Erotic Meaning in Tamil-சிற்றின்பம் என்பது என்ன?

Erotic Meaning in Tamil-சிற்றின்பம் என்பது என்ன?
X

erotic meaning in tamil-சிற்றின்பம் என்பதற்கான பொருள் (கோப்பு படம்)

சிறுமை இன்பம் என்பதே சிற்றின்பம் என திரிபு பெறுகிறது. சிறிய அல்லது குறைந்த நேரத்து இன்பம் என்றும் பொருள் கொள்ளலாம்.

Erotic Meaning in Tamil

ஆங்கிலத்தில் எரோடிக் (Erotic) என்று கூறப்படும் சொல்லுக்கு தமிழில் சிற்றின்பம் என்பது பொருள். தமிழில் அதை குறிப்பாக ஆண் பெண் புணர்ச்சி குறித்து விளக்குவதாக பொருள்கொள்ளப்படுகிறது.

நாக்கின் உணவுச்சுவையால் இன்பம், கண்களால் மனதிற்கு பிடித்த காட்சிகளைக் காணுவதால் இன்பம், காதுகளின் துள்ளவைக்கும் மனம் கவர்ந்த இசையைக் கேட்பதால் இன்பம், பிடித்தமானவர்களைத் தொட்டு குதூகலிப்பதால் ஏற்படும் இன்பம், மற்ற இயற்கையான உணர்ச்சிகளால் இன்பம் இதில் எல்லாவற்றிற்கும் மேலாக புணர்ச்சியில் உண்டாகும் இன்பம் என்பது சிற்றின்பம் எனப்படுகிறது.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்

என்று வள்ளுவர் உரைக்கிறார்.

அதன் பொருள்

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார் என்பதாகும்.

சிற்றின்பம் என்பது குறிப்பாக புலனுணர்ச்சிகளில் அதிலும் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம் அல்லது மகிழ்ச்சியைக் குறிக்கும்.

Erotic Meaning in Tamil

இங்கே நாம் சிற்றின்பம் பேரின்பம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.

படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.

படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.

படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.

இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.

நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

Erotic Meaning in Tamil

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.

அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.

செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.

செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.

அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

Erotic Meaning in Tamil

இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.

வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.

நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.

உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.

துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.

எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

Erotic Meaning in Tamil

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.

மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.

பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.

எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.

தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.

அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.

அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.

அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

Erotic Meaning in Tamil

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.

பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.

முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.

கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.

உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.

புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.

Erotic Meaning in Tamil

மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.

மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.

மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.

எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.

மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.

அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.

அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.

ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.

துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

Erotic Meaning in Tamil

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.

இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.

இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.

தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.

இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.

ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.

கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.

சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.

பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.

மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.

நிரந்தரமானது பேரின்பம்.

Tags

Next Story