காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல... மனிதன் நடக்கவும் அது முக்கியம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
காதுகள் தான் மனிதன் நிலையாக நிற்க காரணமாக இருக்கிறது ( கோப்பு படம்)
காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.
உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான். மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது. ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?
பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.
ஒரு டெட்பாடியை நிற்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது. காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.
10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும். முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்கும் திறன் குறைந்து விடும். காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது. மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?
அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும். அவ்வளவு வலியுடனானதாக இருக்கும். அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu