எதிர்பார்ப்புகளால் ஏற்படும் இழப்புகளே வலிமிகுந்தது..!வேணாம்..வேணாம்..போ..!

X
By - K.Madhavan, Chief Editor |26 Sept 2022 3:36 PM IST
Expectation Kills Quotes in Tamil-ஒரு மனிதன் தோல்வியில் வீழும்போது தாங்கிப்பிடிக்க உறவுகள் அவசியம். அந்த உறவுகளும் கைவிட்ட நிலையில்தான் மனம் வேதனையில் துடிக்கும்.
Expectation Kills Quotes in Tamil-இழப்புகள் என்பது வெறும் பொருட்களால் மட்டுமே ஏற்பட்டுவிடுவதில்லை. உறவுகள் விட்டுப்போவதிலும் ஏற்படும். பொருளிழப்பு மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், உறவுகள் விட்டுச் செல்வது, பிரிந்து செல்வது ஆறாத வடுவாக மனதுக்குள் பதிந்துபோகும். இன்னும் தான் காதலித்த பெண், அல்லது ஆண் தன்னைவிட்டுச் பிரிந்தால் அந்த வேதனைக்கு அளவில்லை. ஏமாற்றத்தின் ஏக்கம் உயிருக்குள் கவ்விக்கிடக்கும். இந்த உலகமே இருண்டுபோனதாக தோற்றம் தரும்.வாழ்க்கையே தொலைந்து போனதாக தெரியும். உள்ளம் விம்மி அழும்.
- எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள். ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
- எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்று. பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோசத்தை தராது.
- எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும். அது உண்மை அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. ஆனால்
- யாரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்கிறேன். ஏமாற்றங்களை சந்தித்த பின்.
- எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட எதிர்பார்க்காமல் இருப்பதே நல்லது.
- உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்போது நீங்கள் ஏமாற்றத்திற்கு உங்களை அமைத்துக் கொள்கிறீர்கள்.
- மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் குறிப்பாக எதிர்மறையானவை நீங்கள் ஒருபோதும் முடிவை மாற்ற மாட்டீர்கள்.
- மற்றவர்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைக்க முடியாது.
- ஒருவரின் எதிர்பார்ப்புகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்போது ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் உண்மையிலேயே பாராட்டுகிறார்.
- உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்.இது சொர்க்கம் அல்ல எனவே, இது இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
- வார்த்தைகளை விட.. உதாசீனங்கள் சற்று அதிகமாவே காயப்படுத்தும்.
- மனது காயப்பட்டால் பிடித்தவர்களிடம் ஆறுதல் தேடலாம். ஆனால் பிடித்தவர்களே காயப்படுத்தினால் யாரிடம் ஆறுதல் தேடுவது..
- பொய்யாக நடிக்க தெரியாதவர்கள் தான் கண்ணீரையும் கோபத்தையும் முதலில் வெளிப்படுத்துவார்கள்..
- வெளிப்படையாக சிரித்து பேசுபவர்களுக்கு தான் மனதில் வெளிக்காட்ட முடியாத பல வேதனைகள் மறைந்திருக்கும்..
- வெறுக்கும் வாழ்க்கையை விரும்ப வைப்பது தனிமை தரும் பலமே..
- யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே..
- இருக்கும் போது அன்பாய் நாலு வார்த்தை பேசாதவர்கள்... இறந்த பின்பு அழுவதற்கு தகுதி இல்லாதவர்கள்..
- இழந்தவை என்பது பலருக்கு வார்த்தை சிலருக்கு வாழ்க்கை..
- காணும் கனவில் கூட கவலையோடு தான் திரிகிறேன்.. வாழ்க்கை எனக்கு தந்த வலியும் வேதனையும்.. இன்னும் கொஞ்சம் கூட குறையாததால்..
- புரிந்து கொண்டு நடப்பவர்கள் இங்கு யாருமில்லை.... புரிந்து கொள்ளச் சொல்லி நடப்பவர்களே இங்கு ஏராளம்..
- விலைமதிக்க முடியாத அன்பு நம்மிடத்தில் ஏராளமாக இருந்தாலும் பிச்சை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம் நமக்கு பிடித்தவர்களிடம்..
- மனதின் வலியோடு கண்ணை மூடுகிறேன்.. கடவுளே.. வலியில்லாமல் மரணம் தந்துவிடு என்று..
- பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எதையும் பிடித்து வைத்து கொள்ளாதீர்கள்...
- மரம் பட்டுப் போனால் பறவைகள் வருவதில்லை.. வாழ்ந்தவன் கெட்டுபோனால் உறவுகள் மதிப்பதில்லை...
- அதிக வலிகளை தாங்கும் இதயம் ஒரு நாள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் துடிப்பை நிறுத்தி விடும்.. யாரிடமும் சொல்லாமல்..
- என் ஆசையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நான் நானாக இருந்த அழகிய நாட்களை மீட்டு வர வேண்டும் என்பதே..
- எதையும் பொறுத்து கொள்ளும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம்... எதிர்த்து கேள்வி கேட்கும் போது 'கெட்டவர்கள்'ஆகி விடுகிறோம்....
- மனம் வெறுத்து விட்டேன் மரணம் வந்தாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுவேன்..
- தவிக்கும் போது துடுப்பை அனுப்பாதவர்கள், கரை சேர்ந்த பிறகு கப்பலை அனுப்பி என்ன பயன்...?
- உன் துன்பத்தில் துணை நிற்காத எந்த ஒரு உறவும் இன்பத்தில் இணைய தேவையில்லை..
- காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல அப்படி சிரிக்க பழகிக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல...
- உயிரே நிரந்தரம் இல்லாத போது.. சில உறவுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைப்பது நம் தவறு...
- வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கனும்.. யாரையும் நம்பித்தான் இருக்கக்கூடாது..
- இரவு முழுவதும் கண்விழித்து பேசிய நாள் சென்று.. இரவு வந்தாலே கண்ணீர் சிந்தும் நாள் வந்தது.. பேசிய உறவுகள் பேசாமல் போனதால்...
- உன்னை கொல்லும் ஓர் ஆயுதம் உன் கோபம்.. உலகையே வெல்லும் ஓர் ஆயுதம் ஆயுதம் உன் மௌனம்...
- மாய உலகை கண்டு மயங்காதே மனமே... தேவைக்கு மட்டும் பழகும் உலகம் தேவை முடிந்த பின் பரிசாக வலியை கொடுத்து விலகும்..
- வெளியே உறுதியாகத் தெரிகிறேன், உள்ளே சிதைந்து போய் இருப்பது யாருக்கும் தெரியாது....
- வருந்தி அழும்போது வாராத...தெய்வமும்... தேம்பி அழும்போது வாராத....அன்பும்... கல்லுக்கு சமம்...
- சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா என்று..
- விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்.. விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்.. இவை தான் மனிதனின் எண்ணங்கள்..
- தவறு செய்பவர்களைத் திருத்தி விடலாம்..! ஆனால்.. அதை நியாயப்படுத்துபவர்களை ஒருபோதும் திருத்த முடியாது..!
- நம் வாழ்க்கையில் காணாமல் போனவர்களை தேடலாம்.. ஆனால் கண்டுகொள்ளாமல் போனவர்களை தேடவே கூடாது..
- விவாதம் செய்வதை விட விலகி செல்வதே மேல்... புரியாத உறவுகளுக்கு மத்தியில்..!
- எதிலும் அளவோடு இருந்தால் அவதிப்படவும் தேவையில்லை.. அவமானப்படவும் தேவையில்லை..
- தேவையற்ற விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தால், தேவையான விஷயங்களை யோசிக்க நேரம் இருக்காது..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Expectation Quotes Tamil
- Expectation Kills Quotes in Tamil
- No Expectations Quotes in Tamil
- expectation leads to disappointment meaning in tamil
- expectation kills meaning in tamil
- hurt meaning tamil
- ethirparpu meaning in tamil
- no more expectations meaning in tamil
- it hurts meaning in tamil
- hurt in tamil meaning
- i hurt you meaning in tamil
- hurt you meaning in tamil
- you hurt me meaning in tamil
- never expect anything from anyone meaning in tamil
- expectation hurts the most
- expectations hurt the most
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu