதை விட மனதை நம்பி மனிதனாய் வாழலாம்..
  • பணத்திடம் ஒரு மனிதன் கூறினான்: நீ ஒரு வெற்றுக் காகிதம் என்று, அதற்குப் பணம்: ஆனால், நான் இதுவரை ஒரு குப்பைத் தொட்டியைக்கூட பார்த்ததில்லை என்றது....

Family Money Quote in Tamil

பணம் என்ற சொல்லின் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகம், பாவம் என்ற மகுடத்தை சூடிக் கொண்டிருக்கிறது..

பணம் இருந்தால் தான் நாலு பேரு மதிப்பார்கள் என்றால்.... அந்த மானங்கெட்ட மரியாதை எனக்கு தேவையில்லை - பெருந்தலைவர் காமராஜர்

வாழ்வதற்கு செலவு மிகக் குறைவு. அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம்....

நண்பனுக்கு கடன் கொடுத்தால் ஒன்று நண்பனை இழப்பாய், இல்லையென்றால் பணத்தை இழப்பாய்..!

Family Money Quote in Tamil

பணத்தால் கிடைக்கும் புகழ் நம்மிடம் பணம் இருக்கும் வரை மட்டுமே நிலைக்கும். குணத்தால் கிடைக்கும் புகழ் இறந்த பின்பும் நிலைக்கும்...!

நீ உறங்கிக் கொண்டு இருந்தாலும் உனக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பை நீ ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் சாகும் வரை நீ உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்..

பார்வைகளின் பரிமாற்றம் பாசங்களின் இடமாற்றம் அத்தனையும் இன்று பணம் என்ற உறவு பரிமாறும் வரை மட்டுமே..

Family Money Quote in Tamil

  • பாசத்தின் மதிப்பைக் கூட தற்போது பணம்தான் நிர்ணயம் செய்கிறது...
  • காலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் "பணம் இருந்தால் நாலுபேர் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். பணம் இல்லை என்றால் நாம் நாலுபேரை திரும்பி பார்க்கணும்
  • பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல. ஆனால், பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை அடிப்படையாக வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை ..

Family Money Quote in Tamil

  • கடன் கொடுத்துப்பார். நீ எந்தளவுக்கு முட்டாள் என்று ஊருக்கே தெரியும்...! கடன் கேட்டுப்பார் ஊரில் உள்ளவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று உனக்கே தெரியும்..!
  • வரவுக்கு மீறிய செலவு செய்யக்கூடாது , தேவை அற்ற செலவுகளை தவிர்க்கனும், முதலீடுகளை பல மடங்குகள் பெருகும் இடத்தில் முதலீடு செய்யனும் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிக சேமிப்ப ஏற்படுத்தி கொடுக்கும்.
  • பணமா பாசமான்னு கேட்டா எல்லோரும் பாசமுன்னு சொல்வாங்க..... ஆனால்... அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்....!
  • கடல் அளவு பணம் இருந்தாலும், ஒரு துளி அளவு செலவு செய்! தேவைக்கேற்ப செலவு செய்.. வேண்டாம் ஆடம்பர செலவு.. சிக்கனமாக வாழ்ந்தால் வாழ்க்கை என்றும் சிறப்பு..

Family Money Quote in Tamil

  • ஒரு பெண்ணும், பணமும் நினைத்தால், எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலையச் செய்யும்..
  • பணம் உள்ள வரை மட்டுமே பாசம், சொத்து உள்ள வரை மட்டுமே சொந்தம், பதவி உள்ள வரை மட்டுமே பந்தம்... உண்மையான அன்பை உறவுகள் மதிப்பதில்லை..
  • வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை. நம் குணத்தில் தான் உள்ளது. பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்..

Family Money Quote in Tamil

பணம் சில உறவுகளை புதுப்பிக்கின்றது, பல உறவுகளை புறக்கணிக்கின்றன..

  • பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்ப்பதை விட, செலவுகளைக் குறைத்தாலே போதுமானது.
  • பணம் சம்பாதிப்பது, குண்டூசியால் பள்ளம் தூண்டுவது போல. ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல.
  • சாதி மனிதம் பார்க்காது. பணம் சாதி,மனிதம் இரண்டையும் பார்க்காது..
  • பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும்..பணம் இல்லை என்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்..

Family Money Quote in Tamil

  • பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
  • பல ஆறாத காயங்களுக்கு காரணங்கள்.... சில பணங்களும்.... சில மனங்களும் தான்....
  • எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் "நீ நல்லா இருப்ப" என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது.!
  • ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக வேலை செய்ய வைக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!